பளிங்கு சிலை மாதிரி இருக்காங்க! காஸ்ட்லி காரில் வந்து இறங்குனது அவங்களா! வீடியோவ பாத்ததும் தூக்கமே போயிருச்சு!
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் வுர்ஃபி ஜாவேத் (Urfi Javed). மற்றவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் மிகவும் வித்தியாசமாக உடை அணியும் வழக்கம் இவருக்கு உண்டு. இதன் காரணமாக சமூக வலை தளங்களில் இவர் எப்போதும் கவனம் ஈர்க்க கூடியவராக உள்ளார்.
இந்த சூழலில் வுர்ஃபி ஜாவேத்தின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதில் வுர்ஃபி ஜாவேத் மிகவும் வித்தியாசமான ஒரு உடையில் காரில் வந்து இறங்கி செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோ, மும்பை விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு வருவதற்கு வுர்ஃபி ஜாவேத் பயன்படுத்தியது ஜீப் மெரிடியன் (Jeep Meridian) கார் ஆகும். அமெரிக்காவை (America) சேர்ந்த ஜீப் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்யும் பிரபலமான கார்களில் ஒன்றாக மெரிடியன் உள்ளது. இது சற்று விலை (Price) உயர்ந்த கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஜீப் மெரிடியன் காரின் ஆரம்ப விலை 33.40 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 39.46 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆன் ரோடு விலை இன்னும் சற்று கூடுதலாக வரும்.

இந்திய சந்தையில் ஏற்கனவே மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஜீப் காம்பஸ் (Jeep Compass) காரின் பிளாட்பார்ம் அடிப்படையில்தான், ஜீப் மெரிடியன் கார் உருவாக்கப்பட்டுள்ளது. ஜீப் மெரிடியன் கார் விலை உயர்ந்ததாக இருப்பதால், அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சம் இல்லை.
வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் கூடிய 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் போன்றவை இந்த காரின் குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும்.
செயல்திறனை பொறுத்தவரையில், ஜீப் மெரிடியன் காரில், 2.0 லிட்டர் டர்போ டீசல் (Diesel) இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக 170 ஹெச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஜீப் மெரிடியன், 7 சீட்டர் கார் ஆகும். அதிநவீன வசதிகள் உடன், அதிகம் பேர் பயணிக்க கூடிய வகையிலான ஒரு காரை எதிர்பார்ப்பவர்களுக்கு ஜீப் மெரிடியன் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும். சவால் நிறைந்த ஆஃப் ரோடு சாகச பயணங்களை மேற்கொள்வதற்கும் ஜீப் மெரிடியன் ஏற்றது என்பது அதன் கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.


Click it and Unblock the Notifications








