இந்தியாவுக்கு வருகை தரும் பேட்டரி கார்கள்... எதை வாங்கலாம்... எந்த கார் பெஸ்ட்!!!

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முட்டுக்கட்டைப் போடும் வகையில் இந்தியாவுக்கு வரவிருக்கும் பேட்டரி கார்களின் விவரங்கள் குறித்த செய்தி தொகுப்பு...

இந்தியாவுக்கு வருகை தரும் பேட்டரி கார்கள்... எதை வாங்கலாம்... எந்த கார் பெஸ்ட்!!!

பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை காரணமாக உலக வெப்பமயமாதல், சுற்றுப்புற மாசு உள்ளிட்ட பிரச்னையை இந்தியா சந்தித்து வருகிறது. தற்போது உருவாகியுள்ள இந்த பிரச்னையானது இந்தியாவுக்கு மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு வருகை தரும் பேட்டரி கார்கள்... எதை வாங்கலாம்... எந்த கார் பெஸ்ட்!!!

இதன்காரணமாக, நாட்டில் பயன்பாட்டில் உள்ள பெட்ரோல், டீசல் வாகனங்களைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளும் அது மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பெட்ரோல் வாகனங்களுக்கான வரியையும் உயர்த்த மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.

இந்தியாவுக்கு வருகை தரும் பேட்டரி கார்கள்... எதை வாங்கலாம்... எந்த கார் பெஸ்ட்!!!

இதைத்தொடர்ந்து, மின்வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, மானியம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், மின்வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், மின்வாகன உற்பத்தியாளர்களுக்கு சில சலுகைகளையும் வழங்க அது முடிவு செய்துள்ளது.

இந்தியாவுக்கு வருகை தரும் பேட்டரி கார்கள்... எதை வாங்கலாம்... எந்த கார் பெஸ்ட்!!!

இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவில் பல்வேறு வகையான பேட்டரி கார்கள் களமிறங்க உள்ளன. அந்த வகையில் இந்திய மின்வாகன சந்தைக்கு வரவுள்ள கார்கள் குறித்த தொகுப்பினை கிழே காண்போம்...

இந்தியாவுக்கு வருகை தரும் பேட்டரி கார்கள்... எதை வாங்கலாம்... எந்த கார் பெஸ்ட்!!!

மாருதி சுஸுகி பேட்டரி கார்:

நாட்டின் மிகப்பெறிய கார் உற்பத்தியாளரான மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட், வருகின்ற 2020ம் ஆண்டிற்குள் தனது பேட்டரி காரினை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, வேகன்ஆர் மாடல் காரில் முதல் பேட்டரி காரை தயாரித்து சோதனையோட்டமாக பரிசோதித்து வருகிறது. இதற்காக 50க்கும் மேற்பட்ட கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கு வருகை தரும் பேட்டரி கார்கள்... எதை வாங்கலாம்... எந்த கார் பெஸ்ட்!!!

72 வோல்ட் உள்ள 10-25 kWh லித்தியம்-அயன் பேட்டரியை அந்த கார்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் சோதனையோட்டம் முடிவடைந்த பின்னர் மாருதியின் முதல் பேட்டரி கார் சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும்.

இந்தியாவுக்கு வருகை தரும் பேட்டரி கார்கள்... எதை வாங்கலாம்... எந்த கார் பெஸ்ட்!!!

டாடா டியாகோ பேட்டரி கார்:

உள்நாட்டு தயாரிப்பான டாடா கார் நிறுவனம் டியாகோ என்னும் பேட்டரி கார் மாடலைச் சந்தையில் விற்பனை செய்ய உள்ளது. கடந்த 2018ம் ஆண்டில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் சேடன் ரக டியாகோ பேட்டரி காரை டாடா நிறுவனம் அறிமுகம் செய்தது. டாடா இண்டிகாவைப் போல இருக்கும் அதன் தோற்றம் சிறியளவில் இருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த காரில் 30kW மின்மோட்டார் பொறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வருகை தரும் பேட்டரி கார்கள்... எதை வாங்கலாம்... எந்த கார் பெஸ்ட்!!!

டாடா டிகோர் பேட்டரி கார்:

டாட்டா நிறுவனத்தின் மற்றொரு பேட்டரி கார் தயாரிப்பான டாடா டிகோர் என்ற மாடலையும் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் அறிமுக தேதி தற்போதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால், இது அடுத்த வருடத்தின் இறுதிக்குள் வெளிவந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு வருகை தரும் பேட்டரி கார்கள்... எதை வாங்கலாம்... எந்த கார் பெஸ்ட்!!!

சேடன் வகையான டாடா டைகர் பேட்டரி காரில் எலக்ட்ரா ஈவி என்னும் வகை மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 30kW (40.79) திறனை வெளிப்படுத்தும். இந்த காரை சாதாரண ஏசி பிளக் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்போது ஆறு மணி நேரத்திலும், டிசி அதிவேக சார்ஜர் போர்டில் வைத்து சார்ஜ் செய்யும்போது 1.5 மணி நேரத்திலும் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். அவ்வாறு முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட டாடா டைகர் 130 கிமீ வரை மைலேஜ் கொடுக்கும்.

இந்தியாவுக்கு வருகை தரும் பேட்டரி கார்கள்... எதை வாங்கலாம்... எந்த கார் பெஸ்ட்!!!

மஹிந்திரா ஈ-கேயூவி100 பேட்டரி கார்:

நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா, தனது பேட்டரி காரான மஹிந்திரா ஈ-கேயூவி100 மாடலை கடந்த 2018ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்தது. இந்த மாடலை இந்த ஆண்டு அரையிறுதிக்குள் விற்பனைக்கு வெளியிட இருப்பதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கு வருகை தரும் பேட்டரி கார்கள்... எதை வாங்கலாம்... எந்த கார் பெஸ்ட்!!!

மஹிந்திரா ஈ-கேயூவி100 மாடலில் 72v லித்தியம் -அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த காரில் 30kW (40.79) திறனை வெளிப்படுத்தும் மோட்டார் நிறுவப்பட்டுள்ளது. இது 100 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.

இந்தியாவுக்கு வருகை தரும் பேட்டரி கார்கள்... எதை வாங்கலாம்... எந்த கார் பெஸ்ட்!!!

மஹிந்திரா ஈ-கேயூவி100 மாடலைத் தொடர்ந்து, எக்ஸ்யூவி 300 பேட்டரி காரையும் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மாடல் காரானது, தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜினில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, மஹிந்திரா நிறுவனம் இந்த மாடல் காரில் பேட்டரி காரை வரும் 2020ம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்தியாவுக்கு வருகை தரும் பேட்டரி கார்கள்... எதை வாங்கலாம்... எந்த கார் பெஸ்ட்!!!

அறிமுகமாக இருக்கும் இந்த மாடலில், 380v பவர் சிஸ்டத்தை இணைக்க உள்ளது. அதன்படி, இதனை தனது இணை தயாரிப்பு நிறுவனமான எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் மற்றும் சாங்யாங் (ssangyong) உடன் இணைய உள்ளது. மேலும், அதிக மைலேஜ் கொடுக்கும் விதமாக இந்த காரில் இரு விதமான பேட்டரிகள் நிறுவப்படுகிறது. இதன்காரணமாக, எக்ஸ்யூவி300 மாடல் 250கிமீ தூரம் வரை மைலேஜ் கொடுக்கும்.

இந்தியாவுக்கு வருகை தரும் பேட்டரி கார்கள்... எதை வாங்கலாம்... எந்த கார் பெஸ்ட்!!!

நிஸ்ஸான் லீப் பேட்டரி கார்:

சமீபகாலமாக கார்கள் விற்பனையில் சக்கபோடு போடு போட்டுக்கொண்டிருக்கும் நிஸ்ஸான், கிக்ஸ் என்னும் இரண்டாம் தலைமுறை லீப் பேட்டரி காரினை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிறுவனத்தின் பேட்டரி ரக கார்கள் உலக நாடுகளில் விற்பனைக்கு வந்துவிட்டது. மேலும், இந்நிறுவனத்தின் பேட்டரி கார்களே தற்போதுவரை அதிகம் விற்பனையாகும் கார்களில் முதல் இடத்தில் உள்ளது.

இந்தியாவுக்கு வருகை தரும் பேட்டரி கார்கள்... எதை வாங்கலாம்... எந்த கார் பெஸ்ட்!!!

இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டின் இறுதிக்குள் தனது பேட்டரி ரக கார்களை இந்தியாவிலும் அறிமுகம் செய்ய இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லும், 150 குதிரைத் திறன் உடைய கார்களை சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. மேலும், இந்த கார் 168 முதல் 258 கிமீ வரை மைலேஜ் தரக்கூடிய இரு வேரியண்ட்களில் வெளியாக உள்ளன.

இந்தியாவுக்கு வருகை தரும் பேட்டரி கார்கள்... எதை வாங்கலாம்... எந்த கார் பெஸ்ட்!!!

ரெனால்ட் கிவிட் பேட்டரி கார்:

இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கும் ரெனால்ட் பேட்டரி ரக கார், ஏற்கனவே பாரிஸில் நடைபெற்ற 2018ம் ஆண்டு கார்கள் கண்காட்சியில் இடம்பெற்றுவிட்டது. சைனாவில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த மாடல்கள் இந்த வருடத்திலேயே இந்தியாவிலும் அறிமுகமாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு வருகை தரும் பேட்டரி கார்கள்... எதை வாங்கலாம்... எந்த கார் பெஸ்ட்!!!

மேலும், இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன வசதிகள் மற்ற பேட்டரி கார்களைப் போலவே நவீன தொழில்நுட்பத்தை கொண்டவையாக இருக்கிறது.

இந்தியாவுக்கு வருகை தரும் பேட்டரி கார்கள்... எதை வாங்கலாம்... எந்த கார் பெஸ்ட்!!!

எம்ஜி எலக்ட்ரிக் எஸ்யூவி:

எம்ஜி கார் தயாரிப்பு நிறுவனம் தனது எஸ்யூவி வகையான முதல் பேட்டரி காரை இந்தியாவில் 2020ம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்போது அறிமுகமாக இருக்கும் புதிய பேட்டரி காரின் முழுமையான தகவல் அறியப்படாத நிலையில், அந்த நிறுவனத்தின் ஈ இஸட்எஸ் அல்லது ஈஆர்எக்ஸ்எஸ்5 மாடலை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு வருகை தரும் பேட்டரி கார்கள்... எதை வாங்கலாம்... எந்த கார் பெஸ்ட்!!!

ஆடி ஈ-டிரான் பேட்டரி கார்:

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆடி ஈ-டிரான் பேட்டரி கார் இந்த வருடத்திலேயே சந்தையில் களமிறங்க உள்ளது. போட்டி கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடுமையான சாவலைக் கொடுக்கும் வகையில் இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. எஸ்யூவி மாடலில் வெளியாக இருக்கும் இந்த கார் 125kW ரேர் மோட்டார் மற்றும் 140 kW ஆகிய மோட்டார்களுடன் இயங்க உள்ளது. இதனால், 561 என்எம் டார்க்யு திறனுடன் 300 முதல் 408 குதிரை திறனை வெளிப்படுத்த உள்ளது.

இந்தியாவுக்கு வருகை தரும் பேட்டரி கார்கள்... எதை வாங்கலாம்... எந்த கார் பெஸ்ட்!!!

மேலும், இதன் சிங்கிள் சார்ஜ் மூலம் 400 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் அதிநவீன மோட்டார்கள் 6.6 செகண்ட்ஸில் 100 கிமீ வேகத்தை தொடும் அளவுக்கு சக்தி வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு வருகை தரும் பேட்டரி கார்கள்... எதை வாங்கலாம்... எந்த கார் பெஸ்ட்!!!

ஹூண்டாய் கோனா பேட்டரி கார்:

கொரியன் கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் தனது, கோனா என்னும் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலை இந்தியாவில் முதன் முறையாக சமீபத்தில் அறிமுகம் செய்தது. கோனா எலக்ட்ரிக் காரினை ஒரு முறை முழுமையாக ரீசார்ஜ் செய்தால் 350 கிமீ வரை பயணிக்கும்.

இந்தியாவுக்கு வருகை தரும் பேட்டரி கார்கள்... எதை வாங்கலாம்... எந்த கார் பெஸ்ட்!!!

இந்த காரை 100kw திறனுடைய டிசி குயிக் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யும்போது ஒரு மணி நேரத்திலும், சாதாரண ஏசி பாயிண்டில் சார்ஜ் செய்யும்போது குறைந்தது 6 மணி நேரத்திலும் முழுமையாக சார்ஜாகிவிடும்.

இந்தியாவுக்கு வருகை தரும் பேட்டரி கார்கள்... எதை வாங்கலாம்... எந்த கார் பெஸ்ட்!!!

கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் கார் இந்தியாவுக்கு புதிது என்றாலும், இந்த மாடல் கார் வெளிநாடுகளில் பெட்ரோல், டீசல் ஆகிய இரு மாடல்களில் கிடைக்கின்றன. ஆனால், இந்தியாவில் எலக்ட்ரிக் மாடல்தான் முதலில் அறிமுகாமாக இருக்கிறது.

இந்தியாவுக்கு வருகை தரும் பேட்டரி கார்கள்... எதை வாங்கலாம்... எந்த கார் பெஸ்ட்!!!

இந்த எஸ்யூவி மாடல் மிகச் சிறப்பாக ஏரோ டைனமிக்ஸ் வடிவமைப்பில் இருப்பதால், பேட்டரி ஆற்றல் விரையமாவது தடுத்து லாங் டியூரேஷன் பேட்டரி லைப்பைக் கொடுக்கிறது. இந்த காரில் பொறுத்தப்பட்டுள்ள மிகச் சக்தி வாய்ந்த மின் மோட்டார் 131 பிஎச்பி பவரையும், 395 டார்க்யூ திறனையும் வெளிப்படுத்தும். இதனால் அது மணிக்கு 167 கிமீ வேகம் வரை செல்லும்.

இந்தியாவுக்கு வருகை தரும் பேட்டரி கார்கள்... எதை வாங்கலாம்... எந்த கார் பெஸ்ட்!!!

இதேபோல ஹூண்டாய் நிறுவனம் எஸ்டிஒய்எக்ஸ் மற்றும் எக்ஸென்ட் எலக்ட்ரிக் ஆகிய பேட்டரி கார்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Upcoming Electric Cars In India. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X