வாழ்க்கையில ஒரு தடவையாச்சும் இந்த மெட்ரோவில் போயிடனும்! இந்தியாவின் முதல் நீருக்கடியிலான மெட்ரோ இது தான்!
இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயிலை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்துள்ளார். நாம் சாதாரணமாக பயன்படுத்தும் மெட்ரோ ரயிலுக்கும் இந்த மெட்ரோ ரயிலுக்கும் என்ன வித்தியாசம்? நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் செல்வது எந்த அளவுக்கு சாத்தியமானது? இதை எப்படி வல்லுனர்கள் உருவாக்கியுள்ளார்கள்? என்ற விரிவான விபரங்களை தான் நாம் இங்கே காணப் போகிறோம்.
இந்தியா முழுவதும் தற்போது முக்கிய நகரங்களில் உள்நகர பயன்பாட்டிற்காக மெட்ரோ ரயில் சேவை என்பது வந்துவிட்டது. சென்னை உட்பட பல்வேறு நகரங்கள் தற்போது மெட்ரோ செயல்பாட்டால் போக்குவரத்து நெருக்கடியை தவிர்த்து வருகின்றன. இந்நிலையில் கொல்கத்தாவில் முதல் முதலாக இந்தியாவின் நீருக்கடியிலான மெட்ரோ என்பது துவங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி இந்த நீருக்கடியிலான மெட்ரோ திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். இது ஹௌரா மைதானம் முதல் எக்ஸ்பிளான்டை மெட்ரோ ரயில் நிலையம் வரை நீருக்கடியில் செல்கிறது. இந்த மெட்ரோ ரயில் மொத்தம் நீருக்கடியில் 16.6 கிலோ மீட்டர் நீளத்திற்கு பயணம் செய்யும் வகையில் உள்ளது. இதில் 18.8 கிலோமீட்டர் தூரம் நீருக்கு அடியில் செல்கிறது. ஹௌரா மைதான் ரயில் நிலையத்திலிருந்து பூல்பாங்க ரயில் நிலையம் வரை நீருக்கடியில் செல்கிறது.
இந்த இரண்டு பகுதிக்கும் இடையே ஓடும் ஹூஹ்லி நதிக்கு கீழ்ப்பகுதியில் ரயில் செல்லும் அளவிற்கு மிகப்பெரிய குகை அமைப்பு ஒன்று அமைக்கப்பட்டு அதன் வழியாக ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த குகை தான் பூமிக்கு அடியில் ஆழமாக இருக்கும் குகையாக இருக்கிறது. இந்த பூமிக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் பாதையில் மொத்தம் 600 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் 3 பூமிக்கு அடியில் இருக்கிறது.

மொத்தம் உள்ள பாதாள ரயிலில் 520 மீட்டர் அளவிற்கு ஆற்றுக்கு கீழ்ப்பகுதியில் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆற்றுக்கு கீழ்ப்பகுதியில் ரயில் செல்லும் போது வெறும் 45 நொடியில் இந்த 520 மீட்டர் தூரத்தை இந்த ரயில் கடந்து விடுகிறது. இதனால் விரைவாக இந்த ஆற்றைக் கடக்கும் ரயிலாக இந்த மெட்ரோ ரயில் தான் இருக்கிறது.
நீருக்கு அடியில் செல்லும் இந்த ரயிலை இயக்குவதற்காக ஆட்டோமேட்டிக் டிரெயின் ஆபரேஷன் என்ற தொழில்நுட்பத்தை இதில் பயன்படுத்துகிறார்கள். இதன்படி ரயிலில் இருக்கும் ஓட்டுநர் ஒரு பட்டனை அழுத்தினால் போதும் அனைத்தும் தானியங்கியாக இயங்கி ரயில் அடுத்த ரயில் நிலையம் வரை செல்லும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலுக்கான டிக்கெட்டை பொருத்தவரை ரூபாய் 5 முதல் ரூபாய் 50 வரை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ரூபாய் 5 என்ற டிக்கெட்டு முதல் இரண்டு கிலோமீட்டர் மட்டும் பயணிப்பதற்காக வழங்கப்படுகிறது. அதன் பின்னர் 10,15,20,25 என டிக்கெட் விலை ரூபாய் 50 வரை செல்கிறது. தற்போது இந்த மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் இதை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டமிட்டபடி இந்த மெட்ரோ ரயில் பணிகள் இதுவரை முழுமையாக முடியவில்லை. மெட்ரோ ரயில் பாதை தற்போது கட்டுமானத்தில் தான் இருக்கிறது. சால்ட் லேக் முதல் சீலெண்டா மெட்ரோ ரயில் இயக்குவதற்காக தான் இந்த திட்டம் போடப்பட்டது. இதற்கு இடையில் உள்ள நதியை கடப்பதற்கு தான் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த திட்டம் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் நீருக்கடியில் பயணிக்கும் மெட்ரோ தற்போது துவங்கப்பட்ட மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மக்கள் பலர் இந்த ரயிலில் பயணிக்க அதிகம் ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் நீருக்கடியில் மெட்ரோ ரயில் பயணம் செய்கிறது என்பதற்காகவே பலர் இந்த இடத்தை ஒரு சுற்றுலா தளமாக மாற்ற வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மெட்ரோ சேவை என்பது மிக முக்கியமான சேவையாகிவிட்டது. பெருநகரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில் அதை சமாளிக்க மெட்ரோ ரயில் பயணம் என்பது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. கொல்கத்தாவில் நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ என்பது நிச்சயம் ஆச்சரியமான விஷயம்தான்.


Click it and Unblock the Notifications









