பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் வித்தியாசமான வாகனங்கள்...!

நாம் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ உதவுபவர்களில் முக்கியமானவர்கள் போலீசார்தான். மழை, வெயில், பனி என எந்தவிதமான சூழலிலும் தங்கள் கடமையை ஆற்ற அவர்கள் தயாராக இருப்பார்கள்.

By Arun

நாம் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ உதவுபவர்களில் முக்கியமானவர்கள் போலீசார்தான். மழை, வெயில், பனி என எந்தவிதமான சூழலிலும் தங்கள் கடமையை ஆற்ற அவர்கள் தயாராக இருப்பார்கள். ஒரு சில தவறான போலீசாரை முன் உதாரணமாக வைத்து கொண்டு, நாம் அனைவரையும் குற்றம் சொல்லி விட முடியாது. ஆனால் நமது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்படும் போலீஸ் படைகளுக்கு, துபாய் போலீசாரை போன்ற அதிநவீன வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. எனினும் சில கடினமான நிலப்பகுதிகளில் பாதுகாப்பாக செல்ல அவர்களுக்கு சில விசேஷமான மற்றும் வித்தியாசமான வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை என்ன? என்பதை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் வித்தியாசமான வாகனங்கள்...!

ஏடிவி

தமிழ்நாடு போலீசில் சிஎஸ்ஜி என்ற ஒரு பிரிவு செயல்பட்டு வருகிறது. சிஎஸ்ஜி என்றால் கோஸ்டல் செக்யூரிட்டி க்ரூப். அதாவது கடலோர பாதுகாப்பு படை. ஏடிவி எனப்படும் ஆல் டெர்ரைன் வெய்கிலை சிஎஸ்ஜி பயன்படுத்தி வருகிறது.

பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் வித்தியாசமான வாகனங்கள்...!

போலீஸ் படைக்காக தனித்துவமான முறையில் ஏடிவி வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 500 சிசி திறன் கொண்ட இந்த ஏடிவி வாகனங்கள், ஹாங்காங்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.

பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் வித்தியாசமான வாகனங்கள்...!

இந்த ஏடிவி வாகனங்கள் மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தளர்வான கடற்கரை மணலில் ஏடிவி வாகனங்கள் எந்த சிரமமும் இன்றி மிகச்சிறப்பாக செல்லும்.

பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் வித்தியாசமான வாகனங்கள்...!

போலரிஸ் க்ரூ 800

போலரிஸ் என்பது ஒரு அமெரிக்க நிறுவனம். அனைத்து விதமான நிலப்பரப்பிலும் செல்லக்கூடிய வாகனங்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம்தான் போலரிஸ். கேரள போலீசாரிடம் போலரிஸ் க்ரூ 800 வாகனங்கள் உள்ளன.

பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் வித்தியாசமான வாகனங்கள்...!

நக்சலைட்டுகளை எதிர்த்து போராடுவதற்காக, போலரிஸ் க்ரூ 800 வாகனங்களை கேரள போலீசார் வாங்கியுள்ளனர். எனினும் தற்போதைய நிலையில் அந்த வாகனங்களை கடற்கரை ரோந்து பணியில் பயன்படுத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் வித்தியாசமான வாகனங்கள்...!

கேரள மாநிலத்தின் பல்வேறு கடற்கரைகளில் இந்த போலரிஸ் க்ரூ 800 வாகனங்களை காண முடியும். 6 பேர் அமர்ந்து பயணிக்கக்கூடிய வகையில் வடிமைக்கப்பட்டுள்ள போலரிஸ் க்ரூ 800 வாகனத்தின் விலை 18 லட்ச ரூபாய்.

பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் வித்தியாசமான வாகனங்கள்...!

ரெனால்ட் ஷெர்பா

ரெனால்ட் ஷெர்பா வாகனங்கள் மாநில போலீஸ் படைகளால் பயன்படுத்தப்படுவது இல்லை. ஆனால் மாநில போலீஸ் படைக்கு உதவி செய்வதற்காக, என்எஸ்ஜி எனப்படும் தேசிய பாதுகாப்பு படையினர் ரெனால்ட் ஷெர்பா வாகனத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் வித்தியாசமான வாகனங்கள்...!

சமீபத்தில் அச்சுறுத்தல்கள் வந்ததால் டெல்லி விமான நிலையத்தில் ரெனால்ட் ஷெர்பா வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. மிகப்பெரிய அளவில் காட்சியளிக்கும் ரெனால்ட் ஷெர்பா வாகனத்தில், 4.76 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் வித்தியாசமான வாகனங்கள்...!

215 பிஎச்பி, 800 என்எம் டார்க் திறனை உருவாக்ககூடியதுதான் ரெனால்ட் ஷெர்பா வாகனம். 11 டன் எடை கொண்ட இந்த வாகனம் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.

பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் வித்தியாசமான வாகனங்கள்...!

மகேந்திரா மார்க்ஸ்மேன்

மகேந்திரா மார்க்ஸ்மேன் வாகனத்தை பல்வேறு மாநிலங்களின் போலீசார் பயன்படுத்தி வருகின்றனர். கலவர தடுப்பு பணியில் மகேந்திரா மார்க்ஸ்மேன் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்தியாவின் முதல் லைட் புல்லட் ப்ரூப் வாகனம் மகேந்திரா மார்க்ஸ்மேன்தான் என்பது இதன் சிறப்பம்சம்.

பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் வித்தியாசமான வாகனங்கள்...!

கடுமையான துப்பாக்கி சூடு, கையெறி குண்டு, கண்ணி வெடி என எந்த பாச்சாவும் மகேந்திரா மார்க்ஸ்மேனிடம் பலிக்காது. இதன் ப்ளோர் அவ்வாறான கவசத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 2.5 லிட்டர் சிஆர்டிஇ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 105 பிஎச்பி பவரையும், 228 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் வித்தியாசமான வாகனங்கள்...!

மகேந்திரா மார்க்ஸ்மேனில் 6 பேர் அமர்ந்து பயணிக்க முடியும். 3,200 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் மகேந்திரா மார்க்ஸ்மேனுக்கு உள்ளது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் மகேந்திரா மார்க்ஸ்மேன் பயணிக்கும். மகேந்திரா நிறுவனம் இந்த வாகனத்தை சிலி நாட்டுக்கும் ஏற்றுமதி செய்கிறது. சிலியில் உள்ள பாதுகாப்பு மற்றும் பாராமிலிட்டரி படைகள் மகேந்திரா மார்க்ஸ்மேனை பயன்படுத்துகின்றன.

பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் வித்தியாசமான வாகனங்கள்...!

ஸீலெக்ஸ் போட்

நிலம், நீர் என இரண்டிலும் பயணிக்கக்கூடிய ஸீலெக்ஸ் போட் வாகனம் மும்பை போலீசாரிடம் உள்ளது. கடற்கரையோர பகுதிகளில் ரோந்து செல்ல இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நிலம், நீர் என இரண்டு வகையான மேற்பரப்புகளிலும் ஸீலெக்ஸ் போட் எவ்விதமான பிரச்னையும் இல்லாமல் பயணிக்கும்.

பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் வித்தியாசமான வாகனங்கள்...!

ஸீலெக்ஸ் போட் வாகனங்களை இயக்க மும்பை போலீசில் தனி யூனிட் செயல்பட்டு வருகிறது. மும்பை மாநகர கடற்கரைகளில் ஸீலெக்ஸ் போட் வாகனத்தை அடிக்கடி காண முடியும்.

பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் வித்தியாசமான வாகனங்கள்...!

ஸீலெக்ஸ் கார்

ஸீலெக்ஸ் போட்டை போல் ஸீலெக்ஸ் காரும் மும்பை போலீசாரிடம்தான் உள்ளன. இதில், 8 சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். 4 பேர் அமர்ந்து பயணிக்கலாம். இது மிக வேகமாக செல்லக்கூடியது. எனவே அதிக சுறுசுறுப்பாக செயல்பட ஸீலெக்ஸ் போட்டை காட்டிலும், ஸீலெக்ஸ் காரைதான் போலீசார் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் இதன் பயன்பாடு கடற்கரையோர பகுதிகளுடன் முடிந்து விடுகிறது.

பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் வித்தியாசமான வாகனங்கள்...!

அசத்தும் துபாய் போலீஸ்

இந்த கட்டுரையின் முதல் பத்தியில் துபாய் போலீசாரை போன்று அதிநவீன வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்ற ஒரு வரியை படித்திருப்பீர்கள். துபாய் போலீசாரிடம் அப்படி என்ன அதிநவீன வசதிகள் உள்ளன என்று தெரிந்து கொண்டால் ஆச்சரியப்படுவீர்கள்.

பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் வித்தியாசமான வாகனங்கள்...!

லம்போர்கினி அவெண்டார், ஃபெராரி எப்எப், பிஎம்டபிள்யூ ஐ8, புகாடி வேரான், ஆஸ்டன் மார்டின் ஒன்-77, மெர்சிடெஸ் பென்ஸ் ப்ராபஸ் ஜி-63 ஏஎம்ஜி உள்ளிட்ட அதிநவீன வசதிகள் கொண்ட லக்ஸரி கார்களை துபாய் போலீசார் பயன்படுத்துகின்றனர். எனவேதான் துபாயில் குற்றங்கள் குறைவாக நடைபெறுகின்றன போலும்...!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
UNUSUAL vehicles of Indian police forces. read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X