ஒரே ஒரு தமிழ் படத்துலதான் நடிச்சிருக்காங்க! ஆனா எந்த நடிகை கிட்டயும் இல்லாத 10 கோடி ரூபா காரை வாங்கீட்டாங்களா!
இந்திய சாலைகளில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை (Rolls Royce Cars) காண்பது என்பது மிகவும் அபூர்வமான ஒரு விஷயம். மிகவும் விலை உயர்ந்தவை என்பதால், தொழில் அதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற ஒரு சிலர் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்துள்ளனர். எனவேதான் இந்திய சாலைகளில் அவற்றை காண்பது என்பது இன்றளவும் அரிதான ஒரு விஷயமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கல்லினன் (Rolls Royce Cullinan) காரை பிரபல நடிகை ஒருவர் தற்போது வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
31 வயது மட்டுமே நிரம்பிய அந்த நடிகை, ஹிந்தி, கன்னடா, தெலுங்கு மற்றும் பெங்காலி என பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால் தமிழில் ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டுமே அவர் நடித்துள்ளார். அந்த திரைப்படம் தி லெஜெண்ட் ஆகும்.

கலவையான விமர்சனங்களை பெற்ற தி லெஜெண்ட் திரைப்படத்தில் தொழில் அதிபர் அருள் சரவணன் (Arul Saravanan) உடன் இணைந்து, அந்த நடிகை நடித்திருந்தார். நீங்கள் நினைத்தது சரிதான். பிரபல நடிகையான ஊர்வசி ரவுத்தேலா (Urvashi Rautela) பற்றிதான் நாங்கள் தற்போது இங்கே பேசி கொண்டுள்ளோம்.
யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒரு வைரல் வீடியோவில் (Viral Video), ஊர்வசி ரவுத்தேலா ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை பயன்படுத்துவதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் இந்த வைரல் வீடியோவில் பேசும் நபர், இந்த ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் ஊர்வசி ரவுத்தேலாவிற்கு சொந்தமானதா? இல்லையா? என்பது உறுதியாக தெரியவில்லை என கூறுகிறார்.

எனினும் இந்த விலை உயர்ந்த காரை ஊர்வசி ரவுத்தேலா சொந்தமாக்கியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பும் இதே ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை ஊர்வசி ரவுத்தேலா பயன்படுத்திய வைரல் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் காட்டு தீ போல் பரவியது.
அத்துடன் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில், ஊர்வசி ரவுத்தேலா பயணம் செய்யும் மற்றொரு வைரல் வீடியோ, அவரது அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. எனவே ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை ஊர்வசி ரவுத்தேலா சொந்தமாக வாங்கியிருப்பதான வாய்ப்புகள் உள்ளதாகவே கருதப்படுகிறது.
ஒரு வேளை ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை ஊர்வசி ரவுத்தேலா சொந்தமாக வாங்கியிருந்தால், இந்த காரை வாங்கிய முதல் இந்திய நடிகை என்ற பெருமை அவருடையதாக இருக்கும். ஏனெனில் இதற்கு முன்பாக வேறு எந்த இந்திய நடிகையும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கியதாக தகவல்கள் இல்லை.
ஒரு வேளை இதை ஊர்வசி ரவுத்தேலா வாங்கவில்லை என்றால், விளம்பர பட நிறுவனம் அல்லது ஹோட்டல் நிர்வாகம் தரப்பில், அவரது பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதாவது விளம்பட ஷூட்டிங் ஒன்றில் பங்கேற்பதற்காக ஊர்வசி ரவுத்தேலா தற்போது துபாய் (Dubai) சென்றுள்ளார்.
அங்கு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (ICC Champions Trophy) போட்டிகளையும் அவர் கண்டுகளித்துள்ளார். அப்போது அவரது பயன்பாட்டிற்காக விளம்பர பட நிறுவனம் அல்லது அவர் தங்கியிருந்த ஹோட்டல் நிர்வாகம் தரப்பில், ஊர்வசி ரவுத்தேலாவிற்கு இந்த ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் வழங்கப்பட்டிருக்கலாம். இதற்கான வாய்ப்புகளும் இருக்கவே செய்கின்றன.
எனவே ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை ஊர்வசி ரவுத்தேலா சொந்தமாக வாங்கி விட்டாரா? இல்லையா? என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் இந்த கேள்விக்கு வரும் நாட்களில் நமக்கு உறுதியான பதில் கிடைக்கலாம். இதற்கிடையே தற்போது வைரலாக பரவி வரும் இந்த வீடியோவில், ஊர்வசி ரவுத்தேலா பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் மதிப்பு விலை 10 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஊர்வசி ரவுத்தேலாவை சமீப காலமாக ஒரே ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில் அடிக்கடி பார்க்க முடிகிறது. எனவேதான் அவர் இந்த விலை உயர்ந்த காரை சொந்தமாக வாங்கி விட்டாரா? என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. ஆனால் இந்த கேள்விக்கு நமக்கு உறுதியான பதில் கிடைக்கவில்லை.
ஒரு வேளை அவர் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கியிருந்தால், ஊர்வசி ரவுத்தேலாவின் கார் கலெக்ஸனில் (Car Collection) அது மகுடமாக இருக்கும். இதற்கு முன்பாக அவரிடம் ஃபெராரி போர்ட்டோஃபினோ (Ferrari Portofino), லம்போர்கினி அவென்டெடார் (Lamborghini Aventador) போன்ற கார்கள் எல்லாம் உள்ளன.
அத்துடன் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series), மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-Class) மற்றும் ஆடி க்யூ7 (Audi Q7) போன்ற கார்களையும் ஊர்வசி ரவுத்தேலா வைத்துள்ளார். இந்த அனைத்து கார்களை காட்டிலும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்தான் மிகவும் விலை உயர்ந்தது. எனவேதான் அந்த காரை ஊர்வசி ரவுத்தேலா வாங்கி விட்டாரா? என்ற கேள்விக்கு பதிலை தெரிந்து கொள்வதற்கு பலரும் ஆர்வமாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications








