எலெக்சன் எதும் வரபோகுதோ... போட்டா செல்லாண் எல்லாத்தையும் ரத்து செய்ய பாஜக கவர்மென்ட் திட்டம்!
போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்கும் விதமாக போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு உச்சபட்ச அளவில் இந்தியாவில் அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. உதாரணமாக, ஓர் இருசக்கர வாகன ஓட்டி டூ-வீலரை இயக்கும்போது ஹெல்மெட் அணியவில்லை எனில் அந்த நபரிடம் இருந்து ஆயிரம் ரூபாய் வரை அபராதமாக வசூல் செய்யப்படுகின்றது.
இந்த தொகையில் இரண்டு ஹெல்மெட்டுகளை நம்மால் வாங்கிக் கொள்ள முடியும். ஆகையால், அரசு அபராதம் வசூலிப்பதற்கு பதிலாக அதே அபராதத் தொகையைப் பெற்றுக் கொண்டு ஹெல்மெட்டை வழங்கலாம். ஆனால், அபராதத்தை மட்டுமே அரசு வசூல் செய்கின்றது. தொடர்ந்து, ஹெல்மெட்டை வாங்கி வந்து இருசக்கர வாகனத்தை பெற்றுச் செல்லுமாறு வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

மீண்டும் தவறு செய்யக் கூடாது என்பதற்காகவே அரசு இவ்வாறு செய்கின்றது. ஆனால், அந்த வாகன ஓட்டி திருந்துவாரா? என பார்த்தால் கட்டாயம் இல்லை என்றே கூற முடியும். சூழலே இதுபோன்று இருக்கின்ற நிலையில் போடப்பட்ட அபராத செல்லாண்களை எல்லாம் ஓர் மாநில அரசு ரத்து செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உபி மாநிலத்திலேயே இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கடந்த 2017ம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரையில் போடப்பட்ட அபராத செல்லாண்களை ரத்து செய்திருக்கின்றது. இந்த காலகட்டத்தில் அபராத செல்லாணைப் பெற்று யாரேனும் கட்டாமல் இருந்தால் அந்த அபராதத்தை இனி கட்ட வேண்டியது இல்லை.

இது தனி நபர் மற்றும் வர்த்தக வாகனங்கள் என அனைத்திற்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. இந்த நல்ல முடிவை அரசு எட்டுவதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்கு நடைபெற்று வந்தால், அந்த வழக்குகளுக்கும் இது பொருந்தும் என கூறப்பட்டு உள்ளது.
சிலர், தங்களுக்கு தவறுதலாக அபராதம் வழங்கப்பட்டு இருப்பதாக கூறி நீதிமன்றத்தின் உதவியை நாடி இருக்கின்றனர். அவர்கள் இனி மகிழ்ச்சியுடன் இருக்கலாம். ஆனால், ஏற்கனவே அபராதத்தை செலுத்தியவர்களை இந்த தகவல் அதிர செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, அவர்களை இந்த தகவல் கவலையடையச் செய்திருக்கின்றது என்றே கூறலாம்.

இதுதொடர்பாக உபி மாநிலத்தின் போக்குவரத்து ஆணையர் சந்திரபூஷன் சிங் கூறியதாவது, "2017 ஜனவரி 1 தொடங்கி 2021 டிசம்பர் 31 வரையில் போடப்பட்ட அனைத்து அபராத செல்லாண்களும் ரத்து செய்யப்படுவதாக" தெரிவித்தார். அதேவேளையில், ஜனவரி 1, 2022 ஆம் ஆண்டில் இருந்து போடப்பட்ட அபராத செல்லாண்கள் நிலுவையில் இருக்கும். இந்த காலக்கட்டத்தில் இருந்து போடப்பட்ட செல்லாண்களுக்கு கட்டாயம் வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்தியே ஆக வேண்டும் என்றும் அவர் கூறினார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது ஹெல்மெட்டிற்கு வசூல் செய்யப்படும் ஆயிரம் ரூபாய் அபராதம் பலரின் இரண்டு நாள் ஊதியமாக இருக்கின்றது. ஒரு சிலருக்கு ஒரு வாரம் ஊதியமாகவும் இருக்கின்றது. இத்தகையோர் காசை மிச்சப்படுத்தவேதலைக்கவசம் இல்லாமல் டிராவல் செய்துக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியானோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் கூடுதல் மாபெரும் சுமையாக அமைகின்றது. இந்தமாதிரியானோர் வாகனங்களை அப்படியே போலீஸிடத்தில் விட்டுவிட்டு சென்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications
