சின்ன பசங்க வாகனம் ஓட்டினால்... பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை!! தமிழ்நாட்டுக்கும் இப்படியொரு சட்டம் தாங்க தேவை

போதிய வயதை எட்டாதவர்களும் வாகனங்கள் ஓட்டுவதை நம் இந்திய சாலைகளில் தினந்தோறும் பரவலாக பார்க்க முடிகிறது. அதாவது நம் நாட்டு சாலைகளில் உள்ள ஆபத்துகளுள் இதுவும் ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். இதன் விளைவாக, சில பல நேரங்களில் விபத்துகளும் நடந்துள்ளன.

போதிய வயதை எட்டாதவர்கள் வாகனங்களை ஓட்ட அனுமதிக்க கூடாது என்பதற்காக போக்குவரத்து விதிமுறைகளில் இது தொடர்பான சட்டங்கள் உள்ளன. இருப்பினும், அந்த சட்டங்களை முறையாக பின்பற்றுவர்கள் என்று பார்த்தால் மிகவும் சிலரே. குறிப்பாக, கிராமப்புற பகுதிகளிலும், குறு நகரங்களிலும் அண்டர் ஏஜ் டிரைவிங்கை சர்வ சாதாரணமாக சாலைகளில் பார்க்க முடியும். சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு அத்தகைய இடங்களில் மக்களிடத்தில் போதிய அளவில் இல்லை.

சின்ன பசங்க வாகனம் ஓட்டினால்... பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை!!

அதுமட்டுமின்றி, போக்குவரத்துகளும் அத்தகைய பகுதிகளில் போலீஸாரால் தீவிரமாக கண்காணிக்கப்படுவதில்லை என்பதும் உண்மையே. அண்டர் ஏஜ் டிரைவிங் ஒருநாள் பெரிய பிரச்சனையாக வந்து நிற்கும் என்று பலரால் கணிக்கப்பட்டு வந்த நிலையில், அத்தகைய சூழல் தற்போது புதுச்சேரி மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் சமீபத்தில் போதிய வயதை எட்டாத ஒரு சிறுவன் மோட்டார் வாகனத்தை ஓட்டும்போது போலீஸாரிடம் சிக்கியுள்ளான்.

இந்த சம்பவம் புதுச்சேரி போக்குவரத்து போலீஸார் இடையே மிகுந்த விவாதத்திற்கு உள்ளானது. அதனை தொடர்ந்து, தற்போது இத்தகைய குற்றத்திற்கான தண்டனை விபரங்கள் புதுச்சேரி போலீஸாரால் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, புதுச்சேரியில் இனி போதிய வயது எட்டாதவர்கள் மோட்டார் வாகனத்தை ஓட்டி சிக்கினால், அவர்களது பெற்றோருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்ன பசங்க வாகனம் ஓட்டினால்... பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை!!

சமீபத்தில் போக்குவரத்து போலீஸாரிடம் சிக்கிய சிறுவனின் பெற்றோரிடம் இருந்து இந்த அதிரடியான தண்டனைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த குறிப்பிட்ட சிறுவன் எங்கு, எத்தனை மணிக்கு போலீஸாரிடம் சிக்கினான்? இவ்வாறு அதிரடியான தண்டனைகள் விதிக்கப்படும் அளவிற்கு அவன் வேறு ஏதேனும் குற்றங்களை செய்தானா? என்பது குறித்த முழுமையான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அவனது பெற்றோர் 3 ஆண்டு சிறை தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர் என்பது மட்டுமே தற்போதைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மைனர் டிரைவிங் உண்மையில் கட்டாயம் தடுக்கப்பட வேண்டிய குற்றமாகும். ஏனெனில் ஒரு வாகன தயாரிப்பு நிறுவனம் ஆனது தனது வாகனங்களை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்றவாறே வடிவமைக்கிறது. கமர்ஷியல் வாகனங்கள் 21 வயதுக்கு மேல். அப்படியிருக்கையில், போதிய வயது எட்டாதவர் அந்த வாகனத்தை ஓட்டுவதுபோது அவருக்கு பல வழிகளில் அசவுகரியங்களை ஏற்படலாம். அந்த அசவுகரியங்களும், இயலாமையும் விபத்துகளில் சென்று முடிவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

சின்ன பசங்க வாகனம் ஓட்டினால்... பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை!!

இதனாலேயே அத்தகைய விபத்துகளை தடுக்க இவ்வாறான கடுமையான நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி, அண்டர் ஏஜ் டிரைவிங்கில் விபத்து நடந்தால், அதற்கு இன்ஸ்சூரன்ஸை க்ளைம் செய்யவும் முடியாது. இன்ஸ்சூரன்ஸ் தொகையை பெறா முடியாதது ஒரு பக்கம் என்றால், இளம் வயதிலேயே ஒரு சிறுவன்/ சிறுமியரின் வாழ்க்கை பறிப்போகுவதற்கு வாய்ப்புள்ளதை நாம் கருத்தில் கொண்டே ஆக வேண்டும்.

ஏனெனில் நம் இந்திய சாலைகளை பொறுத்தவரையில் எது எப்போது வேண்டுமாயினும் நடக்கலாம். திடீரென நாய், மாடு உள்ளிட்டவை குறுக்கே வரலாம். திருப்பங்களில் எதிர்பாராத குழிகள் சாலைகளில் இருக்கலாம். பல வருடங்களாக வாகனங்களை ஓட்டும் நன்கு முதிர்ந்த வாகன ஓட்டிக்கே இவற்றை எல்லாம் சமாளித்து கொண்டு வாகனம் ஓட்டும்போது சில சமயங்களில் தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன. 18 வயதுக்கு கீழ் உள்ள உங்களது மகன்/ மகளுக்கு வாகனம் ஓட்ட கற்றுத்தர விரும்புகிறீர்கள் என்றால், மூடிய பகுதிக்குள் அல்லது ரேஸ் டிராக்குகளில் கற்று தருவது நல்லது.

Note: Images are representative purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Underage drivers parents will be jailed 3 years levied fine of rs 25000 new rule in puducherry
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X