காருக்கான "பிளாக் பாக்ஸ்" உத்திரகண்ட் பல்கலை., மாணவன் கண்டுபிடிப்பு

Written By:

வாகனங்களில் உள்ள உதிரி பாகங்களின் தரவுகளை பெற்று நமக்கு தேவையாகன தகவல்களை தரும் "OBDAS" என்ற தொழிற்நுட்பத்தை கண்டுபிடித்த உத்திரகண்ட் பல்கலை மாணவருக்கு "காந்தியியன் இளம் தொழிற்நுட்ப கண்டுபிடிப்பு -2018" என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

காருக்கான

உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள பெட்ரோல் மற்றும் எரிசக்தி படிப்பு பல்கலை., (யூபிஇஎஸ்) யில் படித்து வரும் மாணவர் அர்சிட் அகர்வாலின் கண்டுபிடிப்பிற்கு "காந்தியியன் இளம் தொழிற்நுட்ப கண்டுபிடிப்பு -2018"என்ற விருது கிடைத்துள்ளது. அவர் கண்டுபிடித்த "OBDAS"என்ற தொழிற்நுட்பத்திற்கு சிறந்த கண்டுபிடிப்பாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

காருக்கான

இது குறித்து அர்சிட் அகர்வால் கூறும்போது : "ராஷ்டிரபதி பவனில் இந்த விருதை பெறுவதை பெறும் கவுரவமாக கருதுகிறேன். 500 கல்லூரி மாணவர்கள் பங்குபெற்று சமர்பித்த 13,000 கண்டுபிடிப்புகளுக்கு மத்தியில் என் கண்டுபிடிப்பு சிறந்த கண்டுபிடிப்பாக "OBDAS"அமைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. வாகனங்களில் உள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு இது ஒரு நிரந்தர தீர்வாக இருக்கும் என நம்புகிறேன்." என கூறினார்.

காருக்கான

"OBDAS" என்பது வாகனத்தில் உள்ள பாகங்களின் செயல்பாடுகளை தரவுகளாக பெற்று அதை வைத்து வாகனத்திற்கான தேவைகள் மற்றும் தகவல்களை அளிக்கும் ஒரு தொழிற்நுட்பமாகும். இந்த தொழிற்நுட்பத்துடன் கூடிய கருவியை வாகனத்தில் பொறுத்தினாலே போதும் அது வாகனத்தின் அனைத்து தரவுகளையும் பெற்று செயல்பட துவங்கிவிடும். இது வாகனங்கள் திருடப்படுவதில் இருந்தும் தடுக்கிறது.

காருக்கான

இந்த கருவி பொருத்தப்பட்டால் தற்போது கார் விபத்துக்குள்ளாகிறது எனில் காரில் விபத்திற்குள்ளான நேரம், தேதி, இடம் அகியன பதிவாகியிருக்கும். இந்த தொழிற்நுட்பம் வாகன இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு உதவி கரமாக இருக்கும்.

காருக்கான

மேலும் இது வாகனத்தின் பாகங்களில் செயல்பாடுகளை நிகழ் நேரத்தில் தரவுகளாக எடுப்பதால் அதை வைத்து கார் நிறுவனங்கள் எந்த கார் எந்த நிலையில் உள்ளது. எந்த காருக்கு சர்வீஸ் தேவைபடுகிறது என்பதை உட்காந்த நிலையிலேயே பெற முடியும்.

காருக்கான

இது வாகன உரிமையாளருக்கு சர்வீஸ் குறித்த நினைவூட்டல் செய்ய வசதியாக இருக்கும். ஆம்புலன்ஸ், தீயனைப்பு வாகனங்களில் இதன் பயன்பாடு அதிகமாக இருக்கும். இவ்வாறு இந்த தொழிற்நுட்பம் பல வேலைகளை செய்கிறது. எளிமையாக சொல்ல வேண்டும் என்றாலம் விமானங்களில் இருக்கும் "பிளாக் பாக்ஸ்"

போன்று இது செயல்படும்.

காருக்கான

இவரின் இந்த கண்டுபிடிப்பு வரும் காலத்தில் அனைத்து கார்களிலும் இருக்கும் ஒரு தொழிற்நுட்பமாக மாறலாம். இவ்வாறான கண்டுபிடிப்புகளுக்கு அரசு ஊக்கமளித்து விருதுகள் தருவது வரும் தலைமுறை கண்டுபிடிப்பாளர்களுக்கு பெரும் ஊக்கமாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

01. அஞ்சா நெஞ்சன்' கிம் ஜாங் உன் பயன்படுத்திய புல்லட் புரூஃப் ரயில் பற்றிய தகவல்கள்!

02.68,000 கி.மீ., பைக்கில் பயணம் செய்து அசத்திய இந்தியர்கள்!

03.விமானத்தில் உள்ள ரகசியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

04.உங்கள் கார் சூடாகி நடுரோட்டில் நிற்கிறதா?

05.புதிய பஜாஜ் பல்சர் 150 பைக்கின் விலை விபரம் வெளியானது!

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
UPES student’s life-saving tech bags Gandhian Young Technological Innovation Award 2018. Read in Tamil
Story first published: Wednesday, March 28, 2018, 16:08 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark