இந்த காரணத்திற்காகவும் ஆர்சி புக் கிடைக்காமல் போகலாம்.. என்ன இந்த அதிகாரிகள் பண்ற கூத்து..

உத்தரபிரதேச மாநிலத்தில், புதிய வாகனங்களுக்கான ஆர்சி புத்தகம் கிடைக்காமல், வாகன உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இதற்கான காரணம் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

By Arun

உத்தரபிரதேச மாநிலத்தில், புதிய வாகனங்களுக்கான ஆர்சி புத்தகம் கிடைக்காமல், வாகன உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இதற்கான காரணம் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த காரணத்திற்காகவும் உங்கள் ஆர்சி புக் கிடைக்காமல் போகலாம்.. என்ன இந்த அதிகாரிகள் பண்ற கூத்து..

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்று மீரட். மீரட் நகரில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதிதாக வாகனங்களை வாங்கும் உரிமையாளர்கள், அவற்றை பதிவு செய்வதற்காக, ஆர்டிஓ அலுவலகங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்த காரணத்திற்காகவும் உங்கள் ஆர்சி புக் கிடைக்காமல் போகலாம்.. என்ன இந்த அதிகாரிகள் பண்ற கூத்து..

ஆனால் மீரட் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் (ஆர்டிஓ அலுவலகம்), நாள் ஒன்றுக்கு 200 ரிஜிஸ்ட்ரேஷன் சர்டிபிகேட்கள் (ஆர்சி புத்தகம்) மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆர்சி புத்தகங்கள் கேட்டு வந்த 7 ஆயிரம் விண்ணப்பங்கள் இன்னும் அங்கு ஒரு மூலையில் குவிந்து கிடக்கின்றன.

இந்த காரணத்திற்காகவும் உங்கள் ஆர்சி புக் கிடைக்காமல் போகலாம்.. என்ன இந்த அதிகாரிகள் பண்ற கூத்து..

அவர்களுக்கு ஆர்சி புத்தகங்களை வழங்க முடியாமல், மீரட் ஆர்டிஓ நெருக்கடியில் சிக்கி கொண்டுள்ளார். பிரிண்டட் பேப்பர் இல்லாததால்தான் 7 ஆயிரம் பேருக்கு இன்னும் ஆர்சி புத்தகங்களை வழங்கவில்லை என்ற வித்தியாசமான காரணத்தை மீரட் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த காரணத்திற்காகவும் உங்கள் ஆர்சி புக் கிடைக்காமல் போகலாம்.. என்ன இந்த அதிகாரிகள் பண்ற கூத்து..

மீரட் ஆர்டிஓ அலுவலகத்தில், கடந்த மூன்று மாத காலமாக ஆர்சி பேப்பர் பற்றாக்குறை நிலவி வருவதாக அதிகாரிகள் கூறி வருகின்றனர். இதனால்தான் சம்பந்தப்பட்ட 7 ஆயிரம் பேருக்கு இன்னும் ஆர்சி புத்தகங்களை வழங்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த காரணத்திற்காகவும் உங்கள் ஆர்சி புக் கிடைக்காமல் போகலாம்.. என்ன இந்த அதிகாரிகள் பண்ற கூத்து..

சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள்தான், இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னமும் ஆர்சி புத்தகம் கைக்கு கிடைக்காததால், அவர்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்னை மீரட் நகரில் மட்டுமல்லாமல், உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் நிலவி வருகிறது.

இந்த காரணத்திற்காகவும் உங்கள் ஆர்சி புக் கிடைக்காமல் போகலாம்.. என்ன இந்த அதிகாரிகள் பண்ற கூத்து..

ஆர்சி பேப்பரை பிரிண்ட் செய்வதற்கான டெண்டரை எடுத்துள்ள நிறுவனம் மீதும் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பேப்பர்களை பிரிண்ட் செய்து வழங்குவதில் அந்த நிறுவனம் கால தாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளதாம்.

இந்த காரணத்திற்காகவும் உங்கள் ஆர்சி புக் கிடைக்காமல் போகலாம்.. என்ன இந்த அதிகாரிகள் பண்ற கூத்து..

பேப்பர் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என அதிகாரிகள் கையை விரித்து விட்டனர். போக்குவரத்து துறை சார்ந்த தங்களின் உயர் அதிகாரிகளுக்கு இது தொடர்பான தகவல்களை தெரிவித்து விட்டு, பேப்பர்களுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த காரணத்திற்காகவும் உங்கள் ஆர்சி புக் கிடைக்காமல் போகலாம்.. என்ன இந்த அதிகாரிகள் பண்ற கூத்து..

எனினும் மீரட் ஆர்டிஓ அலுவலகத்தில், ஆர்சி பேப்பர் தற்போது ஓரளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. எனவே குவிந்து கிடக்கும் விண்ணப்பங்களை கூடுமானவரை விரைவாக க்ளியர் செய்வதற்காக தனியாக ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த காரணத்திற்காகவும் உங்கள் ஆர்சி புக் கிடைக்காமல் போகலாம்.. என்ன இந்த அதிகாரிகள் பண்ற கூத்து..

ஆனால் குறைவான அளவிலான பேப்பர்கள் மட்டுமே கைவசம் உள்ளது. தற்போது கைவசம் உள்ள பேப்பர் மிக நீண்ட நாட்களுக்கு போதாது. ஒருவேளை அதிகமான பேப்பர்கள் அனுப்பப்படாவிட்டால், மீண்டும் விண்ணப்பங்கள் தேங்க தொடங்கி விடும் அபாயம் நிலவி வருகிறது.

இந்த காரணத்திற்காகவும் உங்கள் ஆர்சி புக் கிடைக்காமல் போகலாம்.. என்ன இந்த அதிகாரிகள் பண்ற கூத்து..

இந்த விஷயத்தில் உத்தரபிரதேச மாநில போக்குவரத்து துறை உயரதிகாரிகள் தலையிட்டு, நிலைமையை சீராக்குவார்கள் என ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதன்பின் ஆர்சி புத்தகங்களை வழங்கும் பணி சீராகும் என அவர்கள் கூறியுள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
UP RTO faces 7000 pending registrations due to lack of paper. Read in tamil
Story first published: Thursday, July 12, 2018, 13:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X