ரஜினி காலில் விழுந்த நிலையில் யோகி பிறப்பித்த அதிரடி உத்தரவு! நல்ல மனுஷனா இருக்காரே! பாராட்டும் மக்கள்!
உத்தர பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் (Yogi Adityanath) இந்தியாவில் தற்போது அதிகம் கவனிக்கப்பட கூடிய நபராக உள்ளார். மோடிக்கு (Modi) பிறகு அடுத்த பிரதமர் என்றெல்லாம் கூட இவரை வர்ணிக்கின்றனர். இந்த சூழலில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் (Tamil Nadu) ஹாட் டாபிக்-ஆக யோகி ஆதித்யநாத் உள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth), யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்ததுதான் இதற்கு காரணம். சந்தியாசிகள் மற்றும் யோகிகள் காலில் விழுவது தனது பழக்கம் என ரஜினிகாந்த் இதற்கு விளக்கம் அளித்து விட்டாலும் கூட, தமிழக மக்கள் பலர் இதனை இன்னமும் விமர்சித்து கொண்டுள்ளனர்.

இப்படி சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், உத்தர பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் தற்போது அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன்படி கார் மற்றும் டூவீலர் போன்ற வாகனங்களில், ஜாதிகளை குறிக்கும் ஸ்டிக்கர்கள் எதுவும் இருக்க கூடாது என்பதுதான் அந்த உத்தரவு.
இதுதவிர செல்வாக்கு மிகுந்த பதவிகளை குறிக்கும் ஸ்டிக்கர்களும் வாகனங்களில் இருக்க கூடாது என யோகி ஆதித்யநாத் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதன்பேரில் ஜாதிகள் மற்றும் செல்வாக்கு மிகுந்த பதவிகளின் பெயர்களை வாகனங்களில் ஸ்டிக்கர்களாக ஒட்டியிருப்பவர்கள் மீது உத்தர பிரதேச காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர்.

விதிமுறையை மீறியுள்ளவர்கள் மீது, மோட்டார் வாகன சட்ட பிரிவு 179(1)-ன் கீழ், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாகனத்தின் எந்த பகுதியில் இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தாலும், அவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த விதிமுறை மீறல் நம்பர் பிளேட்டில் செய்யப்பட்டிருந்தால், அபராத தொகை 5,000 ரூபாயாக உயர்ந்து விடும்.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு தற்போது வரை உத்தர பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. காவல் துறையினர் ஆங்காங்கே சிறப்பு வாகன தணிக்கைகளை நடத்தி, விதிமுறைகளை மீறியவர்களை கண்டறிந்து வருகின்றனர்.
இதனால் ஜாதி, மத அடையாளங்கள் மற்றும் செல்வாக்கு மிகுந்த பதவிகளின் பெயர்களை வாகனங்களில் ஸ்டிக்கர்களாக ஒட்டியுள்ளவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவிற்கு பிறகு, காவல் துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளதால், வாகனங்களில் இருந்து பலர் அந்த ஸ்டிக்கர்களை அகற்றி வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உத்தர பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் இந்த நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. வாகனங்களில் ஜாதி மற்றும் மத அடையாளங்கள் இருந்தால், மற்றவர்களுக்கு ஒரு வித அச்ச உணர்வு ஏற்படலாம். அத்துடன் இது தேவையில்லாத பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும்.
அதே நேரத்தில் நம்பர் பிளேட்களில் எண்கள் மற்றும் எழுத்துக்களை மறைக்கும் வகையில் ஸ்டிக்கர்களை பலர் ஓட்டுகின்றனர். விபத்து, திருட்டு போன்ற சம்பவங்களின்போது, வாகனங்களின் நம்பர் பிளேட்களை தெளிவாக காண முடியாமல் போவதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்று. எனவே ஸ்டிக்கர்களை ஒட்டி விதிமுறை மீறல்களில் ஈடுபடுபவர்கள் மீதான நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியவை.
உத்தர பிரதேச அளவில் மட்டுமல்லாது, நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இந்த நடவடிக்கை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து. தமிழ்நாட்டிலும் கூட பலர் வாகனங்களில் விதிமுறைகளை மீறி இவ்வாறான ஸ்டிக்கர்களை ஒட்டி கொண்டு வலம் வந்து கொண்டுதான் உள்ளனர். எனவே நாடு முழுவதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








