உசுர கையில புடுச்சிட்டு தான் போகனும்! இந்தியாவிலேயே ஆபத்தான 2 நகரங்கள் இது தான்

இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த சாலை விபத்து மற்றும் அதில் உயிரிழந்தவர்களின் தரவுகளை வைத்து 2 நகரங்கள் அதிக பாதுகாப்பு குறைவான நகரங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தியாவில் நடந்த மொத்த விபத்துக்களில் இந்த இரண்டு நகரங்களில் தான் அதிகமாக உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கடந்த 2023ம் ஆண்டு நடந்த சாலை விபத்துகள் குறித்த தரவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி டில்லி, பெங்களூரு ஆகிய நகரங்கள் தான் சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் நகரங்களாக உள்ளன. இந்த இரு நகரங்களிலும் சேர்த்து ஒரே ஆண்டில் 2300 சாலை விபத்து மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நகரங்களில் நடந்த விபத்துகள் குறித்த விரிவான விபரங்களை காணலாம்.

Unsafe Cities For Driving

டில்லியில் மட்டும் கடந்த 2023ம் ஆண்டு 5834 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளது. இது இந்தியாவில் நடந்த ஒட்டு மொத்த சாலை விபத்துகளில் 7 சதவீதம் ஆகும். இந்த விபத்துகளில் மொத்தம் 1457 பேர் உயிரிழந்துள்ளனர். இது இந்தியா முழுவதும் நடந்த சாலை விபத்து மரணங்களில் 8 சதவீதம் ஆகும்.

இதை வயது ரீதியாக பிரித்தால் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் 205 பேர் உயிரிழந்துள்ளனர். 19-30வயதுடையவர்கள் 185 பேரும், 31-40 வயதுடையவர்கள் 156 பேரும் உயரிழந்துள்ளனர். இந்த தரவுகளை வைத்து பார்க்கும் போது வயதும் சாலை விபத்து மரணத்திற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்றே தெரிகிறது.

Unsafe Cities For Driving

டில்லியில் அசாத்பூர் சப்ஸி மண்டி என்ற பகுதியில் தான் 20 சாலை விபத்துகள் ஒரே ஆண்டில் நடந்துள்ளது. இதில் 11 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. விபத்தில் மரணம் நிகழந்ததில் இந்த ஒரு பகுதியில் 55 சதவீத விபத்துகளில் மரணங்கள் நிகழ்ந்துள்ளத. இது போக வாஸிராபாத், ஐஎஸ்பிடி காஷ்மேர் கேட், பால்ஸ்வா சவுக் ஆகிய பகுதிகளிலும் விபத்து மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

பெங்களூருவை பொருத்தவரை கடந்த2023ம் ஆண்டு மொத்தம் 807 விபத்துகள் பதிவாகியுள்ளது. இதில் 915 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இது தான் அதிக எண்ணிக்கையாகும். ஒட்டுமொத்தமாக நடந்த விபத்துகளில் 2வீலர்கள் சம்மந்தப்பட்டது மட்டும் 70 சதவீத விபத்துகள் ஆகும். பெங்களூரு நகரில் மட்டும் 1.2 கோடி டூவீலர்கள் பதிவு செய்யப்பட்டு தற்போது செயல்பாட்டில் இருப்பது தெரியவந்துள்ளது.

Unsafe Cities For Driving

கடந்த 2018ம் ஆண்டு 663 பேர் பெங்களூருவில் விபத்து பதிவாகியுள்ளது. இது கடந்த 2023ல் 870 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூரு நகர வளர்ச்சியும், வாகன எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் தான் அதிக விபத்துக்கு காரணமாக இருக்கிறது. பெங்களூரு நகரில் மொத்தம் 43 பகுதிகள் அதிக விபத்து நடக்கும் பகுதிகளாக உள்ளன. இதில் 24 பகுதிகளில் விபத்து மரணங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளது.

குறிப்பாக பைத்தாரன்யபுரா ஜங்ஷன், சும்மன்னஹள்ளி ஆகிய பகுதிகளில் தலா 11 மரணங்களும், சதாஹள்ளி பகுதியில் 10 மரணங்களும், யலஹன்கா ஏர் ஃபார்ஸ் ஸ்டேஷன் பகுதிகிளல் 8 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. இந்த பகுதிகளில் விபத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Unsafe Cities For Driving

கர்நாடக மாநிலத்தில் ஒவ்வொரு 11 மணி நேரத்திற்கும் ஒரு விபத்து நடக்கிறது ஒவ்வொரு 12 மணி நேரத்திற்குள் ஒரு நபர் உயிரிழக்கிறார். கடந்த 5.5 ஆண்டுகளில் மொத்தம் 2.1 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 60115 மரணங்கம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்துகள் பெரிய அளவில் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்துகிறது. இது மட்டுமல்லாமல் டிராஃபிக் பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.

இந்த விபத்துகளால் இன்சூரன்ஸ் மூலம் கிளைம் செய்வது அதிகமாகியுள்ளது. இது போக குடும்பங்களுக்கு மருத்துவமனை செலவுகள், நீண்ட கால இழப்பு உள்ளிட்ட விஷயங்களும் நடந் வருகின்றன. பெங்களூரு போன்ற நகரங்கள் தொழிற்நுட்ப வளர்ச்சியால் வளரும் நகரங்களாக உள்ளன. இங்கு இளைஞர்கள் பலர் பணியாற்றுவதால் இங்கு சாலை விபத்துகளில் அவர்கள் அதிகம் சிக்குகிறார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தரவுகளை வைத்து பார்க்கும் போது ஒரு நகரில் ஒட்டு மொத்த வளர்ச்சியும் வந்தால் அங்கு மக்கள் தொகை அதிகமாகிறது. மக்கள் தொகை அதகிமானால் இப்படியான பிரச்சனைகள் அதிகமாகிறது. இதை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதலில் குறிப்பிட்ட நகரங்களை நோக்கி வளர்ச்சியை குறைக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, September 22, 2025, 12:20 [IST]
English summary
Unsafe cities for driving india 2 most dangerous places
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X