மஹிந்திராவின் புதிய காரில் குழந்தை போல அமர்ந்து பார்த்தவர் இவ்வளவு பெரிய மனிதரா? கடைசியில் சொன்ன வார்த்தை!!

மஹிந்திரா (Mahindra)-இல் இருந்து புதிய எலக்ட்ரிக் கார் (Electric Car)-களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9E) மார்க்கெட்டில் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளன. எந்த அளவிற்கு என்றால், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி (Union Minister Nitin Gadkari) புதிய மஹிந்திரா பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்களில் ஆர்வத்துடன் அமர்ந்து பயணம் செய்து பார்த்துள்ளார். அதன்பின், இந்த எலக்ட்ரிக் கார்களை பற்றி அவர் கூறிய விஷயம் தான் இதில் ஹைலைட் (Highligh) ஆகும்.

மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி நீண்ட வருடங்களாக இந்த பதவியை வகித்து வருகிறார். இதற்கு காரணம், நிதின் கட்கரியின் தொலைநோக்கு பார்வை உடன் கூடிய சிந்தனை ஆகும். இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகமாக கொண்டுவர வேண்டும் என ஆரம்பித்தில் இருந்து முழங்கி கொண்டிருப்பவர் அமைச்சர் நிதின் கட்கரி ஆவார்.

union minister reacts to mahindra

எலக்ட்ரிக் வாகனங்கள் மூலமாக பசுமையான போக்குவரத்தை பெற முடியும் என்பது மட்டுமின்றி, வெளிநாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைத்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்பது நிதின் கட்கரியின் கருத்தாக உள்ளது. அவரது முயற்சியின் விளைவாகவே, இந்தியாவில் தற்போது ஓரளவிற்கு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவை அதிகரித்து வருகிறது.

சீன எலக்ட்ரிக் கார் நிறுவனமான பிஒய்டி (BYD) இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்த அதன் அனைத்து எலக்ட்ரிக் கார்களையும் நிதின் கட்கரியிடம் காண்பித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளது. அந்த வரிசையில் தற்போது, மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பயணம் செய்து பார்த்துள்ளார்.

அதன்பின், இதுகுறித்து நிதின் கட்கரி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கட்டிங்-எட்ஜ் டெக்னாலஜி (Cutting-edge Technology)-ஐ கொண்ட மஹிந்திராவின் உலக தரத்திலான எலக்ட்ரிக் கார்களை பாராட்டி இருப்பதுடன், தற்போதுள்ள நவீன தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி, உலக கார் நிறுவனங்களுடன் இந்திய நிறுவனங்கள் போட்டியிடுவது பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் இந்த எக்ஸ் பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக மஹிந்திரா நிறுவனத்தின் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra) 3 நமஸ்தே எமோஜிகளை குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் நிதின் கட்கரியின் முன் மஹிந்திரா பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்களை மஹிந்திரா & மஹிந்திராவின் தலைவர் அனிஷ் ஷா கொண்டு சென்று நிறுத்தியுள்ளார்.

அமைச்சரின் பார்வைக்காக இரு எலக்ட்ரிக் கார்களையும் டெல்லியில் உள்ள நிதின் கட்கரியின் இருப்பிடத்திற்கே அனிஷ் ஷா உள்பட மஹிந்திரா அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர். அமைச்சர் நிதின் கட்கரியை தொடர்ந்து, மத்திய வர்த்தம் & தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் (Piyush Goyal) அவர்களும் மஹிந்திரா பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்களை நேரில் பார்வையிட்டுள்ளார்.

union minister reacts to mahindra

கார்களை பார்வையிட்ட பின் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இந்த அட்டகாசமான எலக்ட்ரிக் வாகனங்களின் செயல் விளக்கத்தை பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 'மேக்-இன்-இந்தியா' திட்டத்தின் கீழ், உலகிலேயே சிறந்த இவி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க மோடி அரசு செயல்பட்டு வருகிறது" என குறிப்பிட்டுள்ளார். மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.18.90 லட்சத்தில் இருந்தும், எக்ஸ்இவி 9இ காரின் விலைகள் ரூ.21.90 லட்சத்தில் இருந்தும் துவங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திராவின் சமீபத்திய கார்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த கவனம் கிடைத்து வருகிறது. தற்போது மத்திய அமைச்சர்களையும் இந்த கார்கள் கவர்ந்துள்ளதால், 2025 ஜனவரியில் இருந்து துவங்கப்பட உள்ள இந்த கார்களுக்கான புக்கிங் அதிகமாக குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025 பிப்ரவரியில் இருந்து இந்த எலக்ட்ரிக் கார்களை டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, December 20, 2024, 14:35 [IST]
English summary
Union ministers reacts to mahindra be 6 and xev 9e electric cars
மேலும்... #mahindra #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+