இந்தியர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கணும்! ஐநா எடுக்கும் அதிரடி ஆக்ஷன்! டூவீலர் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை!
இந்திய அரசும் ஐநா சபையின் ஒன்றிணைந்து இந்தியாவில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பிரச்சாரங்களை மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்து வருகின்றன. ஐநா சபை இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வுகளை செய்து வரும் நிலையில், இந்தியாவிலும் முக்கியமாக இந்த பிரச்சாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
உலகம் முழுவதும் சாலை விபத்தில் ஏற்படும் மரணங்களை குறைப்பதற்கான பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமாக டூவீலர் டூவீலரில் பயணம் செய்பவர்கள் விபத்தில் சிக்கினால் அவர்களுக்கு அதிக காயம் ஏற்பட்டு விபத்து ஏற்படுகிறது. அதை குறைப்பதற்காக அனைத்து நாடுகளும் முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில் ஐநா சபையின் செக்ரெட்டரி ஜெனரலான ஜீன் டோல் மற்றும் டூவீலர்களுக்கான ஹெல்மெட்டுகளை தயாரிக்கும் நிறுவனங்களின் சங்க தலைவரும் ஸ்டீல்பேர்டு ஹெல்மெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான ராஜீவ் கபூர் ஆகியோர் இணைந்து உலகில் பல்வேறு இடங்களில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வுகளை பிரச்சாரமாக மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறார்கள். இந்த பிரச்சாரத்திற்கு ஹெல்மெட் ஃபார் ஹோப் என பெயர் வைத்துள்ளார்கள்.
இது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வரிசையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது நல்ல ரிசல்ட்களையும் கொடுத்துள்ளது. உலகம் முழுவதும் டூவீலர் மற்றும் சைக்கிள்களில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சாலையில் பாதுகாப்பும் விபத்து ஏற்படும் போது மரணம் மற்றும் காயங்கள் ஏற்படுவது குறையும் என்ற அறிவுறுத்தலையும் இந்த பிரச்சாரத்தில் மேற்கொண்டு வருகிறார்கள்.

கடந்த 2023ம் ஆண்டு துவங்கிய இந்த பிரச்சாரம் 80 நாடுகளில் 1000 நகரங்களில் நடத்த திட்டமிட்டு வருகிறது. இந்த பிரச்சாரத்தில் பல்வேறு விதமான ஊடகம் வழியாக பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு வருகிறது. விளம்பர பதாகைகள் போக்குவரத்து வாகனங்களில் பிரச்சாரம் ஊடகங்கள் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு வருகிறது.
ஒவ்வொரு நாட்டிலும் இந்த குழுவினர் பிரச்சாரம் செய்யும் போது அந்த நாட்டில் உள்ள பிரபலங்களை வைத்தும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இதன் மூலம் மக்களை எளிதாக சென்றடைய முடியும் என்பதால் இந்த பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். இது மட்டுமல்லாமல் இது குழுவினர் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசு சாராத லாப நோக்கமற்ற அமைப்புகளுடன் இணைந்து ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்து பல்வேறு விதமான பிரச்சாரங்களையும் முன்னெடுப்புகளையும் செய்து வருகின்றனர்.

இதற்காக இந்த குழுவினர் பல்வேறு கார்ப்பரேட் அமைப்புகளுடன் சேர்ந்து 40க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஹெல்மெட்டுகளை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார்கள். காங்கோ, எகிப்து, காணா, கென்யா, மடகாஸ்கர், நைஜீரியா, தென்னாபிரிக்கா, உகாண்டா, வியட்நாம் போன்ற நாடுகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவிலும் மத்திய அரசுடன் இணைந்து இந்த குழுவினர் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறார்கள். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
இந்தியா போன்ற நாடுகளில் உள்ள கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி சட்டங்கள் இது போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு பெரும் உதவியாக இருக்கின்றன. இதை பயன்படுத்தி அமேசான், ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள் டூவீலர் மூலம் டெலிவரி பிசினஸை செய்து வருவதால் அந்த டூவீலர்களை ஒட்டும் வாகன ஓட்டிகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறைகளை அமல்படுத்த முயற்சி செய்து வருகிறது.
ஒரு நல்ல தரமான ஹெல்மெட்டை ஐந்து செல்வதன் மூலம், டூவீலர் வாகன ஓட்டி ஆறு மடங்கு விபத்தில் உயிரிழக்கும் வாய்ப்பை குறைக்கிறது எனவும், அவர் மூளைக்கு காயம் ஏற்படுவது 74 சதவீதம் வரை குறையும் எனவும், ஒரு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் டூவீலர் விபத்துகளில் தலையில் ஏற்படும் காயம் தான் மரணத்திற்கு மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள 174 நாடுகளில், 54 நாடுகளில் மட்டுமே ஹெல்மெட் கட்டாயம் என்ற சட்டம் அமலில் இருக்கிறது. இந்த சட்டம் அமலில் இருக்கும் நாடுகளில் கூட 47 சதவீதமான மக்கள் சரிவர ஹெல்மெட்டை பயன்படுத்துவதில்லை என ஒரு ஆய்வு அறிக்கையை சொல்கிறது. இந்த கணக்கீடுகளை எல்லாம் வைத்து தான் ஐநா சபை ஹெல்மெட் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா போன்ற நாடுகளில் டூ-வீலர் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இங்கு ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வுகள் அதிகம் இருக்க வேண்டும் சென்னை போன்ற பெருநகரங்களில் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்யும் வாகன ஓட்டிகளை அதிகம் காண முடியும். ஆனால் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் இது குறித்த விழிப்புணர்வு பெரிய அளவில் இல்லை. மக்கள் மத்தியில் இந்த விழிப்புணர்வு தேவை. அதற்காக அரசு எடுக்கும் இந்த முன்னெடுப்புகளை நிச்சயம் வரவேற்கலாம்.


Click it and Unblock the Notifications









