இந்தியாவிலேயே முதன்முறையாக மக்களின் சேவைக்காக கடலூரில் ஆளில்லா விமானம் அறிமுகம்..!!

Written By:

கடலூர் மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் வெள்ளச்சேதத்தை தடுக்க, ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கடலூரில் ஆளில்லா விமான சேவை சமுதாய பணிகளுக்காக அறிமுகம்..!!

இதற்காக நடைபெற்ற தொடக்க விழாவில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், எம்.சி. சம்பத் மற்றும் கடலூர் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கடலூரில் ஆளில்லா விமான சேவை சமுதாய பணிகளுக்காக அறிமுகம்..!!

பருவ மழை காலங்களில் தமிழகத்தில் கடலூர் மாவட்டம் பெரிய சேதத்தை சந்திக்கிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது.

கடலூரில் ஆளில்லா விமான சேவை சமுதாய பணிகளுக்காக அறிமுகம்..!!

இதனை தடுக்க, மழைநீரை சேமிக்க, தடுப்பணை கட்ட, அதற்காக பூகோள ரீதியில் இடம் தேர்வு செய்ய உட்பட தேவைகளுக்காக ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்ய தீர்மானகிக்கப்பட்டது.

Recommended Video - Watch Now!
TVS Jupiter Classic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
கடலூரில் ஆளில்லா விமான சேவை சமுதாய பணிகளுக்காக அறிமுகம்..!!

இதற்காக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மெட்ரால் தொழில்நுட்ப கல்லூரி விமானியல் துறையுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது.

கடலூரில் ஆளில்லா விமான சேவை சமுதாய பணிகளுக்காக அறிமுகம்..!!

அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த செந்தில்குமார் தலைமையிலான குழு இதற்கான கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு, ஒரு ஆளில்லா விமானத்தை தயாரித்தனர்.

கடலூரில் ஆளில்லா விமான சேவை சமுதாய பணிகளுக்காக அறிமுகம்..!!

தமிழக அரசின் தேவையை அறிந்து தயாரிக்கப்பட்ட அந்த விமானத்திற்காக தொடக்க விழா நேற்று கடலூரில் நடைபெற்றது.

கடலூரில் ஆளில்லா விமான சேவை சமுதாய பணிகளுக்காக அறிமுகம்..!!

அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பொதுப்பணி வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

கடலூரில் ஆளில்லா விமான சேவை சமுதாய பணிகளுக்காக அறிமுகம்..!!

நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள நீர்நிலைகளை தொடர்ந்து இந்த ஆளில்லா விமானம் ஆய்வு செய்யும் என கூறப்பட்டது.

கடலூரில் ஆளில்லா விமான சேவை சமுதாய பணிகளுக்காக அறிமுகம்..!!

ஆய்வில் கிடைக்கும் வரைப்படங்கள் மற்றும் தகவல்களை மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக பேரிடர் மேலாண்மை துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.

கடலூரில் ஆளில்லா விமான சேவை சமுதாய பணிகளுக்காக அறிமுகம்..!!

பிறகு அதை வைத்து பேரிடர் மேலாண்மை குழுவின் வழிக்காட்டுதல் படி, வெள்ள பாதிப்பை தடுக்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்கும் என்று கூறப்பட்டது.

கடலூரில் ஆளில்லா விமான சேவை சமுதாய பணிகளுக்காக அறிமுகம்..!!

ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் தொழில்நுட்பம் ராணுவத்தில் மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்தியாவிலேயே மக்கள் நலனுக்காக தமிழகத்தின் கடலூரில் இந்த நவீன தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது.

கடலூரில் ஆளில்லா விமான சேவை சமுதாய பணிகளுக்காக அறிமுகம்..!!

இதை மக்களின் நலனை கருத்தில் கொண்டு சிறந்த முறையில் செயலாற்றி, அதிகாரிகள் முறையாக பயன்படுத்தினால் கடலூர் மாவட்டத்தில் பேரிடர் ஏற்படுவதை நிச்சயம் தடுக்கலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Unmanned Aircraft Service Starts at Cuddalore for Social Causes. Click for Details...
Story first published: Wednesday, August 9, 2017, 11:09 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark