உங்களவிட இந்த கருவி உங்க கார் கேபினை சுத்தமா வச்சுக்கும்.. அமேசானிலேயே விற்பனைக்கு கிடைக்குது.. விலையும் கம்மி
கார் பராமரிப்பு விஷயத்தில் அதிகம் முக்கியத்துவம் காட்டுபவர்களுக்கு உதவும் விதமாக ஓர் சூப்பரான கருவியை பிரபல யுனோ மிண்டா (Uno Minda) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. யுனோ மிண்டா, இது ஓர் வாகனங்களுக்கான முக்கிய பாகங்கள் மற்றும் கருவிகளை தயாரிக்கும் முன்னணி நிறுவனம் ஆகும். இது தற்போது ஏர் ஃபில்டர் (Air Filter)-ஐயே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது கார் கேபினுக்கான ஏர் ஃபில்டர் ஆகும். இதை பொருத்துவதன் வாயிலாக கார் கேபினில் உள்ள காற்றை சுத்தமானாதகவும், சுவாசிக்க உகந்ததாகவம் மாற்ற முடியும்.
குறிப்பாக, காற்றில் கலந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத கிருமிகளின் நடமாட்டத்தைக் கூட இந்த கேபின் ஏர் ஃபில்டர் கட்டுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதுதவிர, வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களையும் இது கட்டுப்படுத்தும். மேலும், தூசிகளையும் விட்டு வைக்காமல் இந்த காற்று வடிகட்டி கட்டுப்படுத்தும். எனவே காருக்குள் இருப்பவர்களுக்கு தூய்மையான காற்று கிடைப்பது இந்த கருவி வாயிலாக உறுதி செய்யப்படும்.

இத்தகைய தரமான கார் கேபின் ஏர் ஃபில்டரையே தற்போது யுனோ மிண்டா இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த சந்தைக்குப்பிறகான கேபின் ஏர் ஃபில்டரை வாடிக்கையாளர்கள் மிக சுலபமாக வாங்கிக் கொள்ளும் விதமாக அமேசான் (Amazon) மற்றும் ஃப்ளிப்கார்ட் (Flipkart) உள்ளிட்ட முக்கியமான ஆன்லைன் தளங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கச் செய்திருக்கின்றது.
இதுதவிர, சில்லறை விற்பனைக் கடைகளிலும் யுனோ மிண்டாவின் இந்த கார் கேபின் ஏர் ஃபில்டர் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் மட்டுமின்றி இரண்டாம் நிலை நகரங்களிலும் இந்த காற்று வடிகட்டி விற்பனைக்குக் கிடைக்கும் என யுனோ மிண்டா தெரிவித்து இருக்கின்றது.

காற்று மாசு டெல்லி போன்ற முன்னணி நகரங்களில் மிகப் பெரிய பிரச்னையாக மாறி இருக்கின்றது. காற்று மாசு காரணமாக தலை நகர் டெல்லியில் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்ட சம்பவம்கூட அரங்கேறி இருக்கின்றது. இதுதவிர, காற்று மாசை அதிகரிக்கச் செய்யும் விதமாக நகரத்திற்குள் இயங்கிக் கொண்டிருக்கும் பழைய வாகனங்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் காற்றின தரத்தை மேம்படுத்தும் பொருட்டே மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தநிலையிலேயே கடுமையான காற்று மாசைக் கண்ட்ரோல் செய்யும் விதமாக யுனோ மிண்டா கார் கேபின் ஃபில்டரை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக மிகவும் குறைவான விலையில் அதனை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
அறிமுக விலையாக ரூ. 639 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த காற்று வடிகட்டிக்கு ஒரு வருட வாரண்டியையும் யுனோ மிண்டா அறிவித்து இருக்கின்றது. இந்த காற்று வடிகட்டி வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை மட்டுமல்ல வாகன உமிழ்வுகளில் இருந்து வெளியாகும், நைட்ரஜன் ஆக்சைடுகள், கார்பன் மோனாக்சைடு மற்றும் ஆவியாகும் கரிம சேர்மங்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் துகள்களையும் கட்டுப்படுத்தும்.
இதனை சுவாசிப்பதனால் பல்வேறு விதமான வியாதிகள் வந்து சேரும். மேலும், கடுமையான உடல்நலக் கேடும் ஏற்படும். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு மிக மோசமான ஆபத்தான சூழலை இந்த காற்று ஏற்படுத்தும். இந்த அபாயங்களைக் குறைக்க தங்களுடைய கார் கேபின் காற்று வடிகட்டிகள் பெரும் உதவியாக இருக்கும் என யுனோ மிண்டா தெரிவித்து இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: யுனோ மிண்டா அசல் உபகரண உற்பத்தியாளர்களுக்கு (OEMs) தேவையான பல்வேறு பாகங்கள் மற்றும் கருவிகளை உற்பத்தி செய்து வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இது புதிதாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் ஆஃப்டர் மார்க்கெட் கேபின் ஏர் ஃபில்டர் காற்றில் உள்ள துகள்கள், தூசி, மாசுகள், ஒவ்வாமை மற்றும் விரும்பத்தகாத நாற்றங்களைக் கட்டுப்படுத்தும்.


Click it and Unblock the Notifications








