விமானங்களுக்கு பின்னால் வெள்ளை நிற புகை வருவதை பார்த்துள்ளீர்களா? அதற்கு காரணம் இதான்!

விமானங்கள் பறக்கும்போது, ​​​​அவை சில நேரங்களில் வெள்ளை நிற புகைப்போன்ற ஏதோ கோடு போன்ற ஒரு விஷயத்தை விட்டுச் செல்கின்றன. இவை புகை என்று பலர் தவறாக நம்புகிறார்கள், ஆனால் அது புகை இல்லை. இந்த வெள்ளைக் கோடுகளுக்குப் பின்னால் உள்ள அறிவியல் உண்மை என்ன? இது ஏன் ஏற்படுகிறது? இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.

உலகில் எல்லா வயதினரும் விமானங்களைக் கண்டு ஈர்க்கப்படுகிறார்கள்.. குறிப்பாக குழந்தைகள் வானத்தில் பறக்கும் விமானங்களைப் பார்த்து உற்சாகமடைகிறார்கள். ஆனால் சில விமானங்களுக்குப் பின்னால் வரும் அந்த வெள்ளைச் கோடுகளுக்கு என்ன காரணம் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது நமக்கு ஆச்சரியமான விஷயமாக இருக்கும்.

பெரும்பாலும் இதை புகை என்று தவறாகக் நம்பியிருப்போம் இந்த வெள்ளைக் கோடுகள் உண்மையில் புகை அல்ல. ஜெட் விமானங்கள் மற்றும் பிற அதிவேக விமானங்கள் அவற்றின் இன்ஜினிலிருந்து இருந்து நீராவியை வெளியிடுகின்றன. இந்த நீராவி அதிக உயரத்தில் விமானம் பறக்கும் குளிர்ந்த காற்றில் கலக்கிறது.

அத்தகைய உயரத்தில் உள்ள குளிர்ந்த காற்று சூடான நீராவி கலக்கும்போது சிறிய பனித்துளிகளாக அந்த நீராவியை உறைய வைக்கிறது. இந்த நீர்த்துளிகளை தரையில் இருந்து நாம் பார்க்கும் வெள்ளை பாதைகளை உருவாக்குகின்றன, இதை விமானம் வெளியிடும் புகை என்று பலர் தவறாக நினைக்கிறார்கள்.

பூமியில் இருந்து ஆயிரக்கணக்கான அடி உயரத்தில், வெப்பநிலை மிகவும் குறைவாக இருக்கும். ஜெட் விமானங்கள் சூடான நீராவியை வெளியிடும்போது, ​​​​அது குளிர்ந்த சூழலில் விரைவாக உறைகிறது. இந்த உறைபனி செயல்முறையானது புகையின் தடமாகத் நம் கண்களுக்கு ஒரு போலியான தோற்றத்தை உருவாக்குகிறது.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்ரால், குளிர்ச்சியான சூழல் இல்லாவிட்டால் இந்த வெள்ளைநிற புகைப்போன்ற ஒரு விஷயம் உருவாகாது. குளிர்ந்த காற்று இல்லாததால், பனித்துளிகள் அந்த நேரத்தில் உருவாக முடியாது, இதனால் அந்த நேரத்தில் புகைபோன்ற எந்த ஒரு கோடும் விமானத்திற்கு பின்னால் ஏற்படாது.

சில நிபந்தனைகளின் கீழ் மட்டுமே இந்த வெள்ளைக் கோடுகளை நாம் ஏன் பார்க்கிறோம் என்பதை இந்த நிகழ்வு விளக்குகிறது. இது சூடான இன்ஜின் உமிழ்வுகள் மற்றும் குளிர் வளிமண்டல நிலைமைகளுக்கு இடையே மட்டுமே ஒருவாகும் ஒரு வேதியல் மாற்றத்தால் ஏற்படும் விஷயம் ஆகும். இதுவும் சிறுது நேரத்தில் உருகி காணாமல் போய்விடும்.

இது பெரும்பாலும் அதிகாலை நேரங்களில் ஏற்படும். இந்த நேரத்தில் பொதுவாக பூமியே அதிகமான குளிர்ச்சியில் இருக்கும் இதனால் அந்த நேரத்தில் விமானம் பறக்கும் போது இது போன்ற வெள்ளை நிற புகை போன்ற கோடுகள் உருவாகும். அதே நேரதம் குளிர் காலத்திலும் போதுமான வெப்பம் இல்லாததால் இது உருவாக வாய்ப்புள்ளது.

எல்லா விமானங்களிலும் இது போன்ற வெள்ளை நிற கோடுகள் உருவாக வாய்ப்பு இல்லை. விமானத்திலிருந்து வெளியேறும் நீராவியின் வெப்ப அளவு மற்றும் விமானம் பறக்கும் பகுதியில் உள்ள குளிர்நிலை ஆகியவற்றை வைத்து மட்டுமே இந்த வெள்ளை நிற புகை போன்ற அமைப்பு உருவாகும். வெப்பம் அதிகமாக இருந்தால் அது நீராவியாகவே இருக்கும் பூமிலிருந்து பார்க்கும் நம் கண்களுக்கு தெரியாது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அடுத்த முறை வானத்தில் ஒரு வெள்ளை நிற புகைய விட்டுச் செல்லும் விமானத்தைப் பார்த்தால், அது புகை அல்ல, உறைந்த நீராவிதான் அந்த புகை போன்ற வெள்ளி நிற கோடு காட்சியை உருவாக்குகிறது என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Sunday, July 14, 2024, 16:00 [IST]
English summary
Planes leave behind white trails not due to smoke, but from water vapor emitted by engines that freezes in cold high altitudes, creating visible streaks.
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+