கடைசி ஆசை... பைக் பிரியரின் உடலுடன் சேர்த்து புதைக்கப்பட்ட ஹார்லி பைக்!

By Saravana

அமெரிக்காவின் ஓஹியோ பகுதியை சேர்ந்தவர் ஸ்டான்லி. தான் இறந்த பின், தன்னுடைய ஹார்லி டேவிட்சன் பைக்கையும் சேர்த்து புதைக்க வேண்டும் என்று அவர் தனது கடைசி ஆசையாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த வாரம் இவர் நுரையீரல் புற்றுநோயால் தனது 81 - வது வயதில் மரணமடைந்தார். இதையடுத்து, அவரது கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாக அவரது பிள்ளைகள், அவர் வைத்திருந்த 1967ம் ஆண்டு மாடல் ஹார்லி டேவிட்சன் எலக்ட்ரா க்ரூஸர் பைக்கையும் சேர்த்து புதைக்க முடிவு செய்தனர்.

Harley Bike Lover

இதற்காக, ஒரு பிரத்யேக கண்ணாடி பொருத்தப்பட்ட சவப்பெட்டியும் தயார் செய்யப்பட்டது. அதில், பதப்படுத்தப்பட்ட ஸ்டான்லியின் உடல் அவரது பிரியமான ஹார்லி டேவிட்சன் பைக்கில் ஓட்டுவது போலேவே அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டது. ஒரு வாரமாக உடலை பெட்டிக்குள் வைக்கும் பணிகள் நடந்தன.

லெதர் ஜாக்கெட், ஹெல்மெட், கையுறைகளும் அவரது இறந்த உடலில் அணிவிக்கப்பட்டிருந்தன. பின்னர், கிரேன் உதவியுடன் அவரது உடலும், பைக்கும் இருந்த பெட்டி சவக்குழிக்குள் இறக்கப்பட்டது. அவரது உடல் அடக்க நிகழ்ச்சியில் குடும்பத்தார் மட்டுமின்றி, அவரது நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 1, 2014, 13:21 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+