டீசலில் இயங்கும் டிரெயின் ஒரு கிமீ தூரம் பயணிக்க எத்தனை லிட்டர் டீசல் தேவைப்படும்னு உங்களுக்கு தெரியுமா?

இந்தியாவில் ரயிலில் பயணிக்காதவர்களே இருக்க முடியாது. குறிப்பாக, அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் மிகப் பெரிய போக்குவரத்தாக ரயில்களே இருக்கின்றன. மேலும், மிகப் பெரிய நெட்வொர்க்கைக் கொண்ட ஓர் துறையாகவும் நமது இந்தியன் ரயில்வேஸ் உள்ளது. இன்றைய தேதி நிலவரப்படி, நாடு முழுக்க பல்வேறு பகுதிகளில் மின்சாரத்தில் இயங்கும் ரயில்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுவிட்டன. இருப்பினும் குறிப்பிட்ட சில பகுதிகளில் டீசல் ரயில்கள் இப்போதும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த டீசல் ரயில்களின் மைலேஜ் பற்றிய விபரத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

நம்மில் பலர் டீசலில் இயங்கும் ரயிலில் பயணித்திருக்கலாம். ஆனால், அந்த ரயில்கள் என்ன மாதிரியான மைலேஜை வழங்கும் என கேட்டால் அவர்களுக்கு அதுபற்றி எதுவும் தெரியாது. ஆனால், இனி யாரும் இதுபற்றி தெரியாமல் இருக்கப்போவதில்லை. இந்த பதிவில் ஓர் டீசல் ரயிலுக்கு ஒரு கிலோமீட்டர் பயணிக்க எவ்வளவு டீசல் தேவைப்படும் என்கிற தகவலையே வழங்கியுள்ளோம்.

Diesel trains mileage details

டீசல் ரயில்களின் வகை, எடை, திறன் வெளிப்பாடு மற்றும் பயணிக்கும் தூரம் ஆகியவற்றைப் பொருத்தே அவற்றின் மைலேஜை தரும் திறனும் அமைகின்றது. உதாரணமாக, 12 பெட்டிகளைக் கொண்ட ஓர் டீசல் லோக்கோமோட்டிவ் பயணிகள் ரயில் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும் என்றால் அதற்கு 6 லிட்டர் வரை டீசல் தேவைப்படும்.

அதுவே, 24 பெட்டிகள் கொண்ட ஒரு சூப்பர் ஃபாஸ்ட் ரயில் அதே ஒரு கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும் என்றாலும் அதே 6 லிட்டர் டீசலே தேவைப்படுகின்றது. ஆனால், இதுவே 12 கோச்சுகளைக் கொண்ட எக்ஸ்பிரஸ் ரயிலாக இருந்தால் அது ஒரு கிலோமீட்டரைக் கடக்க 4.5 லிட்டர் டீசலே போதுமானதாக உள்ளது.

தற்போதைய தரவுகளின்படி, இந்தியாவில் ஒரு ரயில்கூட ஒரு லிட்டர் டீசலுக்கு ஒரு கிமீ மைலேஜை வழங்கும் திறனைக் கொண்டதாக இருக்கவில்லை என்பது தெரிய வந்திருக்கின்றது. எனவே, ஒரு ரயில் ஒரு கிமீ தூரம் பயணிக்க வேண்டும் என்றாலே 4க்கும் அதிகமான லிட்டர் டீசலை எடுத்துக் கொள்ளும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

ஒரு வழக்கமான டீசல் எஞ்சின் கொண்ட கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கே 10 கிமீ முதல் 20 கிமீ வரையில் மைலேஜ் வழங்கும் நிலையில் இந்தியன் ரயில்வேஸில் உள்ள ரயில்கள் சில லிட்டர் டீசலுக்குதான் ஒரு கிமீ மைலேஜை வழங்கும் என்பது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

இதற்கு ரயிலின் அதிகப்படியான எடையும், அதிக பெட்டிகளின் எண்ணிக்கையுமே காரணமாக உள்ளது. ஆமாங்க, ரயில் பெட்டிகளின் அதிக எண்ணிக்கையே அதன் மைலேஜை பெரிதும் பாதிக்கிறது. குறைவான பெட்டிகளைக் கொண்டிருக்கும் ரயில்களின் இயக்கத்திற்கு குறைவான அழுத்தமே போதுமானதாக இருக்கின்றது. ஆகையால், இங்கு குறைவான எரிபொருளே செலவாகின்றது.

அதேவேளையில், அதிக பெட்டிகள் இருக்குமானால் அதிக இழுவை திறன் அங்கு தேவைப்படுகின்றது. இதன் விளைவாக அதிக எரிபொருள் நுகர்வு ஏற்படும். இதன் விளைவு மைலேஜும் குறையக் கூடுகின்றது. அதேவேளையில், பயணிகள் ரயில்கள், எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் ரயில்களை விட அதிக வேகமாக எரிபொருளை நுகர்கின்றதே என்கிற சந்தேகம் உங்களுக்கு எழும்பலாம்.

இங்கு வழக்கமான பயணிகள் ரயில்கள் அதிக நிறுத்தங்களில் நின்று செல்வதுதான் இதற்கு காரணமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் ரயில் நின்றுவிட்டு மீண்டும் புறப்படும்போது அதிக அழுத்தம் தேவைப்படுகின்றது. இதன் விளைவாக அதிக எரிபொருள் அப்போது செலவழிக்கப்படுகின்றது. இதன் விளைவாகவே மைலேஜ் தருவதில் வழக்கமான பயணிகள் ரயில் பலமடங்கு பின்தங்கிக் காணப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியன் ரயில்வேஸுக்கு அதிக செலவை ஏற்படுத்தக் கூடியதாக டீசல் எஞ்சினைக் கொண்ட பயணிகள் ரயில்கள் உள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்தியன் ரயில்வேஸின்கீழ் பெரிய அளவில் டீசலில் இயங்கும் எஞ்சின் கொண்ட ரயில்கள் இப்போது பயன்பாட்டில் இல்லை. நாட்டின் ஏதோ ஓர் மூலையிலேயே இந்த வகை ரயில்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

குறிப்பாக, இந்தியன் ரயில்வேஸ் 100 சதவீத மின்சார ரயில் இயக்கத்தை நோக்கி மிக வேகமாக நகர்ந்துக் கொண்டிருக்கின்றது. விரைவில் அந்த இலக்கையும் அது அடைந்துவிடும் என தெரிகின்றது. மேலும், வந்தே பாரத் போன்ற அட்வான்ஸ்டு ரயில்களையும் இந்தியன் ரயில்வேஸ் தன்னுடைய சேவையில் இணைத்து வருகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, September 23, 2024, 5:00 [IST]
English summary
Unveiling diesel consumption and mileage in indian railways trains
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+