உ.பி உருவாக்கும் "செம மாடல்" தமிழ்நாட்டுல கூட இப்படி ஒருவிஷயம் இல்லை, பெட்ரோல் விலையில் கெத்து காட்டும் யோகி

உ.பி மாநில அரசு பெட்ரோல் விலை தொடர்பாக மாநில அரசின் வாட் வரியை உயர்த்த போவதில்லை என அறிவித்துள்ளது. இதனால் இனி தமிழகத்தை விட உ.பியில் பெட்ரோல் விலை மிகவும் குறைவாகவே இருக்கும். இது குறித்த முழு விபரங்களை காணலாம் வாருங்கள்.

உ.பி உருவாக்கும்

இன்று இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை பெட்ரோல், டீசல் விலை தான் லிட்டருக்கு ரூ100-ஐ தாண்டி சில மாநிலங்களிலும் சில மாநிலங்களில் ரூ100க்கு குறைவாகவும் விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் விலையில் பெரும் பங்கு வரிகளாகதான் மத்திய மாநில அரசுக்கு செல்கிறது. பெட்ரோல் இதுவரை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படவில்லை. அதனால் பெட்ரோலை பொருத்தவரை மத்திய அரசு மாநில அரசு என தனித்தனியே வரிகளை விதித்து வருகின்றன.

உ.பி உருவாக்கும்

பெட்ரோல் மீது மத்திய அரசு எக்ஸஸ் டூட்டி மற்றும் செஸ் வரி ஆகியவற்றை விதிக்கிறது. மாநில அரசு விற்பனை வரி மற்றும் மதிப்பு கூட்டல் வரியை விதிக்கிறது. இதனால் இன்று பெட்ரோல்/டீசல் விலை ரூ 100 தொட்டு விற்பனையாகிறது. கிட்டத்தட்ட தற்போது விற்பனையாகும் விலையில் பாதிக்கும் குறைவான விலையில் தான டீலருக்கு பெட்ரோல் விலை விற்பனையாகிறது. ஆனால் மீதிபாதி தொகை மத்திய மாநில அரசுகளுக்கு வரியாக செலுத்தப்படுகிறது.

உ.பி உருவாக்கும்

இந்நிலையில் பெட்ரோல் விலையேற்றம் நடக்கும் போது எல்லாம் மத்திய அரசு மாநில அரசுகளையும், மாநில அரசுகள் மத்திய அரசையும் குற்றம் சுமத்தி வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

உ.பி உருவாக்கும்

இந்நிலையில் வேறு எந்த மாநில அரசும் அறிவிக்காத ஒரு விஷயத்தை தற்போது உத்திர பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. தற்போது அம்மாநில தலைநகர் லக்னோவை பொருத்தவரை லிட்டருக்கு ரூ96.36 என்ற விலையில் பெட்ரோலும், ரூ89.56 என்ற விலையில் டீசலும் விற்பனையாகிறது. இதில் மத்திய மாநில அரசுகளின் வரிகள் அடங்கும்.

உ.பி உருவாக்கும்

இந்நிலையில்தான் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பரபரப்பான அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார். அதன்படி பெட்ரோல் டீசலுக்குகான மாநில அரசின் மதிப்பு கூட்டல் வரி இனி மாநில அரசு உயர்த்தாது என அறிவித்துள்ளார்.

உ.பி உருவாக்கும்

தற்போது இந்தியாவிலேயே மிகக் குறைவான மதிப்பு கூட்டல் வரி கொண்ட மாநிலமாக உத்திர பிரதேச மாநிலம் தான் இருக்கிறது. தற்போது இருக்கும் இதே வரி தான் இனி தொடர்ந்து இருக்கும் இது மக்கள் நலன் கருதி கூட்டப்படமாட்டாது என கூறியுள்ளார்.

உ.பி உருவாக்கும்

தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் மதிப்பு கூட்டல் வரியாக லிட்டருக்கு ரூ15.84 வசூலிக்கிறது. மத்திய அரசு லிட்டருக்கு ரூ28 வசூலிக்கிறது. இந்தியா முழுவதும் பெட்ரோல்/டீசலுக்காக மாநில அரசுகள் வசூலிக்கும்வரியிலேயே உத்திர பிரதேச மாநிலத்தில் தான் குறைவான வரி இருந்தது. சமீபத்தில் மத்திய அரசு விதித்த வரிகுறைப்பிற்கு முன்பு அம்மாநில அரசு 26 சதவீதம் வரி விதித்திருந்தது. தற்போது அதில் லிட்டருக்கு ரூ12 வரை விலையை குறைத்தது.

உ.பி உருவாக்கும்

தமிழகத்தை பொறுத்தவரை 13 சதவீதம் தான் மதிப்பு கூட்டல் வரி விதித்தாலும் கூடுதலாக லிட்டருக்கு ரூ11.5 என கூடுதல் வரியை விதிக்கிறது. அதன்படி தற்போது உள்ள பெட்ரோல் விலையில் கிட்டத்தட்ட லிட்டருக்கு ரூ23 மாநில அரசின் வரியாக இருக்கிறது. ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தில் மாநில அரசின் வரி என்பது லிட்டருக்கு ரூ14 என்ற வகிதத்தில் தான் இருக்கிறது. அம்மாநிலத்தில் இனி வாட் வரியை கூட்டப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் இனி எப்பொழுதும் தமிழகத்தை விட உத்திர பிரதேசத்தில் பெட்ரோல் விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, July 31, 2022, 10:48 [IST]
English summary
Up govt decided not to increase vat on petrol and diesel
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+