ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
வாகனங்களில் பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகளின் பங்களிப்பு மிகப் பெரியது மற்றும் அளப்பறியாதது. வாகனங்களில் பயணிக்கும்போது பின்னால் நடப்பவற்றை அறிந்துக் கொள்ளவே இந்த கண்ணாடிகள் பெரும் உதவியாக இருக்கின்றன. சொல்லப்போனால், பின்னால் வரும் வாகனங்கள் நம்முடைய வாகனங்கள் மீது மோதிவிடாத வண்ணம் பாதையை மாற்றிக் கொள்ள மிகப் பெரிய அளவில் கண்ணாடி உதவியாக இருக்கின்றது.
இத்தகைய ஓர் பாதுகாப்பு அம்சத்தையே மிகக் குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது யுனோ மிண்டா (Uno Minda) எனும் பிரபல நிறுவனம். யுனோ மிண்டா ஓர் வாகனங்களுக்கான பாகங்களை தயாரிக்கும் நிறுவனம் ஆகும். பலதரப்பட்ட பிராண்ட் வாகனங்களுக்கான கூறுகளை தயாரித்து வருகின்றது.

கார், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள், மின்சார வாகனம், வர்த்தக பயன்பாட்டு வாகனம் மற்றும் ஆஃப்-ரோடு வாகனங்கள் என பலதரப்பட்ட வாகனங்களுக்கு தேவையான முக்கிய கூறுகளை இது தயாரித்து வருகின்றது. நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளாக வாகனங்களுக்கான லைட், அலாய் வீல், ஸ்விட்ச், ஹாரன், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்பீக்கர்கள், சீட் பெல்ட், வீல் கவர், கியர் ஷிஃப்டர்கள், ஸ்பாய்ளர்கள், ஸ்டியரிங் வீல் உள்ளிட்டவை இருக்கின்றன.
வாகனங்களுக்கான பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம், பேட்டரி பேக், டிசி கன்வெர்டர் போன்ற முக்கியமான மின்சாதனங்களையும் தயாரித்து வருகின்றது. இந்த நிலையிலேயே யுனோ மிண்டா நான்கு சக்கர வாகனங்களுக்கான பின் பக்கத்தைப் பார்க்க உதவும் கண்ணாடிகளையும் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. தன்னுடைய புதிய கண்ணாடிகளுக்கு ரூ. 199 விலையை அது நிர்ணயம் செய்திருக்கின்றது. இது ஆரம்ப விலை மட்டுமே ஆகும்.
முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் அது விற்பனைக்குக் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. கார்களில் நன்கு இயக்க நிலையில் இருக்க வேண்டிய அம்சங்களில் பின் பக்கத்தைப் பார்க்க உதவும் கண்ணாடிகளும் ஒன்றாகும். இதனால்தான் கார் பராமரிப்பில் இதற்கும் அதிகம் முக்கியத்தும் வழங்கப்படுகின்றது.
மேலும், இத்தகைய ஓர் அம்சத்தையே தற்போது மலிவு விலையில் யுனோ மிண்டா இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. தங்களுடைய இந்த புதிய கண்ணாடிகள் நல்ல தெரிவுநிலையை வழங்கக் கூடியது என்றும் யுனோ மிண்டா கூறியிருக்கின்றது. இந்த கண்ணாடிகள் தன்னுடைய மிக சிறந்த பிரதிபலிப்பு திறனால் காரின் சுற்றுப்புறத்தை மிகத் தெளிவாகக் காண்பிக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
ட்ராஃபிக், மிக நெறுக்கமான பார்க்கிங் அல்லது போக்குவரத்து சூழ்ந்த பகுதிகளில்கூட நல்ல பார்வை திறனை வழங்கும் என கூறுகின்றது. அதுமட்டுமின்றி, எளிதில் உடையாத கண்ணாடிகளையே இதில் தங்கள் நிறுவனம் வழங்கி இருப்பதாகவும் யுனோ மிண்டா தெரிவித்து இருக்கின்றது. இதன் பிளாஸ்டிக்கும் அதிக நீடித்தும் உழைக்கும் திறன் கொண்டது என கூறப்படுகின்றது.
ஆகையால், அதிக நாட்கள் இந்த ரியர் வியூ கண்ணாடிகள் ஆயுட்காலத்தைக் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது சந்தையில் உள்ள முன்னணி கார் மாடல்களுக்கு இந்த கண்ணாடி பொருத்தமானதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. எனவே யார் வேண்டுமானாலும் தங்களின் கார்களுக்கு இந்த கண்ணாடியை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: யுனோ மிண்டா விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பது ஆஃப்டர் மார்க்கெட் பின் பக்கத்தைப் பார்க்க உதவும் கண்ணாடிகள் ஆகும். மலிவு விலையில் இவை விற்பனைக்குக் கிடைக்கும். அதன் மற்ற தயாரிப்புகளும் இதைப்போலவே மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்தது. கார்கள் மட்டுமல்ல பைக்குகளிலும் ரியர் வியூ கண்ணாடிகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. இதனால்தான் இந்த அம்சம் இல்லாத வாகனங்கள் மீதும் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








