அம்பானிக்கே டஃப் கொடுக்கும் வாழ்க்கையை வாழும் சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள்! காரு, பங்களானு ஃபுல் செட்டிலாயிட்டாரு
ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் இந்தியாவின் பெரும் பணக்காரர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு மிகுந்த சொகுசு வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றார். இந்த தகவல் போலீஸ் விசாரணையின் வாயிலாகவே வெளி உலகிற்கு தெரிய வந்திருக்கின்றது. அவர் யார்? அவரால் எப்படி இவ்ளோ சொத்துக்களைச் சேகரிக்க முடிந்தது? இப்போது அவரின் நிலை என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான உத்தரபிரதேசத்திலேயே சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பெரும் பணக்காரர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு சொத்துக்களைச் சேர்த்து ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்த விநோத சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. 12 அறைகள் கொண்ட இரண்டு அடுக்குமாடி சொகுசு வீடு, மிகப் பெரிய வாகன நிறுத்தும் இடம், அங்கு ஏகப்பட்ட சொகுசு கார்கள் என பலவற்றிற்கு சொந்தக்காரராகவே ஒரு சாதாரண கான்ஸ்டபிள் இருந்திருக்கின்றார்.

இதை வைத்து பார்க்கையில் அந்த கான்ஸ்டபிள் ஒருவேளை அவர் ராஜா பரம்பரையைச் சேர்ந்தவராக இருப்பாரோ என உங்களுக்கு நினைக்கத் தோன்றலாம். ஆனால், அதுதான் இல்லை. அவர் சாதாரண கான்ஸ்டபிள் மட்டுமே ஆவார். இந்த வாழ்க்கையைகூட அவர் 1987 ஆம் ஆண்டிலேயே தொடங்கி இருக்கின்றார்.
இந்த நிலையிலேயே அவர் பலோ கோடி ரூபாய்க்கு அதிபதியாக ஆகியிருக்கின்றார். இவர் மீது பலமுறை உபி காவல்துறை ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறப்படுகின்றது. மேலும், 2020ம் ஆண்டில் அரங்கேறிய பிஎஸ்பி செயல்பாட்டாளர் பிந்து செங்கர் கொலை வழக்கில்கூட அந்த கான்ஸ்டபிளுக்கு தொடர்ப்பு இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இதன் விளைவாக அவரை உபி காவல்துறை டிஸ்மிஸ் செய்திருக்கின்றது. மேலும், அவர் சிறையிலும் அடைக்கப்பட்டு இருக்கின்றார். இதற்கிடையிலும் அவர் மீது பல்வேறு புகார்கள் எழும்பி இருக்கின்றன. தற்போது அவர் பிணையில் வெளியே வந்திருக்கின்றார். இந்த நிலையிலேயே அவர் பற்றிய புதிய சர்ச்சையான தகவல் வெளி வந்திருக்கின்றது.
உபியில் உள்ள சகேரி காவல்நிலையத்தில் பணியாற்றியபோது அந்த கான்ஸ்டபிள் முறைகேடாக சம்பாதித்து பல கோடி ரூபாய் சொத்துக்களைச் சேகரித்ததாக கூறப்படுகின்றது. இதுகுறித்து 2019 ஆம் ஆண்டில் அவர் மீது லக்னோவில் ரமாகாந்த் என்பவர் புகார் அளித்திருக்கின்றார். இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொண்டதிலேயே அவர் வருமானத்திற்கு மிஞ்சி பலமடங்கு அதிகமாக சொத்துக்களைச் சேகரித்திருக்கின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது.
உண்மையைச் சொல்ல வேண்டும். அவருடைய வீட்டின் மதிப்பு மட்டும் ரூ. 5 கோடி என கூறப்படுகின்றது. இதுதவிர பல ஆடம்பர கார்களை அவர் வைத்திருக்கின்றார். டொயோட்டா ஃபார்ச்சூனர் தொடங்கி பிஎம்டபிள்யூ, ஆடி உள்ளிட்ட சொகுசு பிராண்டுகளின் கார்களும் அவரிடத்தில் பயன்பாட்டில் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் விஐபி பதிவெண்ணே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த தகவலே மிகப் பெரிய சர்ச்சையை தற்போது ஏற்படுத்தி இருக்கின்றது. ஒட்டுமொத்த இந்தியாவையும் இந்த விவகாரம் பரபரப்பாக்கி இருக்கின்றது. சராசரியாக உபியில் ஓர் கான்ஸ்டபிளுக்கு மாத சம்பளமாக ரூ. 22 ஆயிரத்திற்கும் குறைவாகவே வழங்கப்படுகின்றது. அப்படி என்றால் ஆண்டு வருமானமே ரூ. 2.60 லட்சம் மட்டுமே ஆகும்.
இந்த நிலையிலேயே சாதாரண கான்ஸ்டபிள்களால் கற்பனைக்குகூட எட்ட முடியாத விலைக் கொண்ட ஃபார்ச்சூனர் காரை தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கும் போலீஸ் கான்டபிள் அவருக்க சொந்தமாக்கி இருக்கின்றார். ஃபார்ச்சூனர் காரின் ஆரம்ப விலையே ரூ. 33.43 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
ஆன்-ரோடில் இதன் விலை 40 லட்சங்களைத் தொடும். இதைவிட அதிக விலைக் கொண்ட கார்களான பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்களையும் அவர் வைத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த தகவலே தற்போது போலீஸின் விசாரணையின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது.
இந்த சொத்துக்கள் அனைத்தும் முறை தவறி போலீஸ் கான்ஸ்டபிள் சம்பாதித்து இருப்பதால் அதனை காவல்துறை தற்போது முடக்கம் செய்திருக்கின்றது. மேலும், வருமானத்திற்கு மீறி இவை அனைத்தையும் எப்படி ஓர் கான்ஸ்டபிளால் சம்பாதிக்க முடிந்தது என்பது குறித்தும் காவல்துறை தீவிர விசாரணையில் களமிறங்கி இருக்கின்றது. இவை அனைத்தும் சமீபத்திய போலீஸ் விசாரணையின் யிலாகவே வெளிச்சத்திற்கு தெரிய வந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சியாம் சுசில் மிஷ்ரா என்பவரே அந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஆவார். 58 வயதான இவரே பல முறைகேடுகளில் ஈடுபட்டு இந்த சொத்துக்களைச் சேகரித்து இருக்கின்றார். இருப்பினும், ஒரு சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளால் எப்படி இவ்வளவு ரூபாய் சொத்துக்களை சேர்க்க முடிந்தது என்பது பெருத்த ஆச்சரியமாக உள்ளது. விரைவில் இதுபற்றிய மர்மங்களை உபி காவல்துறை விளக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








