கேடிஎம் டியூக் பைக்கை அப்பட்டமாக காப்பியடித்த யூ.எம் மோட்டார் சைக்கிள் நிறுவனம்

Written By:

பொதுவாக சீனாவில் உள்ள மோட்டர் சைக்கில் நிறுவனிங்கள் மற்ற மாடல் வண்டிகளின் டிசைன்களை காப்பிடிப்பதில் வல்லவர்கள். ஆட்டோ மொபைல் மார்க்கெட்டில் ஹிட் ஆகும் அனைத்து மாடல் பைக்குகளையும் காப்பியடித்து வருகின்றனர்.

கே.டி.எம். டியூக் பைக்கை அப்பட்டமாக காப்பியடித்த யூ.எம் மோட்டார் சைக்கிள் நிறுவனம்

சில ஆண்டுகளுக்கு முன்னாள் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக் மாடலை காப்பியடித்து கல்சர் என்ற பெயரில் வெளியிட்டனர். இது இனணயதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

கே.டி.எம். டியூக் பைக்கை அப்பட்டமாக காப்பியடித்த யூ.எம் மோட்டார் சைக்கிள் நிறுவனம்

இந்நிலையில் அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் யூ.எம். மோட்டர் சைக்கிள் என்ற நிறுவனம் சமீபத்தில் இதேபோன்ற ஒரு வேலையை செய்துள்ளது.

கே.டி.எம். டியூக் பைக்கை அப்பட்டமாக காப்பியடித்த யூ.எம் மோட்டார் சைக்கிள் நிறுவனம்

அந்நிறுவனம் தனது எக்ஸ்டிரீட் 250 எக்ஸ் என்ற பைக்கின் 2018ம் ஆண்டிற்கான வேரியண்டை கே.டி.எம். நிறுவனத்தின் டியூக் பைக்கின் டிசைனை காப்பியடித்துள்ளது.

கே.டி.எம். டியூக் பைக்கை அப்பட்டமாக காப்பியடித்த யூ.எம் மோட்டார் சைக்கிள் நிறுவனம்

டியூக் பைக்கின் டிசைன், இரண்டை சீட், ஏன் அந்த பைக்கின் நிறத்தில் இருந்து ஹெட்லைட்டில் இருந்து பின் பக்க லைட் வரை அனைத்தையும் காப்பியடித்துள்ளனர். மேலும் அந்த நிறுவனம் இந்த மோட்டார் சைக்கிள் தான் மக்களை அதிக அளவில் ஈர்க்கும் என தங்களது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

கே.டி.எம். டியூக் பைக்கை அப்பட்டமாக காப்பியடித்த யூ.எம் மோட்டார் சைக்கிள் நிறுவனம்

ஆனால் இந்த பைக்கில் உள்ள இன்ஜின் மற்றும் இதர விபரங்கள் குறித்து அவர்கள் குறிப்பிடவில்லை. எனினும் பழைய மாடல் எக்ஸ்டிரீட்டை விட 35 சதவீதம் அதிக வேகமாகவும், 15 சதவீதம் அதிக எரிபொருள் சேமிப்பையும் கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

கே.டி.எம். டியூக் பைக்கை அப்பட்டமாக காப்பியடித்த யூ.எம் மோட்டார் சைக்கிள் நிறுவனம்

கருப்பு மற்றும் வெள்ளை நிற வேரியண்ட்களில் இவை வெளியாகியுள்ளன. இவை இரண்டிலும் ஆரஞ்சு நிற கோட்டிங் இருக்கிறது. ஆனால் வெப்சைட்டில் உள்ள படத்தில் பச்சை நிறத்தில் ஒரு பைக்கின் புகைப்படம் இருக்கிறது. ஆனால் அது குறித்த தகவல் அதில் இல்லை.

கே.டி.எம். டியூக் பைக்கை அப்பட்டமாக காப்பியடித்த யூ.எம் மோட்டார் சைக்கிள் நிறுவனம்

யூ.எம். மோட்டார் சைக்கிள் நிறுவனம் தான் சீன நிறுவனம் இல்லை அமெரிக்க நிறுவனம் தான் என இதற்கு முன்னாள் செய்த விளம்பரங்களில் வெளிப்படுத்தி கொண்டே இருக்கிறது. அதன் விளம்பரங்களில் அமெரிக்க கொடி, "USA ORGINATED" என்ற டேக் லைனையும் பயன்படுத்தி வருகிறது.

கே.டி.எம். டியூக் பைக்கை அப்பட்டமாக காப்பியடித்த யூ.எம் மோட்டார் சைக்கிள் நிறுவனம்

மேலும் இந்நிறுவனம் உலகின் முதல் ரிவர்ஸ் கியர் உள்ள தோர் என்ற எலெட்ரிக் பைக்கை தயார் செய்த பெருமையும் இந்நிறுவனத்திற்கு இருக்கிறது.

கே.டி.எம். டியூக் பைக்கை அப்பட்டமாக காப்பியடித்த யூ.எம் மோட்டார் சைக்கிள் நிறுவனம்

இந்தியாவை பொருத்தவரையில் இந்நிறுவனம் ரெனகேட் என்ற பைக்கை அதிக அளவு விற்பனை செய்து வருகிறது. ஆனால் டியூக் மாடலை காப்பிடித்த இந்த பைக் இந்தியாவில் விற்பனையாகுமா என்பதை பொருத்திருந்தான் பார்க்க வேண்டும்.

கே.டி.எம். டியூக் பைக்கை அப்பட்டமாக காப்பியடித்த யூ.எம் மோட்டார் சைக்கிள் நிறுவனம்

எனினும் இதற்கு கே.டி.எம். நிறுவனம் என்ன பதிலடி கொடுக்க போகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

01."001" என்ற பைக் நம்பர் பிளேட் ரூ50,000

02.உங்கள் பைக்கில் நல்ல மைலேஜ் கிடைக்க சில டிப்ஸ்கள்

03.பயன்படுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

04.உலகின் முதல் ஏர்பேக் உடன் கூடிய குழந்தைகளுக்கான சீட் அறிமுகம்

05.ஓராண்டில் 10,000 எலெக்ட்ரிக் கார்களை சேவைக்கு கொண்டு வர ஓலா திட்டம்

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
UM Motorcycles Blatantly Copy KTM Duke’s Design. Read in Tamil
Story first published: Tuesday, April 17, 2018, 18:42 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark