சென்னை டூ பெங்களூரு வெறும் 2 மணி நேரத்தில் செல்லும் எக்ஸ்பிரஸ் சாலை உட்பட 5 சாலைகள் 2024ல் திறக்கபோறாங்க!

இந்தியாவில் வரும் 2024-ம் ஆண்டு 5 புதிய எக்ஸ்பிரஸ் சாலைகள் திறக்கப்பட உள்ளன. அடுத்த 12 மாதம் இந்தியாவில் பல புதிய சாலைகள் கொண்டுவரப்பட்டு இந்தியாவை பெரிய அளவில் வளர்ச்சி அடைய திட்டமிடப்பட்டுள்ளது. இப்படியாக 2024-ம் ஆண்டு இந்தியாவில் திறக்கப்பட உள்ள புதிய தேசிய நெடுஞ்சாலைகள் பற்றிய விவரங்களை காணலாம் வாருங்கள்.

டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலை: இந்தியாவின் மிக நீளமான எக்ஸ்பிரஸ் சாலையாக இந்திய தலைநகர் டில்லியையும் வர்த்தக தலைநகர் மும்பையையும் இணைக்கும் வகையில் எக்ஸ்பிரஸ் சாலைகள் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இது அடுத்த ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் பிப்ரவரி மாதம் இந்த சாலை முழுமையாக கட்டமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது.

upcoming 5 expressways in india

தற்போது சுமார் 209 கிலோ மீட்டர் நீளம் உள்ள சாலை முழுமையாக கட்டுமுடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த சாலை மொத்தம் 1386 கிலோ மீட்டர் நீளமாகும். இது டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இதில் இருப்பதிலேயே குறைவாக டெல்லி மாநிலத்தில் தான் வரும் 9 கிலோமீட்டர் மட்டுமே இந்த சாலை அமைய உள்ளது. இந்த சாலை மூலம் இரு நகரங்களுக்கும் இடையே உள்ள சாலை வழி பயண நேரம் 24 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக குறையும்.

upcoming 5 expressways in india

பெங்களூர் சென்னை எக்ஸ்பிரஸ் சாலை: பெங்களூர் இருந்து சென்னைக்கு சுமார் 262 கிலோமீட்டர் நீளத்திற்கு எக்ஸ்பிரஸ் சாலை புதிதாக கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை அடுத்த ஆண்டு எப்பொழுது வேண்டுமானாலும் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த சாலைக்காக நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சுமார் 17,000 கோடியை செலவு செய்துள்ளது.

இந்த சாலை மூலம் இரு நகரங்களுக்கும் இடையேயான தூரம் சுமார் 2 மணி நேரமாக குறைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சுமார் 5-6 மணி நேரம் வரை சாலையில் பயணம் நேரத்தை எடுத்துக் கொள்ளும் நிலையில் இந்த சாலை சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் வாகனங்கள் பயணிக்க கூடியதாக இருக்கிறது. இதனால் இரண்டு மணி நேரத்தில் சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் வகையில் இந்த சாலை கட்டமைக்கப்பட உள்ளது.

upcoming 5 expressways in india

துவாரகா எக்ஸ்பிரஸ் சாலை: இந்தியாவில் முதல் மேலடுக்கு அர்பன் ஹைவே எக்ஸ்பிரஸ் சாலையாக இந்த துவாரகா எக்ஸ்பிரஸ் ஆலை கட்டமைக்கப்படுகிறது. சுமார் 29 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த சாலை டெல்லியின் துவாரகா பகுதியில் இருந்து குர்கான் வரை கட்டமைக்கப்படுகிறது. இந்த சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பே திறக்கப்படும் என முன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கட்டுமான பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இது தள்ளிப் போய் உள்ளது.

இந்த சாலை மூலம் டெல்லி ஏர்போர்ட்டுக்கு செல்லும் பயணிகளுக்கு வசதியாக இருக்கும் வகையில் கட்டமைக்கப்படுகிறது. மேலும் டெல்லியில் உள்ள 50 சதவீதமான டிராஃபிக் இந்த சாலையால் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த சாலை கிட்டத்தட்ட கட்டுமானம் பணிகள் முடிந்து திறக்கப்படும் சூழ்நிலையில் இருப்பதால் இந்த புத்தாண்டு பரிசாக மக்களுக்கு இந்த சாலை திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி-அமிர்தசரஸ்-கட்ரா எக்ஸ்பிரஸ் சாலை: இந்த சாலை கட்டமைப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் இது திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது திறக்கப்பட்டால் டெல்லியில் இருந்து அமிர்தசரஸ் வரை பயணிக்க பெரும் 4மணி நேரம் தான் ஆகும் என தெரிகிறது. டெல்லியில் இருந்து கட்ரா வரை பயணிக்க வெறும் 6மணி நேரம் தான் ஆகும். பயண தூரமும் 58கிமீ வரை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாலையில் பல முக்கியமான மத ஸ்தலங்கள் இருக்கிறது. அதனால் சுற்றுலா பயணிகள் அதிகமாக இந்த சாலையை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக பொற்கோவில், கட்ராவில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் எல்லாம் இந்த தேசிய நெடுஞ்சாலை பயணிக்கும் இடங்களில் உள்ளன. சுமார் 669 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த தேசிய நெடுஞ்சாலை கட்டமைக்கப்படுகிறது.

டில்லி முதல் டெஹராடூன் எக்ஸ்பிரஸ் சாலை: டில்லியில் இருந்து டெஹராடூன் வரும் வரை கட்டமைக்கப்படும் சாலைகள் தனது இறுதி கட்டப்பணியில் உள்ளன. தற்போது அங்கு டிராபிக் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் இருந்து டெஹராடூனுக்கு வெறும் மூன்று மணி நேரத்தில் பயணிக்க முடிகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலை உள்ள பகுதியில் ராஜாஜி தேசிய பூங்கா இருக்கிறது.

அங்கு சுமார் 340 மீட்டர் உயரத்தில் தேசிய நெடுஞ்சாலை கட்டமைக்கப்பட்டு ஆசியாவின் நீண்டமான வனவிலங்கு வசிக்கும் இடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையாக இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைவதன் மூலம் இரு நகரங்களும் மிக குறுகிய பயண நேரத்தில் இணைக்கப்படும். இதனால் இரு நகரங்களில் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும் என்பதால் இந்த சாலை கட்டமைக்கப்பட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளதால் மத்திய அரசு தற்போது அனைத்து தேசிய நெடுஞ்சாலை பணிகளையும் தீவிர படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்பாக பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகளை திறந்து மக்கள் பயனுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதனால் இதில் பெரும்பாலான சாலைகள் அடுத்த 4 மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 27, 2023, 20:42 [IST]
English summary
Upcoming 5 expressways in india expected to open in 2024
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X