முதல்வரை குலசாமியாக வழிபட போறாங்க! 17 லட்சம் பேருக்கு எதிர்பார்க்காத விஷயத்தை செய்து அசத்திட்டாரு!

சாலையில் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியதற்காக வழங்கப்பட்ட சில செல்லான்களை ரத்து செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி சுமார் 17 லட்சம் செல்லான்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியா சாலைகளில் வாகனம் ஓட்ட இந்திய மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்ற வேண்டியது அவசியம் ஆகும். இப்படியாக சட்ட விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். பெருநகரங்களில் வாகன விதிமுறை மீறல்கள் அதிகமாக இருப்பதால் ஆங்காங்கே ஸ்பீடு கேமராக்கள் வைத்து கண்காணிக்கப்படுகிறது.

traffic challan cancel

இப்படியாக கண்காணிக்கப்படும் போது அதில் விதிமுறை மீறும் வாகனங்கள் சிக்கினால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இந்த வாகனத்தின் நம்பர் பிளேட்டை கண்டறிந்து அந்த வாகனத்திற்கு தானியங்கியாக அபராதம் விதிக்கிறது. இந்த தொழில்நுட்பம் சென்னை,பெங்களூர் மும்பை, டெல்லி போன்ற பல முக்கிய நகரங்களில் தற்போது செயல்பாட்டில் உள்ளன. இந்தப் பகுதிகளில் அதிக நெருக்கடி உள்ள இடங்களில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இப்படியாக விதிக்கப்படும் அபராதங்கள் குறிப்பிட்ட வாகன எண்ணின் மேல் செல்லான்கள் விதிக்கப்பட்டு அதன் உரிமையாளருக்கு அது குறித்த தகவல் தெரிவிக்கப்படும். அவர் அந்த அபராதத்தை ஆன்லைன் மூலமே செலுத்தலாம். அல்லது நேரிலும் செலுத்தலாம். இந்நிலையில் இப்படியாக விதிக்கப்பட்ட செல்லான்கள் நீண்ட ஆண்டுகளாக செலுத்தப்படாமல் இருக்கும் நிலையில் அதை ரத்து செய்ய உபி மாநில முதல்வர் முடிவு செய்துள்ளார்.

traffic challan cancel

அதன்படி நொய்டா பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை விதிக்கப்பட்ட டிராபிக் அபராத செல்லான்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளார். இந்த காலகட்டத்தில் மொத்தம் 17,89,463 டிராபிக் செல்லான்கள் நிலுவையில் இருக்கிறது. இந்த செல்லான்களை உரிய நபர்கள் யாரும் செலுத்த தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் தினம் தோறும் வாகனம் ஓட்டும் நபர்கள், டெலிவரி ஊழியர்கள், டாக்ஸி டிரைவர்கள் உள்ளிட்ட பலர் பலனடைந்துள்ளனர். குறிப்பிட்ட இந்த காலத்திற்குள் வாகன ஓட்டிகளுக்கு நொய்டா பகுதியில் சட்ட விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் மிதிக்கப்பட்டிருந்தால் அது அவரது தொகையை செலுத்த வேண்டிய தேவை இல்லை எனவும், விரைவில் இந்த அபராதம் குறித்த அறிவிப்பு செல்லான்கள் இ-செல்லான் போர்ட்டலில் இருந்து நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

traffic challan cancel

ஒருவேளை இந்த காலகட்டத்திற்குள் யாராவது சட்ட விதிமுறைகளை மீறி அவர்களது செல்லானை பெற்று அந்த அபராதத்தை செலுத்தி இருந்தால் எதுவும் செய்ய முடியாது. அவர்களுக்கு பணம் ரிட்டனும் கிடைக்காது. சுமார் 7 லட்சம் அபராத செல்லான்கள் இந்த காலகட்டத்திற்குள் ஏற்கனவே திருப்பி செலுத்தப்பட்டு விட்டன. மீதம் இருப்பது தான் இந்த 17 லட்சம் செல்லான்கள்.

உபி மாநில முதல்வர் இப்படியாக டிராபிக் செல்லான்களை ரத்து செய்வது இது ஒன்றும் முதல் முறை அல்ல. ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான சில 30,000 செல்லான்களை அவர் ரத்து செய்து இருந்தார். இந்த செல்லான்கள் குறித்த தரவுகள் எல்லாம் இ-செல்லான் போர்ட்டலில் இருந்து நீக்கப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக இதை கையில் எடுத்துள்ளார்.

traffic challan cancel

நீண்ட காலமாக இந்த செல்லான்கள் நிலுவையில் இருப்பதால் இவை அரசுக்கு சுமையாக இருக்கிறது. அதே நேரம் நீண்ட காலமாக செல்லான்கள் செலுத்தப்படாமல் இருந்தால் அவர்கள் நிச்சயம் கஷ்டப்படும் ஊழியர்களாக இருப்பார்கள். அதனால் அவர்களது செல்லானிற்கான பணத்தை திரும்ப பெறுவது என்பது அவ்வளவு சுலபமான விஷயமாக இருக்காது என்பதால் அரசை இதை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்படியாக செலுத்தப்படாத அபராத சில ஆண்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் இருக்கிறது. இதில் திரும்ப வராது என அரசு கருதும் செல்லான்களை ரத்து செய்வது சிறந்த ஐடியா தான். இதன் மூலம் அரசுக்கு இருக்கும் பெரும் பணி சுமை குறையும். மேலும் இப்படியாக விதிக்கப்படும் செல்லான்கள் என்பது எப்பொழுதும் திரும்ப வராத கணக்கில் தான் சேரும்.

Article Published On: Saturday, October 21, 2023, 20:30 [IST]
English summary
Up govt to forgive 17 lakh traffic challans what if already paid
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X