இதை செய்யலேன்னா உங்க லைசென்ஸே கேன்சல் ஆகிடும்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

இந்தியாவில் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் தங்கள் லைசென்ஸ் உடன் செல்போன் நம்பர் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என எச்சரித்துள்ளது.இப்படியாக இணைக்கப்படாத லைசென்ஸ்கள் எதிர்காலத்தில் ரத்து செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் போக்குவரத்துக்காக அரசு குடிமக்களுக்க லைசென்ஸ் வழங்கி வருகிறது. இந்த உரிமம் பெற்றவர்கள் மட்டுமே பொது சாலையில் வாகனங்களை ஓட்ட முடியும். இந்நிலையில் வாகன ஓட்டிகள் லைசென்ஸ் பெறும் போது வழங்கிய செல்போன் எண்ணிக்கு தற்போதுஅந்த லைசென்ஸ் பெயரில் ஏதாவது அபராதம் விதிக்கப்பட்டாலோ அல்லது மற்ற நோட்டீஸ்கள் வழங்கப்பட்டாலோ அல்லது லைசென்ஸ் புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலோ அவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அலர்ட் செய்யப்பட்டு வருகிறது.

update mobile number on driving licence

இப்படியாக லைசென்ஸ் பெறும் போது வழங்கிய போன் நம்பர் பலருக்கு தற்போது ஆக்டிவில் இல்லை. சிலர் நம்பரே வழங்காமல் லைசென்ஸ் வைத்துள்ளனர். இதனால் அவர்களுக்கு உரிய எச்சரிக்கையை விடுக்க முடியாமல் அரச திணறி வருகிறது. இந்நிலையில் அரசு தற்போது லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் தங்கள் செல்போன் எண் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என செக் செய்ய அறிவுறுத்தியுள்ளது. இப்படி செக்செய்து ஆக்டிவாக இல்லாத நம்பர் இணைக்கப்பட்டிருந்தாலோ நம்பர் இணைக்கப்படாமல் இருந்தாலோ உடனடியாக சரியான நம்பரை இணைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

இப்படியாக இணைக்காவிட்டால் எதிர்காலத்தில் அந்த ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதற்கும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது. இதை எப்படி அப்டேட் செய்ய வேண்டும் என்றால் முதலில் பரிவாகன் தளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு சாரதி தளத்திற்கு செல்வதற்கான பட்டனை அழுத்தி அங்கு செல்ல வேண்டும். அங்கு உங்கள் லைசென்ஸ் குறித்த தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். நீங்கள் உள்ளே நுழைந்த பிறகு ஆதார் மூலம் உங்கள் அடையாளத்தை உறுதி செய்ய சொல்லும் பக்கம் வரும். அதில் உங்கள் ஆதார் எண்ணை வழங்கி அதில் வரும் ஓடிபியை உள்ளீடு செய்ய வேண்டும்.

update mobile number on driving licence

அதன் பிறகு உங்கள் லைசென்ஸ் தகவல்கள் குறித்த பக்கத்திற்கு செல்லும். அங்கு வாகனத்தின் லைசென்ஸ் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இதில் உள்ள செல்போன் எண் சரியாக இருக்கிறதா என செக் செய்து கொள்ளுங்கள். அப்படி சரியாக இருந்தால் நீங்கள் விட்டு விடலாம். இல்லை என்றால் அதை மாற்ற வேண்டும். இப்படியாக மாற்றப்பட்ட நம்பருக்கு ஒடிபி வரும் அதையும் அப்டேட் செய்ய வேண்டும். அதன்பிறகு வெற்றிகரமாக உங்கள் லைசென்ஸ் உடன் செல்போன் நம்பர் இணைக்கப்பட்டுவிடும். அதன் பிறகு உங்கள் லைசென்ஸ்க்கு வரும் அறிவிப்புகள் எல்லாம் நேரடியாக உங்கள் செல்போனிற்கு வரும்.

இதே போல பரிவாகன் தளத்தில் வாகன் பிரிவில் உங்கள் வாகனத்தின் ஆர்சிபுக் தகவலிலும் செல்போன் எண்ணை இணைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் உங்கள் வாகனத்தின் தகவல்களை உள்ளீடு செய்து அதில் சரியான செல்போன் எண்தான் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஆக்டிவாக இல்லாத செல்போன் எண் பதிந்திருந்தால் மாற்றிவிடுங்கள்.

சில காலத்திற்கு பிறகு அரசு ஆக்டிவாக இல்லாத பதிவெண்களை ரத்து செய்ய வாய்ப்புள்ளது.இதனால் உங்கள் வாகனத்தின் பதிவெண் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் உடனடியாக உங்கள் லைசென்ஸ் மற்றும் ஆர்சி புக் உடன் உங்கள் செல்போன் நம்பரை இணைத்துக்கொள்ளுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன ஓட்டிகள் தங்கள் அபராத தொகையை செலுத்தாமல் உள்ளனர். பலருக்கு தங்களுக்கு அபராத தொகை இருப்பதே தெரியவில்லை. இதனால் இந்த நம்பர்களை அப்பேட் செய்ததால் தான் எதிர்கால சிக்கல்களில் இருந்து உங்களால் தப்பிக்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 25, 2025, 12:30 [IST]
English summary
Update mobile number on driving licence all you need to know
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X