சிலைக்காக ரூ.3,000 கோடி செலவிட்ட மோடி- ரூ.100 செலவு செய்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம்!

சிலைக்காக 3,000 கோடி செலவு செய்த குஜராத் அரசு, சாலைக்காக ரூ.100 மதிப்புள்ள ரெஃப்லெக்டரைப் பொருத்தியிருந்தால் இந்த விபத்து நடைபெற்றிருக்காது. அதிர்ச்சி வீடியோ குறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

சிலைக்காக ரூ.3,000 கோடி செலவு செய்த மோடி- ரூ.100 மதிப்புள்ள பொருளை பொருத்தியிருந்தால் இந்த விபத்து நிகழ்ந்திருக்காது: அதிர்ச்சி வீடியோ...!

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன விபத்துகளின் எண்ணிக்கை, கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு உயர்ந்துக்கொண்டே செல்கிறது. வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையும், போக்குவரத்து வீதிமீறலுமே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

அவ்வாறு, நாட்டில் தினம் தினம் நிகழும் விபத்துகளுக்கு மேற்கூறியவாறு சில காரணிகள் கூறப்பட்டாலும், பெரும்பாலான விபத்துகள் தரமற்ற சாலைகளாலும், முறையான போக்குவரத்து வசதி இல்லாமையாலும் தான் அரங்கேறுகின்றன. இதனைப் பெரும்பாலான வாகன ஓட்டிகள் மறுக்க மாட்டார்கள்.

சிலைக்காக ரூ.3,000 கோடி செலவு செய்த மோடி- ரூ.100 மதிப்புள்ள பொருளை பொருத்தியிருந்தால் இந்த விபத்து நிகழ்ந்திருக்காது: அதிர்ச்சி வீடியோ...!

ஏனென்றால், நம் நாட்டில் இருக்கும் பல முக்கிய சாலைகளும்கூட முறையாக அமைக்கப்படாமல், குண்டும் குழியுமாக காணப்படும் அவலநிலை இங்கு நிலவுகிறது. இந்நிலையில், சாலையை முறையாக பராமரிப்பதற்காக ஒவ்வொரு வாகன ஓட்டியும், புதிதாக வாகனம் வாங்கும்போது, வாகனத்தின் கட்டணத்துடன், சாலைக்கான வரியையும் வழங்கி வருகின்றனர். இதைத் தவிர்த்து, ஒவ்வொரு முறையும் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும்போது, சுங்கச் சவாடிகள் மூலம் வரி செலுத்துகின்றனர்.

சிலைக்காக ரூ.3,000 கோடி செலவு செய்த மோடி- ரூ.100 மதிப்புள்ள பொருளை பொருத்தியிருந்தால் இந்த விபத்து நிகழ்ந்திருக்காது: அதிர்ச்சி வீடியோ...!

இவ்வாறு வசூலிக்கப்படும் பெரும்தொகையை அரசியல் கட்சியினர்கள் கொள்ளையடித்து விட்டு தரமற்ற சாலையை போட்டு வருகின்றனர். மேலும், புதிதாக போடப்படும் சாலையில் முறையான கட்டமைப்புகளையும் அவர்கள் மேற்கொள்வதில்லை இதனாலேயே அந்த சாலைகள் மிக விரைவில் உருக்குலைந்து நாசமாகிவிடுகிறது.

இதுபோன்ற சீரற்ற நிலையில் காணப்படும் சாலையில் செல்லும் வாகனங்கள், கட்டுப்பாட்டை இழந்து விபத்தைச் சந்திக்கின்றன. இதனை உறுதிச் செய்யும் விதமாக குஜராத் மாநிலத்தில் அண்மையில் ஓர் விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அந்த 29 விநாடிகளே உள்ள அந்த வீடியோக் காட்சியில், இருள் சூழந்த அந்த சாலையின் இடதுபுறத்தில் ஆட்டோ ஒன்று பயணி ஏற்றிச் செல்வதற்காக நின்றுக் கொண்டிருக்கிறது. அப்போது, அதே சாலையில் அதிவேகமாக வந்த கார், ஒன்று சாலையின் நடுவே டிவைடர் இருப்பதை உணராமல் அதன் மீது ஏறுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்த கார் சிலமுறை உருண்டு ஓடியது. இந்த விபத்தில் காரில் பயணித்தவர்களின் நிலை குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை.

சிலைக்காக ரூ.3,000 கோடி செலவு செய்த மோடி- ரூ.100 மதிப்புள்ள பொருளை பொருத்தியிருந்தால் இந்த விபத்து நிகழ்ந்திருக்காது: அதிர்ச்சி வீடியோ...!

பெரும்பாலும் நகரங்களின் ஒதுக்குபுறமாக இருக்கும் சாலைகளில் தெருவிளக்குகள் அமைந்திருக்காது. ஆகையால், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் தடத்தை சரியாக கணித்து வாகனத்தை ஓட்டுவதற்காக சாலையின் மையப்பகுதியில், நெடுவரிசையில் ஒளிரும் தன்மையுடன் எச்சரிக்கை பட்டைகள் கொடுக்கப்படும்.

பொதுவாக இதுபோன்ற ஒளிரும் எச்சரிக்கை பட்டைகள் மின்விளக்கிற்கு பதிலாக பயன்படுத்துவது வழக்கம். இவை, சாலையைப் பிரித்துக்காட்டுவது மட்டுமின்றி, எதிர்புறத்தில் வரும் வாகனங்களுடன் ஏற்படும் விபத்தையும் தவிர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.

சிலைக்காக ரூ.3,000 கோடி செலவு செய்த மோடி- ரூ.100 மதிப்புள்ள பொருளை பொருத்தியிருந்தால் இந்த விபத்து நிகழ்ந்திருக்காது: அதிர்ச்சி வீடியோ...!

ஆனால், குஜராத் மாநிலத்தில் அரங்கேறியிருக்கும் இந்த அதிர்ச்சி சம்பவத்தில், அந்த சாலையில் மின்விளக்கு மற்றும் எச்சரிக்கை பட்டைகள் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த விபத்து நடப்பதற்கு காரின் அதிவேகம் காரணமாக இருந்தாலும், டிவைடரைப் பிரித்துக்காட்டும் எந்த ஒரு சமிக்ஞையும் அந்த இடத்தில் இடம்பெறவில்லை.

சிலைக்காக ரூ.3,000 கோடி செலவு செய்த மோடி- ரூ.100 மதிப்புள்ள பொருளை பொருத்தியிருந்தால் இந்த விபத்து நிகழ்ந்திருக்காது: அதிர்ச்சி வீடியோ...!

ஆகையால், இந்த விபத்திற்கு முறையற்ற கட்டமைப்புடன் இருந்த சாலையே முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்கும் விதமாக சாலையின் இருபுறத்திலும், மஞ்சள், வெள்ளை, அல்லது சிவப்பு நிற ஒளிரும் எச்சரிக்கை ரெஃப்லெக்டர்களைப் பொருத்தவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு வரும்நிலையில், குஜராத் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிலைக்காக ரூ.3,000 கோடி செலவு செய்த மோடி- ரூ.100 மதிப்புள்ள பொருளை பொருத்தியிருந்தால் இந்த விபத்து நிகழ்ந்திருக்காது: அதிர்ச்சி வீடியோ...!

மேலும், சாலையை அமைத்த அம்மாநிலத்தின் போக்குவரத்துத்துறையின் அலட்சிய போக்கையும் இந்த விபத்து வீடியோ அம்பலப்படுத்தியுள்ளது. சமீபத்தில் தான் குஜராத் மாநிலத்தின் வதோதரா பகுதியில் ரூ. 3000 கோடி செலவில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை வைக்கப்பட்டது. இந்த சிலை பெரும் விமர்சனத்திற்குள் உருவாக்கப்பட்டது என்பது. மேலும். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர்கள் கண்டனங்களையும் தெரிவித்தனர்.

சிலைக்காக ரூ.3,000 கோடி செலவு செய்த மோடி- ரூ.100 மதிப்புள்ள பொருளை பொருத்தியிருந்தால் இந்த விபத்து நிகழ்ந்திருக்காது: அதிர்ச்சி வீடியோ...!

மேலும், இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க வாகன ஓட்டிகள், அதிவேகத்தை குறைக்க வேண்டும். மேலும், தெருவிளக்குகள் மற்றும் ரெஃப்லெக்டர்கள் இல்லாத சாலையில் பயணிக்கும்போது, முழு கவனத்துடன் கட்டுப்படுத்தக்கூடிய வேகத்தில் செல்ல வேண்டும். இதுபோன்ற சில நடவடிக்கைகள் நம்முடைய பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதுடன், நம்மை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் குடும்பத்தினர் மற்றும் நமக்கு எதிரில் வரும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

Source: Shreyas Macwan

More from DriveSpark

Article Published On: Wednesday, April 3, 2019, 12:05 [IST]
English summary
Unmarked Divider Causes Horrifying Accident-Video. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+