ஏப்.1ம் தேதி முதல் ரயில் நிலையங்களில் இதை பார்க்கலாம்! நேரடியா பணம் கொடுக்கமலேயே டிக்கெட் எடுக்கலாம்

ஏப்ரல் 1ம் தேதி முதல் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்க டிக்கெட் எடுப்பதற்காக பணம் கொடுக்கத் தேவையில்லை. ஆன்லைன் மூலமே டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் டிக்கெட்களை எடுக்கும் ஆப்ஷனை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்துகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கடந்த 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பண மதிப்பிழப்பிற்கு பிறகு இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது அதிகமாகிவிட்டது. இன்று யுபிஐ எனப்படும் வசதி மூலம் செல்போன் மூலமே ஒருவர் சுலபமாக பணத்தை மற்றவருக்கு அனுப்ப முடிகிறது. இன்று சிறிய கடை முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை இந்த யுபிஐ மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் வசதியை வைத்திருக்கிறார்கள்.

upi payment on railway ticket counter

டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்வது இன்று பெரும்பாலான இடங்களில் அறிமுகமாகி விட்டாலும், ஒரு சில இடங்களில் இதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக பஸ்களில் டிக்கெட் எடுப்பது, ரயிலுக்காக டிக்கெட் எடுப்பது உள்ளிட்ட இடங்களில் இன்றளவும் நேரடியாக பணமே பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்ய அங்கே வாய்ப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது.

முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளை ஆன்லைனில் எடுக்கும் போது தாராளமாக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நேரடியாக கவுண்டரில் சென்று டிக்கெட் எடுக்கும் போது அங்கு பணத்தை மட்டுமே கொடுத்து டிக்கெட் எடுக்க முடிகிற சூழ்நிலை இருக்கிறது. அங்கு டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது.

upi payment on railway ticket counter

இந்நிலையில் இந்திய ரயில்வே நிர்வாகம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில் யுபிஐ மூலம் பல பரிவர்த்தனை செய்வதற்கான வசதியை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் பயணிகள் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் பயணிப்பதற்கான டிக்கெட்டை இனி பணம் கொடுத்து எடுக்க வேண்டிய தேவை இல்லை. அவர்கள் செல்போன் மூலம் பணத்தை டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் செய்து எடுத்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ரயில்களில் பயணிக்கும் பலர் இப்படியாக டிஜிட்டல் பரிவர்த்தனை வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட நாட்கள் வைத்து வந்தனர். மத்திய அரசு தற்போது அனைத்து பகுதிகளிலும் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனைகளை அதிகப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், அதன் ஒரு படியாக இனி முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட்டுகளையும் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனையில் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்யும் ஆப்ஷனை இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களும் எளிமையாக பயன்படுத்தி துவங்கி விட்டனர். ஏராளமான மக்கள் இன்று கையில் பணம் இல்லாமல் செல்போன் மூலம் ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர். அவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் உள்ள ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்க ஆப் மூலம் டிக்கெட்களை எடுக்கும் வாய்ப்பை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. அதன்படி யூடிஎஸ் என்ற ஆப் மூலம் உங்கள் செல்போனில் இருந்தே டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை செய்து டிக்கெட் விலை பெற்றுக் கொள்ள முடியும்.

தற்போது கூடுதலாக கவுண்டரில் டிக்கெட் பெறும் பயணிகளும் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்வதற்காக இந்த க்யூ ஆர் கோடு முறையை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் இனி ரயில் பயணத்தில் நேரடியாக பணத்தை செலவு செய்ய வேண்டிய தேவை என்பது வெகுவாக குறைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான ரயில்கள் பயணித்து வருகின்றன. அதில் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கிறார்கள். குறிப்பாக முன்பதிவுகளை பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், அவர்கள் டிக்கெட்டுகளை எடுக்க முக்கிய ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் இன்று வருகிறார்கள். இனி அதற்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, March 25, 2024, 12:24 [IST]
English summary
Upi payment on railway station ticket counter starts from april 1
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+