2020ல் அமெரிக்க போர் விமானங்களில் லேசர் ஆயுதங்கள்!!

Written By:

அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவின் 5ம் தலைமுறை போர் விமானங்களில் லேசர் ஆயுதங்களை பொருத்தப்பட உள்ளதாக சமீபத்தில் நடந்த அந்நாட்டு விமானப்படை மாநாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 30 ஆண்டுகள் முயற்சியில் தற்போது இந்த லேசர் ஆயுதங்களை உருவாக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. அதிசக்திவாய்ந்த இந்த லேசர் ஆயுதங்கள் மூலம், எதிர்கால போர் யுக்திகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

ஆரம்ப நிலை

ஆரம்ப நிலை

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க போர் கப்பல்களில் லேசர் ஆயுதம் பொருத்தப்பட்டு சோதிக்கப்பட்டது. ஆனால், அது எதிர்பார்த்த அளவு திறன் கொண்டதாக இல்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்தநிலையில், அதிநவீன லேசர் ஆயுதங்களை தற்போது அமெரிக்கா உருவாக்கியிருக்கிறது.

சோதனை தீவிரம்

சோதனை தீவிரம்

போர் விமானங்களில் பொருத்தப்பட இருக்கும் லேசர் ஆயுத கருவிகளை சோதித்து பார்க்கும் முயற்சிகள் தற்போது துவங்கியுள்ளன. இதனை மேம்படுத்தி, அடுத்த 5 ஆண்டுகளில் போர் விமானங்களில் பொருத்துவதற்கு அமெரிக்க விமானப் படை முடிவு செய்துள்ளது.

பயன்பாடு

பயன்பாடு

எதிரிகளின் போர் விமானங்கள், ஆள் இல்லா விமானங்கள், உளவு விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை இந்த லேசர் ஆயுதம் மூலமாக பஸ்பமாக்கிவிட முடியும். இதன்மூலம், ராணுவ ஆயுத தயாரிப்பு மற்றும் போர் யுக்திகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்று கருதப்படுகிறது.

 புரோட்டோடைப்

புரோட்டோடைப்

தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் மூன்றாம் தலைமுறை 150KW புரோட்டோடைப் லேசர் ஆயுதம் வெறும் 1.3 மீட்டர் நீளமும், 0.4 மீட்டர் அகலமும், 0.5 மீட்டர் உயரமும் கொண்டது. இந்த திட்டம் ஹெல்லாட்ஸ் என்ற திட்டதின் பெயரில் அழைக்கப்படுகிறது. இதனால், எதிரிகளை தாக்குவதற்கும், தற்காத்துக் கொள்வதற்கும் போர் விமானங்களில் பொருத்தப்படும் பெரிய அளவிலான ஆயுதங்களுக்கு விடை கொடுக்க முடியும்.

பேட்டரியில் இயங்கும்...

பேட்டரியில் இயங்கும்...

லேசர் ஆயுத கருவிகள் மிகவும் இலகுவானதும் கூட. இந்த லேசர் ஆயுதங்கள் லித்தியம் அயான் பேட்டரியில் இயங்கும். மேலும், பிற ஆயுதங்களை போன்று இல்லாமல், தொடர்ச்சியாக இயக்க முடியும் என்பதும் இதன் கூடுதல் சிறப்பு.

அடுத்த தலைமுறை ஆயுதம்

அடுத்த தலைமுறை ஆயுதம்

இதனிடையே, அமெரிக்காவின் 6ம் தலைமுறை லாக்ஹீட் மார்ட்டின் போர் விமானத்தில் புதிய ஏபிசி லேசர் சிஸ்டம் பொருத்தப்பட உள்ளதாக அமெரிக்க ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த லேசர் ஆயுத கருவி மிகவும் நவீன தொழில்நுட்பம் கொண்டதாக இருக்கும். இது 360 டிகிரி கோணத்தில் தாக்கும் வசதியை பெற்றிருக்கிறது.

பின்னடைவுகள்

பின்னடைவுகள்

பனிப்பொழிவு, மழை நேரங்களிலும் இந்த லேசர் ஆயுதங்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. எனவே, இதனை அனைத்து கால நிலைகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு வருகிறதாம். அதில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டால்தான் இது முழுமையான ஆயுதங்களாக பயன்படுத்த இயலும்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The U.S. military has made strides in developing lasers, microwaves and other directed energy weapons, and could soon use them more widely, top armed forces officials and U.S. lawmakers told an industry conference recently.
Story first published: Tuesday, September 22, 2015, 12:12 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos