காரில் நம்பர் பிளேட்டிற்கு பதிலாக ஜாதி பெயருடன் வலம் வந்த இளைஞர்! போலீசார் போட்ட ஹெவியான அபராதம்!

உ.பி மாநிலத்தில் தனது ஃபார்ச்சூனர் காரில் நம்பர் பிளேட்டிற்கு பதிலாக ஜாதி பெயரை அச்சிட்டு வலம் வந்த இளைஞரை போலீசார் பிடித்து அவரது வாகனத்தை கை பற்றி அவருக்கு அதிகமான தொகையை அபராதமாக விதித்துள்ளனர். இதுகுறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

வாகனங்களின் நம்பர் பிளேட்டை டேம்பரிங் செய்வது இந்திய மோட்டார் வாகன சட்டப்படி குற்றமாகும். ஆனால் இந்தியாவில் இந்த குற்றம் அதிகமாக நடக்கிறது. பல வாகனங்கள் தங்கள் இஷ்டத்திற்கு நம்பர் பிளேட்டை டிசைன் செய்து வித்தியாச வித்தியாசமாக நம்பர் எழுதியோ அல்லது எழுத்துக்களை எழுதியோ டிசைன் செய்து வருகின்றனர். இப்படியாகச் செய்வது சட்டப்படி குற்றமான செயலாகும்.

காரில் நம்பர் பிளேட்டிற்கு பதிலாக ஜாதி பெயருடன் வலம் வந்த இளைஞர்! போலீசார் போட்ட ஹெவியான அபராதம்!

இந்திய அரசு வாகனங்களுக்காக தற்போது ஹைசெக்யூட்ரிட்டி ரிஜிஸ்ட்ரேஷன் பிளேட்களை பயன்படுத்துகிறது. குறிப்பாக டில்லி என்சிஆர் பகுதியில் வாகனங்களில் இந்த ஹைசெக்யூரிட்டி நம்பர் தட்டு கட்டாயம் என அறிவித்துள்ளது. இப்படியான நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நம்பர் பிளேட் ஸ்ரூக்கள் ஒரு முறை மட்டுமே பொருத்தும் படி கொடுக்கப்பட்டுள்ளது. அதை அகற்றிவிட்டால் மீண்டும் பொருத்த முடியாது.

இப்படியாக நம்பர் பிளேட்களை டேம்பரிங் செய்வதில் பலர் குற்றச் செயல்களுக்காக ஈடுபடுத்துகின்றனர். சிலர் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அதைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக வட இந்தியாவில் இப்படியான நம்பர் பிளேட்களில் ஜாதி பெயரை அச்சிட்டு நகர்ப் பகுதிகளில் உலா வருகின்றனர். இது ஜாதிய ரீதியிலான மோதல்களுக்குக் காரணமாக அமைகிறது. இந்நிலையில் அரசு இப்படியாக பொது வெளியில் ஜாதியைப் பெயர்களை அடையாளப்படுத்தும்படி செயல்படுவதை மத்திய மாநில அரசுகள் பல்வேறு சட்டங்கள் மூலம் தடுத்து வருகின்றன.

இந்நிலையில் உ.பி மாநிலம் வாரணாசி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் வாகனத்தின் நம்பர் பிளேட்டிற்கு பதிலாகத் தனது ஜாதி பெயரை அச்சிட்டு பயன்படுத்தி வந்துள்ளார். இது குறித்து உ.பி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் உ.பி போலீசார் சோதனை சாவடிகளுக்கு இப்படியான வாகனங்கள் வந்தால் அதை நிறுத்திவைத்து தகவல் தெரிவிக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி இந்த கார் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாரணாசி காண்ட் தானா சோதனை சாவடியை கடக்க முயன்றுள்ளது. அப்பொழுது இந்த காரை பார்த்த போலீசார் இதை நிறுத்தி போலீஸ் ஸ்டேஷனிற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் அங்கு வந்த போலீசார் அந்த வாகனத்தை கை பற்றி அந்த வாகனத்திற்கு ரூ28,500 அபராதம் விதித்து செல்லான் வழங்கியுள்ளனர்.

இந்த வாகனத்தின் உரிமையாளர் யார், எந்த சட்டத்தின் அடிப்படையில் ரூ28,500 அபராதம் விதிக்கப்பட்டது. என்ற விபரங்களை உ.பி போலீசார் வழங்கவில்லை. வெறும் ரூ28,500 மட்டுமே அபராதமாக வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். உ.பி மாநிலத்தில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதமே இப்படியாக கார்களில் ஜாதிய பெயர்களை அச்சிடுவது சட்டப்படி குற்றம் என அறிவித்தனர். அதன் பின்னர் இந்த வழக்கில் பல வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையும் மீறி ஜாதிய பெயர்களை வாகனங்களில் அச்சிடுவது முதல் முறை ரூ500 அபராதத்தை மோட்டார் வாகன சட்டம் பிரிவு 177ன் கீழ் விதிக்கவும் தொடர்ந்து இந்த தவற்றைச் செய்தால் ரூ1500 அபராதம் விதிக்கவும் சட்டம் உள்ளது.

முன்னதாக இப்படியாக ஜாதிய பெயர்களை கார்களில் பயன்படுத்துவது குறித்து மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியரான ஹர்ஷல் பிரபு என்பவர் பிரதமர் மோடிக்கு இது குறித்து கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதம் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதன் பின்னர் இப்படியாக வாகனங்களில் ஜாதிய பெயர்களுடன் வலரும் வருபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கத் துவங்கினர்.

இப்படியாக ஜாதிய பெயருடன் உள்ள காரை நடவடிக்கை எடுப்பது இது முதன் முறை அல்ல. உ.பி மாநிலம் கவுதம் புத் போலீஸ் ஸ்டேஷன் சார்பில் 2 நாள் இதற்காகவே பிரத்தியேகமாக வாகன சோதனை நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. போலீசாரே அந்த வாகனங்களில் உள்ள ஸ்டிக்கர்களை ஸ்பாட்டிலேய அகற்றினர். மோட்டார் வாகன சட்டப்படி இப்படியாக ஜாதி பெயர்களை வாகனங்களில் அச்சிடுவது குற்றமாக ஏற்கனவே சட்டம் இருக்கிறது. ஆனால் இதைச் செயல்படுத்தப் பல மாநிலங்களில் போலீசார் தயக்கம் காட்டி வருகின்றனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Up man write Thakur on his Toyota Fortuner number plate police seized and fined heavily
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X