எலெக்ட்ரிக் வாகன பேட்டரி ஆயுள் முடிந்து விட்டால் என்ன செய்யவேண்டும்? மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டம்...

எலெக்டரிக் வாகன பேட்டரிகள் தன் ஆயுளை முடித்துவிட்டால் அதை எப்படிஅப்புறப்படுத்தவ வேண்டும் என மத்திய அரசு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இது குறித்த முழுமையான தெளிவான விளக்கத்தைக் கீழே காணுங்கள்.

எலெக்ட்ரிக் வாகன பேட்டரி ஆயுள் முடிந்து விட்டால் என்ன செய்யவேண்டும் மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டம் . . .

இன்று மெல்ல மெல்ல மக்கள் எல்லோரும் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இதனால் மார்கெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் வருகையும் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை மற்றும் பராமரிப்பு செலவுகளைக் கணக்கில் கொண்டு மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர்.

எலெக்ட்ரிக் வாகன பேட்டரி ஆயுள் முடிந்து விட்டால் என்ன செய்யவேண்டும் மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டம் . . .

இன்று எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவதற்குச் செலவு ஒரு காரணம் என்றால் சுற்றுச்சூழல் குறித்த அக்கறை மற்றொரு காரணம். ஆனால் உண்மையில் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்துவது சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாதா என ஆய்வு செய்தால் இல்லை இதிலும் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் விஷயங்கள் இருக்கிறது.

எலெக்ட்ரிக் வாகன பேட்டரி ஆயுள் முடிந்து விட்டால் என்ன செய்யவேண்டும் மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டம் . . .

எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் குறிப்பிட்ட பயன்பாட்டிற்குப் பிறகு செயலற்று போகும் அப்படியான நேரத்தில் எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்கள் அந்த பேட்டரியை அகற்றிவிட்டு புதிய பேட்டரியை வாங்கி மாட்டினால் தான் கார் இயங்கும். ஆனால் அகற்றப்பட்ட பேட்டரியை என்ன செய்வது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது.

எலெக்ட்ரிக் வாகன பேட்டரி ஆயுள் முடிந்து விட்டால் என்ன செய்யவேண்டும் மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டம் . . .

அகற்றப்பட்ட பேட்டரி தற்போது ஒரு ஆபத்தான கழிவாகத் தான் இன்று இருக்கிறது. ஆனால் இதை மீண்டு மறு சுழற்சி செய்து மீண்டும் பேட்டரி ஆக்கும் முறை தற்போது இருக்கிறது. ஆனால் மக்கள் பயன்படுத்தும் பேட்டரியை வாங்கி அதை மறு சுழற்சிக்கு அனுப்பும் மெக்கானிசம் இதுவரை இல்லை. இந்நிலையில் மத்திய அரசு இந்த பிரச்சனைக்குத் தீர்வு கொண்டு வர புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.

எலெக்ட்ரிக் வாகன பேட்டரி ஆயுள் முடிந்து விட்டால் என்ன செய்யவேண்டும் மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டம் . . .

ஏற்கனவே கடந்த 2001ம் ஆண்டு இந்தியாவில் பேட்டரிகளை தயாரித்து விற்பனை செய்வதில் சில விதிமுறைகளை வகுத்திருந்தது. ஆனால் அந்த சட்டத்தின் படி பேட்டரி கழிவு மேலாண்மை குறித்துக் குறிப்பிடவில்லை. இந்நிலையில் தற்போது 2022ம் ஆண்டு திருத்தப்பட்ட இந்த சட்டத்தின் பேட்டரி மேலாண்மை குறித்துத் தெளிவான வரைமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

எலெக்ட்ரிக் வாகன பேட்டரி ஆயுள் முடிந்து விட்டால் என்ன செய்யவேண்டும் மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டம் . . .

அதன்படி பேட்டரி தயாரிப்பாளே அதன் கழிவுகளை அகற்றுவதற்கும் பொறுப்பாளர் எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே பேட்டரியை தயாரித்தாலும் சரி, அல்லது இந்தியாவிலேயே தயாரித்த பேட்டரியை இறக்குமதி செய்து விற்பனை செய்தாலும் சரி அவர் அந்த பேட்டரி பயனற்று போகும் போது அதைச் சேகரித்துச் சுற்றுச் சூழலுக்கு ஆபத்து இல்லாமல் மறு சுழற்சிக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் வாகன பேட்டரி ஆயுள் முடிந்து விட்டால் என்ன செய்யவேண்டும் மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டம் . . .

இந்த விதி ஏற்கனவே பேட்டரி தொழிலில் இருக்கும் நிறுவனங்களுக்கும், புதிதாகத் துவங்கப்படும் நிறுவனங்களுக்கும் பொருந்தும், இது மட்டுமல்ல அனைத்து விதமான பேட்டரிகள் அதாவது தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரி, வீடுகளில் இன்வென்டர்களுக்கு பயன்படுத்தப்படும் பேட்டரி, எலெக்ட்ரிக் வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் பேட்டரி என எல்லா பேட்டரிகளுக்கும் பொருந்தும்.

எலெக்ட்ரிக் வாகன பேட்டரி ஆயுள் முடிந்து விட்டால் என்ன செய்யவேண்டும் மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டம் . . .

வாடிக்கையாளர்களுக்கு எப்படி பேட்டரியை விற்பனை செய்கிறார்களோ அப்படியே பேட்டரி அதன் ஆயுளை முடித்த பின்பு அதை மீண்டும் அவர்களிடமிருந்து திரும்பப் பெற்று அதை மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என இந்த சட்டம் சொல்கிறது. மேலும் இந்த சட்டத்தை மீறி நடத்தப்படும் நிறுவனங்களுக்கு

அதற்கான தண்டனை விபரங்களையும் அறிவித்துள்ளது.

எலெக்ட்ரிக் வாகன பேட்டரி ஆயுள் முடிந்து விட்டால் என்ன செய்யவேண்டும் மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டம் . . .

இதன்படி கழிவு பேட்டரிகளை கலெக்ட் செய்து மறு சுழற்சி முறைக்கு அனுப்பாத நிறுவனங்களுக்கு ரூ1 லட்சம் அபராதம் அல்லது 7 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. மீண்டும் மீண்டும் இந்த தவற்றைச் செய்பவர்க்கு அபராதமும் தண்டனை காலமும் அதிகமாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் வாகன பேட்டரி ஆயுள் முடிந்து விட்டால் என்ன செய்யவேண்டும் மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டம் . . .

இந்த விதியின்படி பேட்டரியை பயன்படுத்துவார்கள் கழிவு பேட்டரிகளை வழக்கமாகக் குப்பைகளுடன் சேர்ந்து வீசிவிடக் கூடாது. பேட்டரியை பத்திரமாக மறு சுழற்சி முறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதை மறு சுழற்சி செய்பவர்கள் இதை அதற்கான வழிமுறைகளுக்கு எடுத்துச் செல்வார்கள்.

எலெக்ட்ரிக் வாகன பேட்டரி ஆயுள் முடிந்து விட்டால் என்ன செய்யவேண்டும் மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டம் . . .

இந்த விதி 5 கிலோவிற்கு மேல் எடை கொண்ட பேட்டரிகளுக்கு மட்டுமே 5 கிலோவிற்குக் கீழ் உள்ள பேட்டரிகளுக்கு இந்த விதிமுறை பொருந்தாது. அதன்படி 5 கிலோவிற்கு கீழ் உள்ள பேட்டரிகள் ஆபத்தான கழிவுகள் என்கிற ரீதியில் முனிசிபல் விதிகளுக்கு உட்பட்ட கழிவாகக் கருதப்படும். இதனால் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகன அதிகரிப்பால் இருக்கும் பேட்டரி கழிவு குறித்த அச்சத்திற்கு ஒரு தீர்வு வழங்கப்பட்டுள்ளது எனப் பல சமூக ஆர்வலர்கள் கருத்து கூறியுள்ளனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 27, 2022, 10:52 [IST]
English summary
Union govt notifies new battery waste management rules to prevent electric vehicle hazardous battery
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+