மக்கள் தொகையில் மட்டும்தான் இந்தியா டாப்... மற்ற விஷயங்களில் எல்லாம் சீனா, அமெரிக்கா தான் போல!!

இந்தியா உள்பட உலக நாடுகள் பலவற்றில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்துவரும் சூழலில், எலக்ட்ரிக் வாகனங்களை அதிகம் கொண்ட உலகின் 2வது மிக பெரிய சந்தை என்கிற பெயரை அமெரிக்கா பெற்றுள்ளது. அப்படியென்றால், முதலிடத்தில் இருக்கும் நாடு எது? எந்த நாட்டை அமெரிக்கா முந்தி 2வது இடத்தை பிடித்துள்ளது? என்பது குறித்த விபரங்களை இனி பார்க்கலாம்.

எலக்ட்ரிக் வாகனங்கள் தான் நமது எதிர்கால போக்குவரத்து என ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம். நமது மத்திய அரசு 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாகனங்களில் குறைந்தது 30 சதவீதம் எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற வேண்டும் என்கிற முயற்சியில் செயல்பட்டு வருகிறது.

us worlds 2nd largest ev market

இந்தியாவில்தான் இந்த நிலை... சீனா, அமெரிக்கா போன்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் ஏற்கனவே எலக்ட்ரிக் வாகனங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துவிட்டன. எந்த அளவிற்கு என்றால், உலகிலேயே அதிக எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்தப்படும் முதல் இரு நாடுகளாக சீனா மற்றும் அமெரிக்கா விளங்குகின்றன. இந்த வரிசையில் 2வது இடத்தை சமீபத்தில்தான் அமெரிக்கா பெற்றுள்ளது.

சீனா, உலகின் மிக பெரிய ஆட்டோமொபைல் சந்தை. மக்கள் தொகையை அதிகம் கொண்ட நாடு என்பது மட்டுமின்றி, தொழிற்நுட்ப வளர்ச்சியிலும் உச்சத்தை தொட்ட நாடு ஆகும். ஆதலால் இத்தகைய நாடு எலக்ட்ரிக் வாகனங்களில் முதலிடத்தை வகிப்பது ஒன்றும் ஆச்சிரியமான விஷயம் அல்ல. ஆனால் 2வது இடத்தில் நம் இந்தியாவை காட்டிலும் குறைந்த மக்கள் தொகை கொண்ட அமெரிக்கா தற்சமயம் உள்ளது.

us worlds 2nd largest ev market

ஹாங்-காங் நாட்டை சேர்ந்த கவுண்டர்பாயிண்ட் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை ஆனது கடந்த 2023 ஜனவரி- மார்ச் மாதத்தில் 79% அதிகரித்துள்ளதாகவும், இதன் மூலமாக எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் ஜெர்மனியை அமெரிக்கா முந்தி 2வது இடத்தை பிடித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாரின் உதவியுடன் இயக்கப்படும் ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனங்கள் கூட அமெரிக்காவில் சிறப்பாக விற்பனையாகுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் வாகனங்களில் சுமார் 81% முழு-எலக்ட்ரிக் பேட்டரி வாகனங்கள் ஆகும்.

us worlds 2nd largest ev market

அமெரிக்கா இந்த அளவிற்கு மாறியிருப்பதற்கு டெஸ்லாவை முக்கிய காரணமாக சொல்ல வேண்டும். ஏனெனில் சீனாவிலேயே எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முன்னிலை வகிக்கும் டெஸ்லா ஓர் அமெரிக்க கார் நிறுவனமாகும். அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் கார் டெஸ்லாவின் மாடல் ஒய் ஆகும். டெஸ்லா மட்டுமின்றி, ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு, ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களில் இருந்தும் அமெரிக்காவில் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஆட்டோமொபைல் வாகனங்களின் பிறப்பிடமாக ஜெர்மனி விளங்கினாலும், மக்கள் தொகையில் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது. இதனால் ஜெர்மனியை அமெரிக்கா முந்தியிருப்பதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. இந்த லிஸ்ட்டில் தற்போதைக்கு நமது இந்தியா மிகவும் பின்தங்கியே உள்ளது. என்றாலும், எதிர்காலத்தில் சீனாவை காட்டிலும் எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகம் விற்பனையாகும் நாடாக இந்தியா தான் விளங்கும் என பல ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 17, 2023, 11:02 [IST]
English summary
United states worlds 2nd largest electric vehicle market report
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X