தமிழ்நாட்டுல தயாரிச்ச வாகனங்களுக்கு இந்த மாநிலத்தில் இனி மானியம் கிடையாது! அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சி!
உ.பி மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்பட்ட வந்த மானியத்தில் தற்போது புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதில் சொந்த மாநிலத்தில் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வாகன தயாரிப்பு நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
உ.பி மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான மானிங்களை வழங்கி வந்தது. எந்த எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கினாலும் இந்த மானியத்தை பெற முடியும் என்ற சூழ்நிலை இருந்தது. இதன்படி எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு ரூ5000 வரையிலும், எலெக்ட்ரிக் கார்களுக்கு ரூ1 லட்சம் வரையிலும், பஸ் மற்றம் சரக்கு வாகனங்களுக்கு ரூ20 லட்சம் வரையிலான பலன்களை அம்மாநில மக்கள் பெற்று வந்தனர்.

ஆனால் இது எல்லாம் நேற்று முன் தினம் வரை தான் அதாவது அக்டோபர் 13ம் தேதிக்கு முன்பு வாகனங்களை வாங்கியவர்கள் தான் இந்த பலனை அனுபவிக்க முடியும். நேற்று அதாவது 14ம் தேதி முதல் இந்த மானிய வரையறையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றங்களின்படி இந்த பலன்கள் இனி அம்மாநிலத்திலேயே தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரவிக்கப்பட்டள்ளது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை வாகன தயாரிப்புநிறுவனங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நிதியாண்டில் மொத்தம் 3.7 லட்சம் எலெக்ரிக் வாகனங்கள் உ.பி மாநிலத்தில் விற்பனையானது. இது மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலத்தை விட அதிகமாக விற்பனையாகியுள்ளது. இந்த மானியத்தால் குறைந்த விலையில் அம்மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் கிடைப்பதால் மக்கள் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.

ஆனால் தற்போது இந்த மானியம் உ.பி மாநிலத்தில் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என சுறுக்கப்பட்டதால் இனி வெளி மாநிலத்தில் வாகன தயாரிப்பு ஆலையை நடத்தி வரும் நிறுவனங்களின்வாகனங்களுக்கு மானியம் கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் தான் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகமான ஆலைகள் உள்ளன.
இந்த எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியத்திற்காகஇந்த நிதியாண்டில் மட்டம் 17655 பேர் விண்ணப்பித்ததில் மானியத்தை பெற்றுள்ளனர். பாக்கி 38285 விண்ணப்பங்கள் தற்போது ஆய்வில் உள்ளது. இதற்கும் முழுவதுமாக விசாரணை நடத்தப்பட்டு இவர்களுக்கு மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி இந்த மானியத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் நீங்கள் உ.பி மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இதனால் உ.பி மாநிலத்தில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிக பலன் பெறும். அந்த மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி அதிகம் ஆகும். இதனால் அம்மாநிலத்தில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு அதிகமாகும். மேலும் இந்த வாகனங்களை பயன்படுத்துவதால் மாசு வெகுவாக குறையும் இதனால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
உ.பி மாநிலத்தின் இந்த அறிவிப்பால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதற்கு மாறாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்கள் இதே போன்ற முடிவை எடுத்தால் இந்த மாநிலங்களில் மட்டும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்று சூழலுக்கு ஏற்றதாக இருக்கிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகம் விற்க மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டுவரும் நிலையில் இந்த நடவடிக்கை நிச்சயம் பலனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









