“உ.பி மாநில சாலைகள், அமெரிக்க சாலைகளுக்கு இணையானதாக மாறும்”- ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி!!

உத்திர பிரதேச சாலை கட்டமைப்புகள் இன்னும் 5 வருடங்களில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தரத்திற்கு மேம்பட்டுவிடும் என நம்புவதாக ஒன்றிய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

“உ.பி மாநில சாலைகள், அமெரிக்க சாலைகளுக்கு இணையானதாக மாறும்”- ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி!!

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசாங்கத்தின் தொடர் முயற்சிகளினால் நாடு முழுவதும் சாலைகளின் தரம் மேம்பட்டு வருவதை கண்கூடாக பார்த்து வருகிறோம். அதிலும் குறிப்பாக பாஜக ஆட்சி செய்யும் உத்திர பிரதேசத்தில் நெடுஞ்சாலைகள் புதிய புதிய தொழில் நிறுவனங்களை கவரும் வகையில் மேம்பாடு அடைந்து வருகின்றன.

“உ.பி மாநில சாலைகள், அமெரிக்க சாலைகளுக்கு இணையானதாக மாறும்”- ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி!!

சில வாரங்கள் முன்னர் இந்த மாநிலத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பூர்வாஞ்சல் விரைவுச்சாலை நாடு முழுவதும் கவனத்தை பெற்றிருந்தது. இந்த விரைவுச்சாலையின் தரத்தினை நாட்டு மக்களுக்கு காண்பிக்கும் வகையில், இந்த புதிய சாலையில் பிரதமர் மோடி அவர்கள் தனி விமானத்தில் வந்திறங்கினார். இது அந்த சமயத்தில் வைரலாகியது.

“உ.பி மாநில சாலைகள், அமெரிக்க சாலைகளுக்கு இணையானதாக மாறும்”- ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி!!

இதனை தொடர்ந்து மீரட்- பிரயாக்ராஜ் வரையிலான 594கிமீ நீள புதிய விரைவு சாலைக்கு கடந்த டிச.18ஆம் தேதி பிரதமர் நேரில் சென்று அடிக்கல் நாட்டினார். உத்திரபிரதேச மாநிலத்தில் ஏறக்குறைய 10 முக்கிய நகரங்களை இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட உள்ள இந்த விரைவுச்சாலை இந்த மாநிலத்தில் மட்டுமில்லாமல், நாட்டிலேயே மிக நீளமான விரைவுச்சாலையாக விளங்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

“உ.பி மாநில சாலைகள், அமெரிக்க சாலைகளுக்கு இணையானதாக மாறும்”- ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி!!

இந்த நிலையில் தற்போது, பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர் யோகி அதித்யநாத்தின் தலைமையின்கீழ் செயல்பட்டால், இன்னும் 5 வருடங்களில் உத்திர பிரதேசத்தில் சாலை கட்டமைப்புகள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தரத்திற்கு வந்துவிடும் என ஒன்றிய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

“உ.பி மாநில சாலைகள், அமெரிக்க சாலைகளுக்கு இணையானதாக மாறும்”- ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி!!

ரூ.1,123 கோடி மதிப்பிலான மூன்று புதிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும்போது இந்த தகவலை அமைச்சர் கட்கரி தெரிவித்தார். 2014இல், தான் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இணையும்போது சாலை அமைக்கும் திட்டங்கள் ஏகப்பட்டவை இருந்ததாகவும், அந்த திட்டங்கள் அனைத்தையும் பிரதமர் முடுக்கிவிட்டார் எனவும் ஒன்றிய அமைச்சர் இந்த பேட்டியில் கூறியுள்ளார்.

“உ.பி மாநில சாலைகள், அமெரிக்க சாலைகளுக்கு இணையானதாக மாறும்”- ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி!!

அமைச்சரின் கூற்றுப்படி, இதில் ரூ.1.40 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் ஏற்கனவே முடிக்கப்பட்டு, ரூ.1.80 லட்சம் கோடி மதிப்பிலான சாலை கட்டுமான பணிகள் தற்சமயம் நடைபெற்று வருகின்றன. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பிற தொடர்புடைய பணிகளுக்காக இதுவரையில் மட்டுமே ரூ.45,000 கோடிக்கும் அதிகமான தொகையினை ஒன்றிய அரசு செலவிட்டுள்ளது.

“உ.பி மாநில சாலைகள், அமெரிக்க சாலைகளுக்கு இணையானதாக மாறும்”- ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி!!

மொத்தமாக கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து ரூ.3 லட்ச கோடிகளை சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை பணிகளுக்காக அரசு செலவழித்துள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி தொடர்ந்தால் இந்த தொகை ரூ.5 லட்ச கோடியாக கூட அதிகரிக்கலாம் என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும், குற்றங்கள் மற்றும் மாஃபியாக்களை குறைப்பதில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆற்றிய பணிக்காக இந்த நிகழ்ச்சியில் நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்தார்.

“உ.பி மாநில சாலைகள், அமெரிக்க சாலைகளுக்கு இணையானதாக மாறும்”- ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி!!

அப்போது மேலும் பேசிய அமைச்சர், "சட்டம், ஒழுங்கு நன்றாக இருந்தால் முதலீடு அதிகரிக்கும். உத்திர பிரதேசத்தில் எதற்கும் பஞ்சமில்லை. இது ஒரு வசதியான மாநிலம். ஆனால் இங்கு ஏழை மக்கள் அதிகம் உள்ளனர். ஒரு பணக்கார மாநிலத்தில் மக்கள் எப்படி ஏழைக்களாக இருக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை" என்றார்.

“உ.பி மாநில சாலைகள், அமெரிக்க சாலைகளுக்கு இணையானதாக மாறும்”- ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி!!

முன்னதாக இந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில், ஜம்மு காஷ்மீரின் சாலை கட்டமைப்பு அடுத்த மூன்று ஆண்டுகளில் மேற்கு ஐரோப்பாவை போல் சிறப்பாக இருக்கும் என்று நிதின் கட்கரி கூறியிருந்தார். ஐம்மு & காஷ்மீருக்கு திட்டமிடப்பட்டுள்ள 25 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும்போது இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 259 கிமீ ஆகும்.

“உ.பி மாநில சாலைகள், அமெரிக்க சாலைகளுக்கு இணையானதாக மாறும்”- ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி!!

இவற்றை அமைக்க ரூ.11,721 கோடி முதலீடு தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி, சுற்றுலா மற்றும் பயணத்துறைக்கு ஊக்கமளிக்கும் வகையிலான சுரங்கப்பாதைகளும் இருக்கும். இந்த புதிய நெடுஞ்சாலைகளினால், ஜம்முவை ஸ்ரீநகரில் இருந்து குறைந்தப்பட்சமாக நான்கு மணி நேரத்திலும், டெல்லியில் இருந்து ஸ்ரீநகரை 8 மணிநேரங்களிலும் சென்றடைய முடியும்.

“உ.பி மாநில சாலைகள், அமெரிக்க சாலைகளுக்கு இணையானதாக மாறும்”- ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி!!

அதேநேரம் பழைய நெடுஞ்சாலைகளும் சீரமைக்கப்படும் என்ற அமைச்சர் நிதின் கட்கரி, இதன் மூலமாக முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை வெகுவாக குறைக்க முடியும் எனவும் நம்பிக்கை கொண்டுள்ளார். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, டெல்லி- மும்பை பயணத்தை வெறும் 12 மணிநேரமாக குறைக்கும் விரைவுச்சாலை அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Up state roads to become like american roads said transport minister nitin gadkari
Story first published: Wednesday, December 22, 2021, 15:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X