மத்திய அமைச்சர் சொன்ன விஷயத்தை கேட்டு ஆடிப்போன கார் தயாரிப்பு நிறுவனங்கள்! இது வந்துச்சுன்னா மாஸா இருக்குமே!
கார்களில் ஆறு ஏர்பேக் இல்லை என்றால் பாரத் என்கேப் சோதனையில் பைவ் ஸ்டார் ரேட்டிங் வாங்க முடியாது என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் பேசியுள்ளார். ஏற்கனவே இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களுக்கு 6 ஏர்பேக் கட்டாயம் என அரசு சொல்லியிருந்த விதி தற்போது வரை அமலுக்கு வராத மத்திய அமைச்சரை இப்படி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தால் அதன்படி இந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களுக்கு கட்டாயமாக்கப்பட வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த சட்டம் தற்போது பரிசீலையில் இருந்து வருகிறது இதுவரை அமலுக்கு வரவில்லை.

பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த விதிமுறைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தனர். உலகம் முழுவதும் உள்ள ஏர்பேக் தயாரிப்பு மற்றும் ஒரு காரை தயாரிக்க ஆகும் செலவு ஆகியவற்றை கணக்கில் கொள்ளும் போது இந்த ஆறு ஏர்பேக் என்ற விதிமுறை நடைமுறைக்கு ஒத்து வராது இது மேலும் சிரமமானது என கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் ஆட்டோமொபைல் காம்போனென்ட் தயாரிப்பாளர்கள் சங்க 63வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்பொழுது அவர் இந்தியாவில் பாரத் என்கேப் கிராஷ் டெஸ்டில் சோதனை செய்யப்படும் வாகனங்கள் குறைந்தபட்சம் 5 ஏர் பேக் இருந்தால் தான் 5 ஸ்டார் ரேட்டிங் பெற முடியும் என விதிமுறையை வகுக்க உள்ளதாக தெரிவித்தார்.

இப்படியாக அனைத்து பாதுகாப்பான கார்களிலும் 6 ஏர்பேக் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால் கார் தயாரிப்பாளர்கள் தங்கள் கார் நல்ல பாதுகாப்பு ரேட்டிங் பெற வேண்டும் என்பதற்காக 6 ஏர்போக்குகளை வைப்பார்கள். அதன் பின் இந்திய அரசு ஏர்பேக்குகளை கட்டாயமாக்க வேண்டும் என்ற விதிமுறையை இருக்காது.
இந்திய மக்கள் மத்தியில் தற்போது பாதுகாப்பான கால்களை வாங்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக எழுந்துள்ளது. இதனால் அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட கார்கள் தான் மார்க்கெட்டில் சிறந்த விற்பனையை பெறப்போகிறது. அப்படி பார்க்கும்போது 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட கார்களில் எல்லாம் 6 ஏர்போக்குகள் கட்டாயம் இருக்கும் என கூறியிருந்தார்.

தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களுக்கு இரண்டு ஏர்போக்குகள் கட்டாயம் என்ற விதிமுறை உள்ளது. அந்த இரண்டு ஏர் பேக்களும் முன் பக்கம் உள்ள டிரைவர் மற்றும் முன்பக்கம் உள்ள பயணிகள் சீட்டிற்கு கட்டாயம் ஏர் பேக் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான் மத்திய அரசு கடந்த ஆண்டு 6 ஏர்பேக்குகள் கட்டாயம் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு மாருதி உள்ளிட்ட நிறுவனங்கள் இது காரின் விலையை கணிசமான அளவு உயர்த்தி விடும் என கருத்து தெரிவித்திருந்தனர். இதை பரிசீலித்த மத்திய அரசு கணக்கிட்டு பார்க்கும்போது தற்போது உள்ள 2ஏர்பேக்குகள் போக கூடுதலாக 4 ஏர்க்குகளை சேர்ப்பதன் மூலம் காரின் விலை ரூ6000 வரை தான் அதிகமாகும் என தெரிவித்திருந்தது.
ஆனால் கார் தயாரிப்பாளர்கள் இப்படியாக 6 ஏர்போக்குகளை கட்டாயம் ஆகும் போது காரின் விலை ரூ19000 வரை அதிகமாகும் என கூறியிருந்தனர். இதற்கான விவாதங்கள் தற்போது நடந்து வரும் நிலையில் மத்திய போக்குவரத்துறை அமைச்சர் நிதின்கட்கரி பாதுகாப்பான கார்களுக்கு 5 ஸ்டார் ரேட்டிங் வாங்க வேண்டும் என்றால் ஆர் ஏர்பேக்குகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற விதிமுறை பாரத் என்கேப்பில் வரும் என பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக மக்கள் தொகை இருப்பதால் இங்கு வாகன மார்க்கெட் மிகப்பெரியதாக இருக்கிறது. அதே நேரத்தில் இங்கு நிகழும் விபத்துகளும் அதிகமாக இருக்கிறது. இந்த விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கவே ஏர் பேக்குகளை கட்டாயமாக வேண்டும் என மத்திய அரசு சொல்லி வருகிறது. அதன் அடிப்படையில் பார்த்தால் மத்திய அரசு கொண்டுவரும் இந்த முயற்சி நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது.


Click it and Unblock the Notifications









