அடிக்கடி காரை மாற்றிக் கொண்டே இருக்கும் மத்திய அமைச்சர்!! பழைய காரை இங்கே தள்ளி விடுகிறாரா? என்ன ஒரு யோசனை

மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தனக்கு ஹூண்டாய் ஐயோனிக் 5 என்ற எலக்ட்ரிக் கார் வழங்கப்பட்டதை அடுத்து, தான் பயன்படுத்தி வந்த டொயோட்டா மிராய் ஹைட்ரஜன் காரை பீகார் மாநில துணை முதலமைச்சருக்கு அவர் பரிசாக வழங்கியுள்ளார். இதனை பீகார் துணை முதல்வரும் பரந்த மனசுடன் பெற்றுக் கொண்டு உள்ளார்.

மிகவும் அட்வான்ஸாக யோசிக்கக்கூடிய மத்திய அமைச்சர்களுள் ஒருவர் நிதின் கட்கரி எனலாம். மத்திய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சரான நிதின் கட்கரி, மக்கள் பெட்ரோல்/ டீசல் எரிபொருளில் இருந்து மாறி, எலக்ட்ரிக் போன்று மாற்று எரிபொருள் வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என விரும்பக்கூடியவர்.

union minister got electric car

மேலும், இது மத்திய அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளதாகவும் அவர் கூறி வருகிறார். எலக்ட்ரிக் வாகனங்கள் தான் எதிர்காலம் என உறுதியாகிவிட்டாலும், அந்த காலத்தை எட்டும் வரையில் ஹைட்ரஜன், சிஎன்ஜி போன்ற பிற மாற்று எரிபொருள்களில் இயங்கும் வாகனங்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்பது அமைச்சர் நிதின் கட்கரியின் கொள்கையாக உள்ளது.

இந்த வகையில் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட டொயோட்டா மிராய் என்ற ஹைட்ரஜன் கார் ஒன்றை அமைச்சர் நிதின் கட்கரி வாங்கினார். இந்த நிலையில், அமைச்சர் நிதின் கட்கரியின் பயன்பாட்டிற்கு மற்றொரு புதியதொரு காராக ஹூண்டாய் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் கார் வழங்கப்பட்டு உள்ளது. அமைச்சர் நிதின் கட்கரியின் அலுவல் பயன்பாட்டு கார் எப்போதுமே இவ்வாறுதான் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும்.

union minister got electric car

சமீபத்தில் நடைபெற்ற பாரத் புதிய கார் பகுபாய்வு செயல்முறை (BNCAP)-ஐ அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் அமைச்சர் நிதின் கட்கரி தனது புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரில் வந்து இறங்கினார். ஆனால், அதற்கு முன்பு வரையில் இவர் அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வந்தது டொயோட்டா மிராய் ஆகும்.

புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் கார் வந்ததை அடுத்து, டொயோட்டா மிராய் காரை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதனை பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு தனது பரிசாக வழங்கியுள்ளார். மத்திய அமைச்சரின் டொயோட்டா மிராய் காரில் பீகார் துணை முதல்வர் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஜி இந்த ஹைட்ரஜன்-பவர் காரை சோதனைக்காக தனக்கு வழங்கியுள்ளதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

கோனா இவி-க்கு அடுத்து ஹூண்டாயின் 2வது எலக்ட்ரிக் காராக ஐயோனிக் 5 கடந்த ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.44.95 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரெட்ரோ மற்றும் மாடர்ன் என இரண்டும் கலந்த கலவையில் ஐயோனிக் 5 தோற்றத்தை கொண்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் காரில் முன்பக்கத்தில் எல்இடி ஹெட்லேம்ப்களும், பின்பக்கத்தில் பிக்ஸெல்டு தீம் கொண்ட எல்இடி டெயில்லேம்ப்களும் வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் கார் ஒரேயொரு பவர்டிரெயின் தேர்வில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், இந்த காரில் ஒரேயொரு எலக்ட்ரிக் மோட்டார் மட்டுமே வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 217 எச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த எலக்ட்ரிக் மோட்டார் இயக்க ஆற்றலை காரின் பின் சக்கரங்களுக்கு வழங்குகிறது.

union minister got electric car

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அமைச்சர் ஒரு காரை பயன்படுத்தியுள்ளார் என்றால், நிச்சயமாக அதில் சொகுசு வசதிகள் தாராளமாக இருக்கும். இருப்பினும், வேறொருவரால் பயன்படுத்தப்பட்ட காரை ஓர் மாநிலத்தின் துணை முதல்வர் பயன்படுத்துவது என்பது அரிதான விஷயமே ஆகும். எங்களுக்கு தெரிந்தவரையில், அமைச்சர் நிதின் கட்கரி தனது மிராய் காரில் ஏதேனும் சோதனைகளை மேற்கொண்டு வரலாம். அதாவது, பயன்படுத்த, பயன்படுத்த காரின் மைலேஜ் எவ்வாறு கிடைக்கிறது? அடிக்கடி பராமரிப்பு தேவைப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிப்பதற்காக பரீட்சையமான தேஜஸ்வி யாதவிடம் காரை வழங்கியிருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 26, 2023, 19:45 [IST]
English summary
Union minister nitin gadkari got new hyundai electric car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X