“நாங்க 4 பேரு, எங்களுக்கு பயமே கிடையாது” - இவ்வளவு சின்ன வயசுல இந்த வேலைலாம் தேவையா... வைரல் வீடியோ!!
இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறுவதற்கு காரணங்களுள் ஒன்றாக குறை வயதுடையோர் வாகனம் ஓட்டுவதை சொல்லலாம். இந்த நிலையில், வட இந்தியாவில் நெடுஞ்சாலை ஒன்றில் சிறுவர்கள் சிலர் மினி ஜீப் வாகனத்தை ஓட்டி அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளனர். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் அண்டர் ஏஜ் டிரைவிங், அதாவது 18 வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்டுவது பரவலாக எல்லா இடங்களிலும் உள்ளது. குறிப்பாக, கட்டுப்பாடுகள் தளர்வாக இருக்கும் கிராமப்புறங்களில் இத்தகைய டிரைவிங்குகளை அதிகமாக காண முடியும். நல்லவேளையாக, தற்போதைக்கு 18 வயது நிரம்பாதோர்கள் ஓட்ட விரும்புவது மோட்டார்சைக்கிளாகவே உள்ளது, அமெரிக்க நாடுகளை போல் சிறு வயதிலேயே கார் ஓட்டும் ஆசை நம் இளைஞர்களிடையே அதிகளவில் ஏற்படுவதில்லை.

இப்படிப்பட்ட சூழல் நம் நாட்டில் உள்ளதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், நெடுஞ்சாலையில் 10 வயது கூட சிறுவர்கள் நான்கு பேர் மினி ஜீப்பை ஓட்டி, மற்ற வாகன ஓட்டிகளை பயத்திற்கு உள்ளாக்கி உள்ளனர். மேலும், இதுதொடர்பான காட்சிகள் இணையத்திலும் பலரது கவனத்தை பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில், சிறுவர்கள் ஓட்டியது எலக்ட்ரிக்கில் இயங்கக்கூடிய மினி ஜீப் வாகனம் என கூறப்படுகிறது.
ஜீப் வாகனம் என அடையாளத்திற்காகவே நாங்கள் கூறுகிறோம். மற்றப்படி, இந்த மினி வாகனத்தை ஜீப் நிறுவனம் ஒன்றும் உருவாக்கவில்லை, தனிநபர் உருவாக்கியது போன்று உள்ளது. உண்மையில், இவ்வாறான மினி வாகனங்களை உருவாக்குவது கிட்டத்தட்ட சட்டப்படி குற்றம் போன்றதுதான். ஏனெனில், இந்த வாகனத்தின் மூலமாகவும் விபத்தை உருவாக்க முடியும் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுப்பட முடியும்.
இந்த வாகனத்தினுள் பெரியவர்களால் சவுகரியமாக அமர்ந்து பயணிக்க முடியாது. ஆதலால், சிறுவர், சிறுமியர்களால் மட்டுமே இந்த வாகனத்தை பயன்படுத்த முடியும். ஆனால், 18 வயது நிரம்பாதவர்களுக்கு 2-வீலர் லைசன்ஸ் கூட கொடுக்கக் கூடாது என சட்டம் சொல்கிறது. ஆக, இத்தகைய வாகனங்களை உருவாக்குவது முற்றிலுமாக அர்த்தம் அற்றது.
அதுமட்டுமின்றி, இந்த மினி ஜீப் வாகனம் முற்றிலுமாக மேற்கூரை இல்லாமல் உள்ளது மற்றும் இந்த 4 சிறுவர்களும் பயணத்தின் போது சீட் பெல்ட் கூட அணிந்திருக்கவில்லை. வாகனத்தின் பின்னால் சிறுவர் ஒருவர் நின்றுக் கொண்டு பயணம் செய்வதை வீடியோவில் காணலாம். ஆதலால், எதிர்பாராத விதமாக விபத்து ஏதேனும் ஏற்பட நேர்ந்தால், வாகனத்தில் இருந்து இந்த 4 சிறுவர்களும் தூக்கி எறியப்படுவதற்கு கூட வாய்ப்புள்ளது.

இந்த வீடியோவை எடுத்த போது, சாலையில் நிறைய எண்ணிக்கையில் வாகனங்கள் செல்வதையும் காண முடிகிறது. இவ்வாறான மினி வாகனங்களை ஓட்டுவதற்கு லைசன்ஸ் தேவையில்லை. ஆனால், இவ்வாறான வாகனங்களை மூடிய பகுதிக்குள் மட்டும் தான் ஓட்ட வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் இந்தியாவில் நடைபெறுவது ஒன்றும் இது முதல்முறை அல்ல.
இன்னும் சொல்லப்போனால், தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் மினி ஜீப்பை ஓட்டும் சிறுவர் இதேபோன்று பல்வேறு மினியேச்சர் வாகனங்களை ஓட்டும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிறக்கி உள்ளார். அதில் ஒரு வீடியோவில், பொது சாலையில் நீல நிறத்திலான மோட்டோகிராஸ்-ஸ்டைல் பைக்கில் அந்த சிறுவர் செல்லும் காட்சிகளை காண முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிச்சயமாக 4 சிறுவர்கள் இணைந்து இவ்வாறு ஒரு வாகனத்தை உருவாக்கி, அதனை சாலையில் ஓட்ட வாய்ப்பே இல்லை. இந்த செயலுக்கு பின்னால் யாரோ ஒருவர் இருக்கிறார். இந்த 4 சிறுவர்களில் ஒருவரது தந்தையாக அவர் இருக்கலாம். இவ்வாறான செயல்கள் முற்றிலுமாக தவறு என்பதை அனைவரும் உணர வேண்டும். ஆனால், இந்த இன்ஸ்டாகிராம் வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ளவர்களில் பெரும்பாலானோர், சிறுவர்களின் இந்த செயலை வீர தீர செயல்களாகவே பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








