தமிழகத்தில் பஸ் டிக்கெட் எடுக்க இனி பணம் கொடுக்க தேவயில்லை! யுபிஐ, கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழே இயங்கி வரும் பஸ்களில் எல்லாம் இனி காசு கொடுத்து டிக்கெட் பெற வேண்டிய தேவை இல்லை. அதற்கு பதிலாக யுபிஐ மற்றும் கார்டு வழியாக பணப்பரிவினை செய்து டிக்கெட் விலை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் தற்போது பண பரிவர்த்தனை நேரடியாக பணமாக இல்லாமல் ஆன்லைன் மூலம் யூபிஐ பணபரிவர்த்தனை அதிக அளவில் மக்கள் மத்தியில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இது சுலபமாக இருப்பதால் மக்கள் இந்த வகையிலான பண பரிவர்த்தனையை செய்ய விரும்புகிறார்கள். பெரு நகரங்கள் துவங்கி சிறு சிறு கிராமங்களில் உள்ள கடைகளில் கூட யுபிஐ பண பரிவர்த்தனை மூலம் பணம் பெறும் வசதி வந்துவிட்டது.

என்னதான் யூபிஐ-யை கடை கோடி மக்களுக்கு சென்றடைந்தாலும், மற்றொரு பக்கம் அரசு சம்பந்தப்பட்ட பண பரிவர்த்தனைகளில் இந்த யுபிஐ நடைமுறையை கொண்டு வருவதில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக இன்று பஸ் டிக்கெட்டுகளில் யூபிஐ மூலம் பணம் பரிவர்த்தனை செய்வது என்பது முடியாத காரியமாகவே இருக்கிறது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாநகர பகுதிகளில் இயங்கும் பஸ்களில் யுபிஐ மற்றும் கார்டு மூலம் பணப்பரிவர்த்தனை செய்து டிக்கெட் பெறும் வசதியை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. இதன்படி சென்னையில் இயங்கும் அனைத்து பஸ் கண்டக்டர்களுக்கும் யூபிஐ மூலம் பணம் பெறும் வசதி கொண்ட மிஷின் ஒன்றை வழங்கியிருந்தது.

இதனால் மக்கள் பல நேரடியாக பணம் செலுத்தாமல் யுபிஐ, கார்டு உள்ளிட்ட வசதிகளை பின்பற்றி டிக்கெட்டுகளை எடுக்க துவங்கி விட்டார்கள். இது மக்கள் மத்தியில் பிரபலமான நிலையில் இந்தத் திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக தமிழக போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து தமிழக விரைவு போக்குவரத்து கழகங்களில் உள்ள பஸ்களில் இந்த சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் தற்போது 328 ஏசி பஸ்கள் உட்பட மொத்தம் 1,068 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் இனி டிக்கெட் எடுப்பதற்காக பணம் செலுத்த வேண்டிய தேவை இல்லை என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக யுபிஐ மற்றும் கார்டு மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இதற்காக அந்த பஸ்ஸில் பணியில் இருக்கும் கண்டெக்டர் இடம் ஒரு மிஷின் இருக்கும். அந்த மிஷினில் அவர் பணத்தை டைப் செய்தால் தானாக க்யூ ஆர் கோடு ஒன்று வரும். அந்த க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்து பயணிகள் தங்களது ஜிபே, போன் பே போன்ற யுபிஐ ஆப்புகளை பயன்படுத்தி பணத்தை பரிவர்த்தனை செய்யலாம். நேரடியாக ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டிய தேவையில்லை.
செல்போன் இல்லை என்றாலும் கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தியும் டிக்கெட்டுகளை பெற முடியும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அந்த மிஷினிலேயே கார்டு போட்டு பணம் செலுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் பஸ்களில் பயணம் செய்வதற்கு முன்னர் ஏடிஎம்மை தேடி அலைவார்கள். டிக்கெட்டிற்க்கு பணம் மட்டுமே கொடுக்கும் வசதி இருப்பதால் இதை செய்து வந்த நிலையில் இனிய அதற்கான தேவையும் இல்லாமல் போகிறது.
இதுவும் வெற்றி பெறும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் இதுபோன்ற மிஷின்கள் வழங்கப்பட்டு பஸ் டிக்கெட்டுகளை யுபிஐ மற்றும் கார்டு மூலம் பணப்பரிவினை செய்து பெற்றுக் கொள்ள முடியும் என்ற வசதியை அறிமுகப்படுத்த தமிழக போக்குவரத்து துறை திட்டமிட்டு வருகிறது. இது மக்களுக்கு வசதியாக இருக்கும் என்பதால் செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்று ஏழை மக்கள் மத்தியிலும் யுபிஐ மூலம் பணப்பரிவினை செய்யும் பழக்கம் வந்துவிட்டது. ரோட்டோரமாக கடை வைத்திருப்பவர்கள் கூட யுபிஐ மூலம் பணம் பெறும் வசதியை வைத்திருக்கிறார்கள். இதனால் பஸ்களில் டிக்கெட்டுகளை பெற யூபிஐ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியதுதான். இது விரிவுபடுத்தப்பட்டு அனைத்து பசைகளிலும் இந்த வசதியை கொண்டு வர வேண்டும்.


Click it and Unblock the Notifications








