இந்திய இளைஞர் தொடர்ந்த வழக்கு... உலகின் பெரும் பணக்காரர் வாதத்தை ஏற்க மறுத்த அமெரிக்க நீதிமன்றம்... முழு தகவல்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க இளைஞர் தொடர்ந்த வழக்கில், உலகின் பெரும் பணக்காரர் வாதத்தை அமெரிக்க நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. சமீபத்தில் அரங்கேறிய காரசார விவாதம் பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

இந்திய இளைஞர் தொடர்ந்த வழக்கு... உலகின் பெரும் பணக்காரர் வாதத்தை ஏற்க மறுத்த அமெரிக்க நீதிமன்றம்... முழு தகவல் உள்ளே!

உலக புகழ்பெற்ற மின் வாகன தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா. இந்த நிறுவனம் மின் வாகனங்களை மட்டுமே மையக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க். உலகின் பெரும் பணக்காரர்களில் இவரும் ஒருவர் ஆவார்.

இந்திய இளைஞர் தொடர்ந்த வழக்கு... உலகின் பெரும் பணக்காரர் வாதத்தை ஏற்க மறுத்த அமெரிக்க நீதிமன்றம்... முழு தகவல் உள்ளே!

அண்மைக் காலங்களாக இவரின் சொத்து மதிப்பு உயர்ந்து வந்ததை அடுத்து உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றனர். 199 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளுக்கு உரிமையாளராக மாறியிருக்கின்றார் மஸ்க்.

இந்திய இளைஞர் தொடர்ந்த வழக்கு... உலகின் பெரும் பணக்காரர் வாதத்தை ஏற்க மறுத்த அமெரிக்க நீதிமன்றம்... முழு தகவல் உள்ளே!

இவர் மீதே இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஓர் இளைஞர் அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடர்ந்திருக்கின்றார். வழக்கு தொடர்ந்தவர் ரந்தீப் ஹோதி ஆவார். இவரே, எலன் மஸ்க் தனக்கு எதிராக ஓர் ஆன்லைன் வெறுப்பு பிரசாரத்தை மேற்கொண்டதாக வழக்கு தொடர்ந்தவர். தற்போது இவ்வழக்கு அமெரிக்காவின் கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது.

இந்திய இளைஞர் தொடர்ந்த வழக்கு... உலகின் பெரும் பணக்காரர் வாதத்தை ஏற்க மறுத்த அமெரிக்க நீதிமன்றம்... முழு தகவல் உள்ளே!

வழக்கு தொடர்ந்து அமெரிக்கா வாழ் இந்தியர் ரன்தீப் ஹோதி

இவ்வழக்கு குறித்த விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, எலன் மஸ்க் சார்பில் வாதிட்ட வழக்குரைஞர், "டுவிட்டரில் பதிவிடுவது மஸ்க்-கின் கருத்து சுதந்திரம் என்றும், கருத்துரிமையை பறிக்கும் நோக்கில் வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதாகவும்" வாதிட்டார். தொடர்ந்து, "இளைஞர் தொடுத்திருக்கும் வழக்கு ஆதாரமற்றது. இவ்வழக்கினை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

இந்திய இளைஞர் தொடர்ந்த வழக்கு... உலகின் பெரும் பணக்காரர் வாதத்தை ஏற்க மறுத்த அமெரிக்க நீதிமன்றம்... முழு தகவல் உள்ளே!

ஆனால், இதனை ஏற்க மறுத்த கலிஃபோர்னியா நீதிமன்றம், வழக்கினை நிலுவையில் போட்டது. அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பட்டம் படிப்பு பயின்று வருகிறார் ரன்தீப் ஹோதி. மஸ்கிற்கு எதிராக கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தவர் இவரே ஆவார். இவர் அமெரிக்க இந்தியர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்திய இளைஞர் தொடர்ந்த வழக்கு... உலகின் பெரும் பணக்காரர் வாதத்தை ஏற்க மறுத்த அமெரிக்க நீதிமன்றம்... முழு தகவல் உள்ளே!

தனக்கு எதிராக மஸ்க் ஆன்லைன் வெறுப்பு பிரச்சாரத்தை நடத்தியதாக கூறி கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் அலமேடா கவுண்டி உயர் நீதிமன்றத்தில் இவர் புகார் அளித்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே இவ்வழக்கின் விசாரணை கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் மிகவும் காரசரமான நிலையில் அரங்கேறியிருக்கின்றது.

இந்திய இளைஞர் தொடர்ந்த வழக்கு... உலகின் பெரும் பணக்காரர் வாதத்தை ஏற்க மறுத்த அமெரிக்க நீதிமன்றம்... முழு தகவல் உள்ளே!

தனது ரிசர்ச் விஷயமாக டெஸ்லா நிறுவனத்தை அணுகியபோது ஏற்பட்ட தகராறின் காரணமாகவே இருவருக்கும் இடையே டுவிட்டர் பதிவு போர் ஏற்பட்டிருக்கின்றது. இதன் இறுதி விளைவாக தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
US Court Rejects Elon Musk's Argument Over Indian American Student's Case. Read In Tamil.
Story first published: Saturday, January 30, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X