பஸ் கண்டக்டரின் விசில போலிருக்கும் இந்த கருவியோட விலை 8,999ரூபாவா! இது இருந்தா விபத்துலிருந்து தப்பிக்க முடிமா

நவீன கால கார்களில் வழங்கப்படும் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (Advanced Driver Assistance System) இருக்கின்றது. வாகன உலகில் இது சுருக்கமாக அடாஸ் (ADAS) என அழைக்கப்படுகின்றது. இந்த அம்சம் டிரைவருக்கு ஓர் உதவியாளரைப் போல செயல்படும். உதாரணமாக, ரிவர்ஸ் எடுப்பது, வலது அல்லது இடது பக்கம் திரும்பும் பொழுது ஓர் உதவியாளர் வாகனத்தில் கூட இருந்தால் எப்படி உதவுவாரோ அவரைப் போலவே இந்த அம்சமும் உதவும். ஆபத்தின்றி அவற்றை செய்ய அது வழிக்காட்டும்.

அதேவேளையில், ஓர் மனித உதவியாளரைவிட மிக சிறப்பான உதவியையும் வழங்கும் திறன் கொண்டதாக இந்த அம்சம் உள்ளது. இதனால்தான் நவீன கால கார்களில் இந்த அம்சம் கட்டாயமாக இடம் பெற்றுவிடுகின்றது. இத்தகைய அம்சத்தையே 8 ஆயிரத்து 999 ரூபாவிற்கே வழங்குகின்றது ஓர் நிறுவனம்.

Uno minda dvr

அது எந்த நிறுவனமும் அல்ல, வாகனங்களுக்கான முக்கிய அக்சஸரீஸ்களை தயார் செய்து வரும் பிரபல யுனோ மிண்டா (Uno Minda) நிறுவனமே ஆகும். இந்த நிறுவனம் கார்களுக்கான 1080p வசதிக் கொண்ட டிவிஆர் 2.0 (DVR 2.0) வசதிக் கொண்ட கேமிராவையே உருவாக்கி இருக்கின்றது.

இந்த கேமிராவிலேயே அது லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டத்தை வழங்கி இருக்கின்றது. இந்த ஒரு கேமிராவை பொருத்தினால் போதும் உங்கள் காரில் அடாஸ் அம்சமாக இந்த கேமிரா பணி புரியும். கார் டிவிஆர் 2.0 என்கிற பெயரிலேயே இது விற்பனைக்குக் கிடைக்கும்.

யுனோ மிண்டா டிவிஆர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கம் மற்றும் ஆஃப்-லான் வாயிலாக விற்பனைக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது நீடித்து உழைக்க வேண்டும் என்பதற்காக மெட்டலைக் கொண்டு இதன் உடற்கூட்டை உருவாக்கி இருக்கின்றனர். இதுதவிர ஏபிஎஸ் மெட்டீரியலும் இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இது ஓர் ஐபி67 ரேட்டிங்கைப் பெற்ற கருவியாகவும் இது காட்சியளிக்கின்றது. ஆகையால், தூசி மற்றும் தண்ணீரால் இந்த கருவி பாதிப்படையாது என்பது தெளிவாக தெரிகின்றது. இத்துடன், ஓராண்டு வாரண்டியையும் அவர்கள் அறிவித்திருக்கின்றனர். யுனோ மிண்டா, வாகனங்களுக்கான ஆஃப்டர் மார்க்கெட் பாகங்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையிலேயே, கார்களுக்கான டிவிஆர் கருவியை அது தயார் செய்திருக்கின்றது. அடாஸ் அம்சம் மட்டுமல்ல ஆன்ட்ராய்டு ஸ்கிரீன் இணைப்பு, முழு எச்டி 1080 பால், 170 டிகிரி பார்வை திறன், வீடியோ லூப் மற்றும் யுஎஸ்பி இணைப்பு ஆகிய திறன்களும் இந்த டிவிஆர்-க்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர, 0.2 வாட் பவர் கன்செப்ஷன் வசதிக் கொண்டதாகவும் இந்த கருவியை யுனோ மிண்டா தயார் செய்திருக்கின்றது. இதில், லூப் ரெக்கார்ட்டிங் வசதியை உபயோகிக்கும்போது பழைய வீடியோக்கள் இருந்தாலும் அதை ஓவர்விரைட் செய்து புதிய வீடியோவை இது ரெக்கார்ட் செய்யும். ஆகையால், புதிய காட்சிகள் பதிவாகுவதில் எந்த சிக்கலும் ஏற்படாதும்.

இந்தியாவில் வாகனங்கள் சார்ந்த விபத்து சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இவற்றை குறைக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. மிக முக்கியமாக போக்குவரத்து விதிமீறல்களால் அரங்கேறி வரும் விபத்துகளைக் குறைக்கும் பொருட்டு, சில முக்கிய சாலைகளில் ஏஐ வசதிக் கொண்ட கேமிராக்களை அரசுகள் நிறுவி வருகின்றன.

இதன் வாயிலாக வாகன போக்குவரத்து விதிமீறல் வாதிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு அபராத செல்லாண் வழங்கப்படுகின்றது. இந்த கேமிராக்கள் காரணமாக சிலர் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவதை தவிர்த்திருக்கின்றனர். எனவே விபத்தும் அந்த சாலைகளில் சற்றே குறைந்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் வசதிக் கொண்ட டிவிஆர் கருவியை யுனோ மிண்டா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: யுனோ மிண்டா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் புதிய கார் டிவிஆர் கருவி டேஷ்கேமிராகவும் செயல்படும். அதேவேளையில், அடாஸ் அம்சமாகவும் அது செயல்படும். இதற்கு ரூ. 8,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதால் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 13, 2024, 23:31 [IST]
English summary
Uno minda unveils 1080p dvr 2 0 with adas for enhanced road safety in india
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+