ஏசி கார் வைத்திருப்பவர்களின் தலையில் பெரிய குண்டை போட தயாராகும் மத்திய அரசு! நாட்டுக்கு பெரிய செலவு மிச்சம்!
கடந்த 120 ஆண்டு கால வரலாற்றில் கார்கள் பல வகையில் பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளன. அடுத்ததாக வர போகும் எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) உலகளவில் மிக பெரிய புரட்சியை நிகழ்த்தி கொண்டிருக்கின்றன. 2030ஆம் ஆண்டிற்குள் சாலையில் இயங்கும் வாகனங்களில் குறைந்தப்பட்சம் 30 சதவீதத்தை ஆவது எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற வேண்டும் என்பதில் இந்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கார்களில் வழங்கப்படும் தொழிற்நுட்பங்களை பொறுத்தவரையில், அடாஸ் (ADAS) அடுத்தக்கட்ட பரிணாம வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. காரின் பாதுகாப்பையும், பயணிகளின் பாதுகாப்பையும் சென்சார்கள் மற்றும் ரேடார்கள் உதவியுடன் உறுதி செய்வதில் அடாஸின் பங்களிப்பு முக்கியமானதாக மாறி வருகிறது.
அடாஸின் உதவியுடன், சில விஷயங்களில் கார் தன்னிச்சையாக இயங்கக்கூடிய திறன் பயணிகளை கவர்ந்துள்ளது. இதேபோன்று, கார் பயணிகளை ஒரு காலத்தில் மிகவும் ஆச்சிரியப்படுத்திய அம்சம், கார் ஏசி ஆகும். வெப்பமான நாடாக இருப்பினும், நம் இந்தியாவில் அதிக வீடுகளில் ஏசி வசதி இல்லாத காலத்திலேயே கார்களில் ஏசி வசதியை வழங்க ஆரம்பித்துவிட்டனர்.

கார் போன்றதான மூடிய பரப்பிற்குள் ஏசி வசதி என்பதும் நம் இந்தியர்களுக்கு மிகவும் வித்தியாசமான உணர்வாக இருந்தது. ஏசி வசதியினாலேயே நம்மில் பலர் காரை விட்டு கீழே இறங்கவே மனம் இல்லாமல் இருந்தோம். தற்போது, பெரும்பாலான வீடுகளிலும், கட்டிடங்களிலும் ஏசி வசதி சாதாரணமாகி விட்டதால், கார்களில் ஏசி ஆனது மிகவும் அடிப்படையான ஒன்றாக மாறிவிட்டது.
அதற்கேற்ப, கார் நிறுவனங்களும் கார்களில் குறைந்தப்பட்ச திறன் கொண்ட ஏசி சிஸ்டத்தை ஆவது குறைந்தது வழங்கி வருகின்றன. இந்த நிலையில்தான், கார்களில் ஏசியை பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாட்டை கொண்டுவர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக, மத்திய மின்சாரத்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் தற்போது அளித்துள்ள பேட்டி சமூக வலைத்தளங்களில் பேச்சு பொருளாக மாறியுள்ளது.

அதாவது, இந்தியாவில் விரைவில் கார் ஏசியில் 20 டிகிரிக்கு கீழ் குளிர்ச்சியை வைக்க முடியாத சூழல் உருவாக உள்ளது. அதேபோல், 28 டிகிரிக்கு மேல் வெப்பத்தையும் அதிகரிக்க முடியாத படி, கார்கள் உருவாக்கப்படும் போதே மாற்றங்களை கொண்டுவர மத்திய அரசு தயாராகி வருகிறது. இந்த கட்டுப்பாடுகளுக்கு காரணம், நாட்டில் மின்சாரத்தின் பயன்பாட்டை குறைப்பது ஆகும்.
இதனால்தான், இதுதொடர்பான பேட்டி மத்திய மின்சாரத்துறை அமைச்சரிடம் இருந்து வந்துள்ளது. இந்த நடவடிக்கை ஆனது முக்கியமாக, ஏசி பயன்படுத்தும் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும், அலுவலகங்களிலும் கொண்டுவர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கார்களிலும் எஸ்யூவி வாகனங்களிலும் ஏசியின் பயன்பாட்டை குறைக்க இந்த நடவடிக்கை கொண்டுவரப்பட உள்ளது.

அதாவது, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஏசி சிஸ்டங்களிலும் கூலிங் ரேஞ்சை 20 டிகிரி- 28 டிகிரி என்கிற குறிப்பிட்ட வரையறைக்குள் கொண்டுவர மத்திய அரசு விரும்புகிறது. இதுகுறித்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட போது பேசிய மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார், "ஏர் கண்டிஷனிங் தரநிலைகள் தொடர்பாக, ஒரு புதிய ஏற்பாடு விரைவில் செயல்படுத்தப்படுகிறது.
ஏசி-களுக்கான வெப்பநிலை தரப்படுத்தல் 20 டிகிரி செல்ஷியஸில் இருந்து 28 டிகிரி செல்ஷியஸ் வரை அமைக்கப்படும். அதாவது, 20 டிகிரி செல்ஷியஸுக்கு கீழ் குளிர்விக்கவோ அல்லது 28 டிகிரி செல்ஷியஷுக்கு மேல் அதிகப்படுத்தவோ முடியாது. வெப்பநிலை அமைப்புகளை தரப்படுத்துவதை நோக்கமாக கொண்ட முதல் வகையான பரிசோதனை இதுவாகும்" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மூல பொருட்களை அதிகமாக நாம் வெளிநாடுகளில் இருந்துதான் பெறுகிறோம். ஆக, மின்சாரத்தின் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் அந்த நாடுகளை சார்ந்திருப்பதையும், செலவையும் குறைக்க முடியும். பெரும்பாலான வீடுகளிலும், அலுவலகங்களிலும் ஏசி தான் அதிக மின்சாரத்தை பயன்படுத்த கூடியது ஆகும். அதேபோல், கார்களிலும் பெட்ரோல் அல்லது டீசல் மூலமாக சார்ஜ் ஆகும் பேட்டரியில் இருந்து அதிக மின்சாரத்தை ஏசி எடுத்துக் கொள்கிறது.


Click it and Unblock the Notifications









