தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தமிழ்நாட்டிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!

இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் அதன் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வரும் 2025ம் ஆண்டிற்கு முன்பாக 50 சதவீதம் குறையும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தற்போது நம்பிக்கை தெரிவித்துள்ளார். சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காப்பாற்றுவதில் எவ்வித சமரசமும் இருக்க கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!

இந்தியாவில் சாலை விபத்துக்களில் சிக்கி ஒவ்வொரு நாளும் சராசரியாக 415 பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். எனவே சாலை விபத்துக்களால் பாதிக்கப்படுபவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டிய தேவை உள்ளது எனவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரான நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!

இது குறித்து நிதின் கட்காரி கூறுகையில், ''சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைப்போம் என நாங்கள் உறுதியளித்துள்ளோம். இன்று தமிழ் நாட்டின் வெற்றி கதையை நாம் பார்க்கிறோம். தமிழ்நாடு தற்போது சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை 53 சதவீதம் குறைத்துள்ளது'' என்றார்.

தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!

அத்துடன் நாம் 2030ம் ஆண்டு வரை காத்து கொண்டே இருந்தால், சாலை விபத்துக்களில் சிக்கி மேலும் 6-7 லட்சம் பேர் உயிரிழந்து விடுவார்கள் எனவும் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். எனவே 2025ம் ஆண்டுக்கு முன்பாக சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைப்பது அவசியமானது என அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!

சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறக்கூடிய இடங்களை கண்டறிந்து பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அரசு 14 ஆயிரம் கோடி ரூபாயை செலவிடும் எனவும் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க முயலும் அதே நேரத்தில், சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது.

தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!

இந்த சூழலில், ஒரு நாளைக்கு 40 கிலோ மீட்டருக்கு சாலைகள் அமைப்பது என்ற இலக்கை வரும் மார்ச் மாத இறுதிக்குள் எட்டி விடுவோம் என்று நம்புவதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''தற்போது தினமும் 30 கிலோ மீட்டருக்கு மேல் சாலைகள் அமைக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!

அனேகமாக வருகின்ற மார்ச் இறுதிக்குள், ஒரு நாளைக்கு 40 கிலோ மீட்டர்களுக்கு சாலை கட்டுமான பணிகள் என்ற இலக்கை எட்டி விடுவோம்'' என்றார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், மிகவும் விரைவான போக்குவரத்திற்கும் சாலைகள் மிகவும் அவசியமானவை. எனவே சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது.

தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!

ஆனால் சாலை விபத்துக்கள் மற்றும் அதன் காரணமாக ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைப்பது சவாலான காரியமாக உள்ளது. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதுதான் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. எனவே புதிய மோட்டார் வாகன சட்டத்தில் விதிமீறல்களுக்கான அபராத தொகைகளையும் மத்திய அரசு உயர்த்தியது.

தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!

ஆனால் இன்னமும் பெரும்பாலானோர் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பது இல்லை. போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வாகன ஓட்டிகள் அனைவரும் உணரும்பட்சத்தில், இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும்.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 19, 2021, 15:05 [IST]
English summary
Union Minister Nitin Gadkari Applauds Tamil Nadu - Here Is Why. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+