விமானிகளின் வாழ்க்கையின் அறிந்திராத மறுபக்கம்!

குழந்தைகளிடம் எதிர்காலத்தில் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை கேட்டால், பல குழந்தைகள் பைலட்டாக விரும்புகிறேன் என்று பட்டென ஒரு பதிலை உதிர்ப்பர். பைலட்டாவதற்கு பல கடினமான முயற்சிகளும், பொருளாதார பலமும் தேவை என்றாலும், ஏதும் அறியா சிறுவயது குழந்தைகளுக்கு பைலட்டாவது கனவாக இருக்கிறது. கனவு காணுங்கள் என்று கூறிய அப்துல் கலாமும் கூட விமானியாக வேண்டும் என்று விரும்பியதாகவே கூறி இருக்கிறார்.

விமானிகளின் வாழ்க்கையின் தெரிந்திராத மறுபக்கம்!

மிடுக்கான தோற்றம், கூலிங் க்ளாஸ், தொப்பி, சூட்கேஸ் சகிதம் காணப்படும் பைலட்டுகள் சினிமா ஹீரோக்களைவிட மேலானவர்களாக மனதில் ஆழமாக பதிந்துவிட்ட பிம்பதான் இதற்கு காரணம். இந்த வேளையில், பைலட்டுகளின் வாழ்க்கை குறித்த மறுபக்கத்தை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

விமானிகளின் வாழ்க்கையின் தெரிந்திராத மறுபக்கம்!

காலையில் நியூயார்க், மதியம் பிராங்க்ஃபர்ட் இரவு சென்னை என்று கண்டம் விட்டு கண்டம் பயணிக்கும் பணியாக கருதினாலும், அதிக நேரம் பணி செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் பைலட்டுகள் இருக்கின்றனர். 6 மணியாகிவிட்டது, அலுவலக நேரம் முடிந்துவிட்டது என்று பேக்கை தூக்கி மாட்டிக் கொண்டு செல்ல முடியாது.

விமானிகளின் வாழ்க்கையின் தெரிந்திராத மறுபக்கம்!

ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும் நேர வித்தியாசம் காரணமாக, தூக்கமின்மை மற்றும் உடல்நல பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். மேலும், லேசர் தாக்குதல் போன்றவற்றால், கண் பாதிப்புகளையும் பைலட்டுகள் அடிக்கடி சந்திக்கின்றனர்.

விமானிகளின் வாழ்க்கையின் தெரிந்திராத மறுபக்கம்!

பிற பணிகளில் புத்திகூர்மையும், திறமையும் இருந்தால் சேர்ந்துவிடலாம். சில வேலைகளுக்கு மிடுக்கான தோற்றம் போதும். ஆனால், விமானியாக பயில்வதற்கு புத்திகூர்மை, மிடுக்கான தோற்றம் மட்டுமின்றி, பொருளாதார பலமும் தேவை.

விமானிகளின் வாழ்க்கையின் தெரிந்திராத மறுபக்கம்!

பைலட்டுகளுக்கான படிப்பு, பயிற்சி, உரிமம் பெறுவது வரை ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சம் வரை செலவாகும். அனைத்து தகுதிகள் இருந்தாலும், பொருளாதார தகுதியும் இங்கு அவசியமாக இருக்கிறது.

விமானிகளின் வாழ்க்கையின் தெரிந்திராத மறுபக்கம்!

வெவ்வேறு கார்களை ஓட்டுவது போல பைலட்டுகள் நினைத்த நேரத்தில் வெவ்வேறு மாடல் விமானங்களை ஓட்ட முடியாது. இப்போது ஒரு பைலட் போயிங் 777 விமானம் ஓட்டுகிறார் என்றால், அதனை தொடர்ந்து ஓட்ட முடியும்.

விமானிகளின் வாழ்க்கையின் தெரிந்திராத மறுபக்கம்!

வேறு வகையான விமானத்தை ஓட்ட வேண்டும் எனில், அதற்குரிய விண்ணப்பம் கொடுத்து உரிமம் பெறுவதுடன், குறைந்த 8 முதல் 12 வாரங்கள் பயிற்சி எடுக்க வேண்டும். அதன் பின்னரே, வேறு மாடல் விமானத்தை இயக்க அனுமதிக்கப்படுவர். இதில், வகுப்பறை கல்வி, சிமுலேட்டர் பயிற்சி உள்ளிட்டவையும் அடங்கும்.

விமானிகளின் வாழ்க்கையின் தெரிந்திராத மறுபக்கம்!

மேலும், 8 மாதங்களுக்கு ஒருமுறை குறிப்பிட்ட விமானத்தை இயக்குவதற்கான பைலட் உரிமத்தை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். இதுவே போயிங் 777 விமானத்தை இயக்கும் பைலட்டுகள் 6 மாதத்திற்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.

விமானிகளின் வாழ்க்கையின் தெரிந்திராத மறுபக்கம்!

வகுப்பறை கல்வி, சிமுலேட்டர் பயிற்சி வகுப்புகள் முடிந்தவுடன் முதலில் துணை விமானியாக நியமிக்கப்படுவர். மூத்த விமானியின் உதவியுடன் அவர் விமானத்தை இயக்கும் பயிற்சியை பெறுவார். குறிப்பிட்ட மணிநேரம் பறந்த பின்னர், நடைபெறும் பரீட்சையில் தேர்வு பெற்றுவிட்டால், விமானத்தை இயக்குவதற்கான விமானி அந்தஸ்தை பெற்றுவிடுவார்.

விமானிகளின் வாழ்க்கையின் தெரிந்திராத மறுபக்கம்!

ஏர் கனடா விமான நிறுவனத்தில் பணியில் சேர்வதற்கு குறைந்தது 4,000 மணிநேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் வேண்டுமாம். இதுபோன்று, விமானிகளுக்கு கடுமையான விதிமுறைகளும் உள்ளன.

விமானிகளின் வாழ்க்கையின் தெரிந்திராத மறுபக்கம்!

விமானத்தை இயக்குவதற்கு முன்னர் இறால் போன்ற ஓடு கொண்ட கடல் உணவுகளை சாப்பிடவும் தடை உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, அதில் விஷம் ஏறும் வாய்ப்பு இருப்பதால், அதற்கு தடை உள்ளது.

விமானிகளின் வாழ்க்கையின் தெரிந்திராத மறுபக்கம்!

விமானத்தை இயக்கும் விமானிகளுக்கு குறிப்பிட்ட உணவுப் பொருட்களை உண்ண வேண்டிய கட்டாயம் உண்டு. நினைத்த நேரத்தில் வேண்டியதை விரும்பி உண்ண இயலாது. விமானத்தை இயக்கும் இரண்டு விமானிகளுக்கும் வெவ்வேறு வகையான உணவு வழங்கப்படும்.

விமானிகளின் வாழ்க்கையின் தெரிந்திராத மறுபக்கம்!

இன்று டாக்சி டிரைவர் முதல் பஸ் டிரைவர் வரை காதுகளில் ஹெட்போன் இல்லாமல் இல்லை. நினைத்த நேரத்தில் பாட்டுக் கொண்டே வேலை செய்யும் அலுவலக பணியாளர்களையும் பார்க்கிறோம். ஆனால், பைலட்டுகள் ஹெட்போன் பயன்படுத்தினாலும், அவர்கள் பாடல்கள் கேட்க முடியாது.

விமானிகளின் வாழ்க்கையின் தெரிந்திராத மறுபக்கம்!

தொடர்ந்து கட்டுப்பாட்டு அறை தொடர்பில் இருப்பதால், 10 மணிநேரத்திற்கும் மேலாக பறந்தாலும் கட்டுப்பாட்டை அறையுடனான ரேடியோ தொடர்பில்தான் இருக்க வேண்டும்.

விமானிகளின் வாழ்க்கையின் தெரிந்திராத மறுபக்கம்!

விமானப் பயணம் என்பதுதான் மிகவும் பாதுகாப்பான போக்குவரத்தாக கூறப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் விமானத்தை இயக்கி, இறங்கும் வரை ஆபத்தான பணிகளில் ஒன்றாகவே இருக்கிறது.

விமானிகளின் வாழ்க்கையின் தெரிந்திராத மறுபக்கம்!

விமானிகள் பல வாரங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, பல விமானிகள் தங்களது மனைவி, குழந்தைகள், பெற்றோரின் படங்களை தாங்கள் அணியும் தொப்பியின் மேற்புறத்தில் வைத்திருப்பர் என்று ரகசியம் ஒன்றையும் ஏர் கனடா விமான நிறுவனத்தின் விமானி டக் மோரிஸ் கூறி இருக்கிறார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Unknown Facts About Pilot Life.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X