காசு கொடுத்து எமனை விலைக்கு வாங்காதீங்க! உங்க காருக்கு இதெல்லாம் தேவையே இல்லை!

இந்தியாவில் புதிதாக கார் வாங்கிய பலர் அதில் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கை மாற்றி பயன்படுத்தி வருகிறார்கள். இப்படியாக இந்திய வாகனங்களில் பயன்படுத்தப்படும் சில எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கள் முற்றிலும் தேவையற்றதாக இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட் என்பது கார் விற்பனைக்கு பிறகு பிரபலமான மார்க்கெட் ஆகும். உங்களுக்கு காருக்கு தேவையான ஏகப்பட்ட அக்சஸரீஸ்கள் தற்போது மார்க்கெட்டில் விற்பனையாகி வருகின்றன. ஆனால் அதில் ஒரு சில அக்சஸரிஸ்கள் முற்றிலும் உங்கள் காருக்கு தேவையே இல்லாத ஒரு ஆக்ஸசரீஸ்களாக இருக்கிறது. அப்படியாக இந்திய வாகனங்களுக்கு தேவையே இல்லாத ஆக்சஸரீஸ்கள் குறித்து தான் இங்கே காணப்போகிறோம்.

useless car accessories

புல்பார்கள்: இந்திய வாகனங்களில் நாம் முன் பகுதியில் புல்பார்களை அதிகம் காண முடியும். குறிப்பாக அரசியல்வாதிகள் மற்றும் பெரும் தொழிலதிபர்கள் பயன்படுத்தும் அதிக காஸ்ட்லியான வாகனங்களில் இதை நாம் காண முடிகிறது. இது முற்றிலும் ஒரு தேவையில்லாத அம்சம். அதே நேரம் இது ஒரு பாதுகாப்பு குறைபாடு ஏற்படுத்தக்கூடிய அம்சமாக இருக்கிறது.

இந்த புல்பாரை பொருத்தப்பட்டால் சென்சார்கள் சரியாக வேலை செய்யாமல் போகும். மேலும் அந்தக் காரில் அடாஸ் தொழில்நுட்பம் இருந்தால் அதுவும் சரியாக வேலை செய்யாமல் போகும் வாய்ப்புள்ளது. விபத்து ஏற்படும்போது ஏர்பேக்குகள் சரியான நேரத்தில் திறக்காமல் போக வாய்ப்புள்ளது. இந்தியாவில் இந்த புல்பாரை பயன்படுத்துவது சட்டவிரோதமான விஷயமும் கூட, இதற்கு அதிகமான அபராதங்களும் விதிக்கப்படுகிறது.

useless car accessories

போலியான எக்ஸாஸ்ட் டிப்ஸ்: வாகனத்தின் பின் பகுதியில் சில அதிகமான எக்ஸாஸ்ட் பைப்புகள் இருப்பது போல அதன் வெளிப்பகுதியை மட்டும் பொருத்தி இருப்பார்கள். இதை பார்க்கும் போது குறிப்பிட்ட கார் ஏதோ ஸ்போர்ட்ஸ் அல்லது ரேஸ் கார் போன்ற ஒரு தோற்றத்தை கொடுக்கும்.

இதற்காக சிலர் இதைப் பொறுத்தி இருக்கிறார்கள். ஆனால் இதை பொருத்துவதால் காருக்கு எந்தவிதமான பலனும் கிடைக்காது. வெறும் வெளிப்பக்க பிற்பகுதியை மட்டும் பொருத்தினால் இந்த எக்ஸாஸ்ட் பைப் எல்லாம் செயல்பாட்டில் இருக்கிறது என அர்த்தம் கிடையாது. இது ஒரு தேவையில்லாத விஷயம் தான்.

useless car accessories

பெரிய பின்பக்க ஸ்பாய்லர்கள்: செடான் கார்களில் பின்பக்கம் பெரிய ஸ்பாய்லர்கள் பொறுத்தி இருப்பதை நம்மால் பல நேரங்களில் காணப்படுகிறது. இந்த ஸ்பாய்லர்கள் சாதாரண ரோட்டில் பயன்படுத்த தகுதி இல்லாதவை. இவை டிராக்கில் பயன்படுத்த தான் பயனுள்ளதாக இருக்கும். குடும்பத்துடன் நீங்கள் பயணிக்கும் கார்களில் இந்த ஸ்பாய்லர்கள் தேவையில்லாதது. இந்த ஸ்பாய்லரின் எடை உங்கள் காரின் மைலேஜ் பாதிக்குமே தவிர, காருக்கு எந்தவிதமான நன்மையையும் தராது.

பெரிய சைஸ் அலாய் வீல் மற்றும் டயர்கள்: சிலர் தங்கள் வாகனங்கள் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக அதன் வீல்களை மொத்தமாக மாற்றி இருப்பார்கள். முக்கியமாக பெரிய சைஸில் அலாய் வீல் மற்றும் டயர்களை பொருத்தி இருப்பார்கள். இது காருக்கு ஒரு அழகான விஷயமாக வேண்டுமானால் இருக்கலாம்.

useless car accessories

ஆனால் இது உங்கள் காருக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் முக்கியமாக காரின் அலைன்மென்ட் மாறுபடும், காரின் மைலேஜ் மாறுபடும், காரின் சஸ்பென்ஷனில் பாதிப்பு அதிகமாக இருக்கும், ஸ்பீடோமீட்டர் ரீடிங்க்கள் தவறாக இருக்கும். ஸ்டேரிங்கில் கட்டுப்பாடு மாறுபடும் இப்படியாக பல்வேறு பிரச்சனைகளுக்கு இது வழிவகுக்கும்.

பிளாஷ் ஆகும் பின்பக்க லைட்டுகள்: வாகனங்களின் பின்பக்கம் பலர் பிளசிங் லைட்டுகளை பொருத்துகின்றனர். இது இன்று பிரபலமான ஒரு உதிரிபாகமாக இருக்கிறது. பின்பக்கம் உள்ள சாதா பல்புகளை மாற்றி ஃபிளாஷிங் பல்புகளை பொறுத்துகின்றனர். இதனால் பிரேக் பிடிக்கும்போது வெறுமென லைட் எரியாமல், லைட் விட்டு விட்டு எரிகிறது.

useless car accessories

இது முற்றிலும் ஆபத்தான ஒரு லைட் ஆகும். பின்பக்கம் வரும் வாகன ஓட்டியின் கவனத்தை சிதற வைக்கும் விஷயமாக இருக்கும். இதனால் சாலையில் விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. பல விபத்துக்களும் இதானல் நடந்துள்ளது. இதனால் உயிர் போகும் ஆபத்தும் இருக்கிறது. அதனால் இதை பொருத்துவது தவறான விஷயமாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உங்கள் கார்களுக்கான உதிரிபாகங்களை நீங்கள் தேர்வு செய்து பொருத்துவது என்பது உங்களுக்கு பிடித்தமான விஷயம்தான். ஆனால் சில உதிரிபாகங்கள் முற்றிலும் தேவையற்றதாக இருக்கிறது. அதை வாங்கி பொருத்துவதன் மூலம் அதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க வேண்டும். இது காசு கொடுத்து நீங்கள் எமனை விலைக்கு வாங்குவதற்கு சமம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..

Article Published On: Friday, October 27, 2023, 11:39 [IST]
English summary
Unnecessary car accessories in india bullbars decorative exhaust tips and more
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X