சதத்தை நெருங்கும் பெட்ரோல் விலை... மத்திய அமைச்சரின் 'கூல்' பதில்... நீங்க கடுப்பான நிர்வாகம் பொறுப்பல்ல!!

விரைவில் எரிபொருளின் விலை சென்சுரி அடிக்க இருக்கின்ற நிலையில் விலையுயர்வைப் பற்றி மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வியெழுப்பியிருக்கின்றனர். இதற்கு அவர் அளித்த கூல் பதிலை இப்பதிவில் காணலாம்.

சதத்தை நெருங்கும் பெட்ரோல், டீசல் விலை... மத்திய அமைச்சரின் 'கூல்' பதில்... நீங்க கடுப்பான நிர்வாகம் பொறுப்பல்ல!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணைத் தொடுமளவிற்கு நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகின்றது. நாட்டின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் பெட்ரோலின் விலை சென்சுரியை அடித்துவிட்டன. நீ மட்டும்தான் பெரிய ஆளா, நானும் விரைவில் சென்சுரியைத் தொடுவேன் என்று வெகு வேகமாக உயர்ந்து வருகின்றது டீசலின் விலை. விரைவில் இதன் விலையும் ரூ.100னை தொட இருக்கின்றது.

சதத்தை நெருங்கும் பெட்ரோல், டீசல் விலை... மத்திய அமைச்சரின் 'கூல்' பதில்... நீங்க கடுப்பான நிர்வாகம் பொறுப்பல்ல!

இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுமட்டுமின்றி, மக்களுக்கு பேரிடியை வழங்கும் வகையில் அண்மையில் வீட்டு சமையல் எரிவாயு (கேஸ்) விலையில் ரூ. 50னை அதிரடியாக உயர்த்தியது மத்திய அரசு. இதனால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியிருக்கின்றனர்.

சதத்தை நெருங்கும் பெட்ரோல், டீசல் விலை... மத்திய அமைச்சரின் 'கூல்' பதில்... நீங்க கடுப்பான நிர்வாகம் பொறுப்பல்ல!

இந்த நிலையில், அண்மையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த நிதின் கட்காரியிடம் பெட்ரோல், டீசல் விலையுயர்வை பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், "பொதுமக்கள் மாற்று எரிபொருள் பயன்பாட்டிற்கு மாற வேண்டும்" என ஒரேடியகா தனது பதிலை முடித்துக் கொண்டார்.

சதத்தை நெருங்கும் பெட்ரோல், டீசல் விலை... மத்திய அமைச்சரின் 'கூல்' பதில்... நீங்க கடுப்பான நிர்வாகம் பொறுப்பல்ல!

அமைச்சரின் இப்பதில் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. பெட்ரோல், டீசல் விலையுயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை மலையளவில் உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. இதுமட்டுமின்றி, ஏழை மற்றும் எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஷேர் ஆட்டோ போன்ற மலிவு கட்டண போக்குவரத்தின் கட்டணத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

சதத்தை நெருங்கும் பெட்ரோல், டீசல் விலை... மத்திய அமைச்சரின் 'கூல்' பதில்... நீங்க கடுப்பான நிர்வாகம் பொறுப்பல்ல!

இதனால், தினசரி போக்குவரத்திற்காக ஷேர் ஆட்டோ, பேருந்து போன்றவற்றைப் பயன்படுத்துவோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மத்திய அரசின் இந்த செயல், மக்கள் விரோத செயல் என எதிர்கட்சிகளும், தன்னார்வலர்களும் தங்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் அதிக வரியைக் கணிசமாக குறைக்க வேண்டும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

சதத்தை நெருங்கும் பெட்ரோல், டீசல் விலை... மத்திய அமைச்சரின் 'கூல்' பதில்... நீங்க கடுப்பான நிர்வாகம் பொறுப்பல்ல!

இருப்பினும், மத்திய அரசு இதனை பெரிதாக பொருட்படுத்திக் கொள்ளாமல் பெட்ரோல், டீசல் விலையினை உயர்த்தி வருகின்றது. அந்தவகையிலேயே அண்மையில் மத்திய பட்ஜெட்டின்போது பெட்ரோல், டீசல் மீதான வரியினை உயர்த்தியது. தற்போது பெட்ரோலுக்கு 61 சதவீதமும், டீசலுக்கு 56 சதவீதமும் வரி வசூலிக்கப்பட்டு வருகின்றது.

சதத்தை நெருங்கும் பெட்ரோல், டீசல் விலை... மத்திய அமைச்சரின் 'கூல்' பதில்... நீங்க கடுப்பான நிர்வாகம் பொறுப்பல்ல!

இதுபோன்ற உச்சபட்ச வரி விதிப்பின் காரணமாகவே நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மலையளவு உயர்ந்து நிற்கின்றது. உள்நாட்டில் சுத்திகரிப்பு செய்து வெளிநாடுகளுக்கும் பெட்ரோல், டீசலை இந்தியா ஏற்றுமதி செய்து வருகின்றது. அவ்வாறு, இந்தியாவில் ஏற்றுமதி செய்து விற்பனைச் செய்து வரும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. இந்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 62க்கு விற்பனைச் செய்யப்படுகின்றது.

சதத்தை நெருங்கும் பெட்ரோல், டீசல் விலை... மத்திய அமைச்சரின் 'கூல்' பதில்... நீங்க கடுப்பான நிர்வாகம் பொறுப்பல்ல!

இதேபோன்று இந்தியாவில் இருந்து எரிபொருளை கொள்முதல் செய்யும் வங்கதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 78க்கு விற்பனைச் செய்யப்படுகின்றது. இவ்வாறு, இறக்குமதி செய்து விற்பனைச் செய்யும் நாடுகளிலேயே மிகக் குறைந்த விலையில் விற்கப்படும்நிலையில், இங்கு அநியாய கொள்ள நடப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சதத்தை நெருங்கும் பெட்ரோல், டீசல் விலை... மத்திய அமைச்சரின் 'கூல்' பதில்... நீங்க கடுப்பான நிர்வாகம் பொறுப்பல்ல!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது, இந்தியாவிலும் இதன் விலை அதிரடியாக உயர்த்தப்படும். அதேசமயம், சர்வதேச சந்தையில் இதன் விலை குறையும்போது, எரிபொருள் மீதான அடிப்படை கலால் மற்றும் சிறப்புக் கூடுதல் கலால் வரி அரசு உயர்த்திவிடுகின்றது.

சதத்தை நெருங்கும் பெட்ரோல், டீசல் விலை... மத்திய அமைச்சரின் 'கூல்' பதில்... நீங்க கடுப்பான நிர்வாகம் பொறுப்பல்ல!

இவ்வாறு செய்யப்படுவதானல் அதன் பலன் மக்களை சென்றுச் சேர்வதில் தடை ஏற்படுகின்றது. இதனால்தான் எப்போதும் பெட்ரோல், டீசலின் விலை ஏறுமுகமாகவே காட்சியளிக்கின்றது. மேலும், பெரியளவில் இவற்றின் விலையில் குறைவு ஏற்படுவதில்லை. அதேசமயம், மத்திய அமைச்சரின் பதிலானது, அனைவரும் மின்வாகன பயன்பாட்டிற்கு மாற வேண்டும் என்பதை வலியுறுத்துவதைப் போன்று அமைந்துள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Union Minister Nitin Gadkari Said Public Should Use Alternative Fuels. Read In Tamil.
Story first published: Tuesday, February 16, 2021, 19:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X