நம்ம ஊரு பொக்கிஷத்தை அமெரிக்காவிற்கே எடுத்து சென்ற வெள்ளக்கார தம்பதிகள்! ஆச்சரியமா இருக்கே!
நம்ம ஊரு மக்களின் பொக்கிஷமாக கருதப்படும் ஆட்டோரிக்ஷாவை அமெரிக்காவில் வசிக்கும் தம்பதியினர் வாங்கியிருக்கின்றனர். இந்த நிகழ்வு பற்றிய சுவாரஷ்யமான தகவலையே இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க. ஆட்டோவை வாங்குவதற்காக அமெரிக்க தம்பதியினர் கூறியிருக்கும் காரணத்தையும் இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
இந்தியர்களின் ஃபேவரிட்டான வாகனங்களில் ஒன்று ஆட்டோரிக்ஷா. இந்தியாவின் முக்கிய நகரங்களில் இவற்றை அதிகளவில் காண முடியும். அங்கேயே ஆட்டோக்கள் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. நெரிசல் மிகுந்த சாலைகளில் பயணிக்க ஏதுவான வாகனமாக இது உள்ளது. எனவேதான் விலை உயர்ந்த கார்கள் தங்களிடம் பயன்பாட்டில் இருக்கின்ற போதிலும் ஒரு சிலர் வேலை நேரங்களில் பயணிக்க ஆட்டோவையே பயன்படுத்துகின்றனர். இத்தகைய ஓர் வாகனத்தையே அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதியினர் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுல என்ன ஆச்சரியம் இருக்கு?, நம்ம நாட்டுலையே பல தனிநபர்கள் தங்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இந்த ஆட்டோக்களை வாங்கியிருக்காங்களே என நீங்கள் நினைக்கலாம். இந்தியாவில் இந்த அமெரிக்கார்கள் ஆட்டோவை வாங்கலைங்க, அமெரிக்காவில் வைத்தே ஆட்டோவை வாங்கியிருக்காங்க. இதுவே ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அமெரிக்காவில் இந்த வாகனம் விற்பனைக்குக் கிடைக்குதா?, மேலும், இதை அங்கு வைத்து பயன்படுத்த முடியுமா?, என்கிற சந்தேகமும் அனைவரின் மத்தியிலும் தற்போது எழும்பி உள்ளது.
இந்த கேள்விகள் அனைத்திற்கும் அமெரிக்க தம்பதியினர் பதிலை அளித்துள்ளனர். ஆட்டோவை வாங்கி, அதை தற்போது அமெரிக்காவில் பயன்படுத்தவும் தொடங்கி இருக்கின்றனர். முன்னதாக, இந்த அமெரிக்க தம்பதியினர் சிறிய உருவம் கொண்ட ஹேட்ச்பேக் ரக காரையே வாங்க திட்டம் போட்டிருக்கின்றனர். இந்த திட்டத்திற்கு பதிலாகவே தற்போது அவர்கள் ஆட்டோவை வாங்கியிருக்கின்றனர். கிறிஸ் மற்றும் சாரா எனும் அமெரிக்க தம்பதியினரே ஆட்டோவை வாங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த தம்பதியினர் புகழ்பெற்ற யுட்யூபர்கள் என்பது கவனிக்கத்தகுந்தது. இவர்களுக்கு யுட்யூபில் மட்டும் 125 ஆயிரம் ஃபாலோவர்கள் உள்ளனர். இவர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக தங்களுடைய இந்த கொள்முதலை யுட்யூபில் வீடியோவாக தெரிவித்துள்ளனர். மேலும், ஆட்டோவை அமெரிக்காவில் வைத்து இயக்கும் வீடியோவையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். 2018 மாடல் டிவிஎஸ் கிங் ஆட்டோ ரிக்ஷாவையே அமெரிக்க தம்பதியினர்கள் வாங்கியிருக்கின்றனர். ஃபேஸ்புக் மார்க்கெட் பிளேஸ் வாயிலாக இதனை அவர்கள் வாங்கியிருக்கின்றார்கள்.
கார் வாங்கும் பிளானை கைவிட்டுவிட்டு ஆட்டோவை வாங்க அவர்கள் திடீர் பிளான்போட, அவர்களிடத்தில் போதிய பார்க்கிங் இட வசதி இல்லாததே காரணமாக உள்ளது. ஏற்கனவே இந்த தம்பதியினர் இடத்தில் ஓர் பெரிய வேன் உள்ளது. இதைக் கொண்டே தங்களின் அதிகப்படியான பயணங்களை யுட்யூபர்களான கிறிஸ், சாரா தம்பதியினர் பயன்படுத்தி வருகின்றனர். இதை நிறுத்துவதற்கே போதிய இட வசதி தங்களிடம் இல்லை என அந்த தம்பதியினர் கூறுகின்றனர்.

இதன் காரணத்தினாலேயே பெரிய காருக்கு பதிலாக ஹேட்ச்பேக்கை வாங்க திட்டமிட்டிருந்தனர். இந்த மாதிரியான சூழலிலேயே ஃபேஸ்புக் மார்க்கெட் பிளேசில் ஆட்டோ விற்பனைக்கு வந்தது அவர்களின் கண்களில் பட்டுள்ளது. இது தங்களிடத்தில் இருக்கும் பார்க்கிங்கிற்கு ஏதுவானதாக இருக்கும் என அவர்கள் எண்ணியிருக்கின்றனர். இதன் அடிப்படையில்யே அவர்கள் ஆட்டோவை வாங்கியிருக்கின்றனர். இதன் விலையும் மலிவு, மேலும், மைலேஜும் அதிகம் வழங்கும் என்பதும் ஆட்டோவை அவர்கள் வாங்க மற்றொரு முக்கிய காரணமாக இருக்கின்றது.
ஆட்டோவை தங்களின் எதிர்கால வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த அமெரிக்க தம்பதியினர் திட்டமிட்டுள்ளனர். ஆட்டோவை இயக்க ஆரம்பத்தில் தம்பதியினர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுவதை நம்மால் காண முடிகின்றது. அதேவேளையில், அவர்கள் விரைவில் அதை ஓட்டவும் பழகிக் கொண்டனர். இதுகுறித்த காட்சிகளும் அவர்கள் வெளியிட்டிருக்கும் யுட்யூப் வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றது. இந்த தம்பதியினர் அவர்களது வேனைக் கொண்டு உலகம் சுற்றும் வாலிபவர்களாக சுற்றி வருகின்றனர்.
அந்தவகையில் அவர்கள் பல நாடுகளுக்கு சென்று வந்திருக்கின்றனர். இந்த நிலையிலேயே இந்த நாடோடி ஜோடி ஆட்டோவை வாங்கியிருக்கின்றது. எதிர்காலத்தில் இந்த வாகனத்தில் தங்களுடைய நாடோடி பயணங்களை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு முன்னதாக நடை பயணம், சைக்கிளில் ஊர் சுற்றுவது போன்ற பலவற்றை அவர்கள் செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய பயணங்களுக்காக தங்களுடைய வேனை அவர்கள் மோட்டார் வீடாக மாற்றியிருக்கின்றனர். இதுபோன்ற ஓர் மாற்றத்தை அவர்கள் ஆட்டோவிலும் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








