என்ன ஒரு அழகான குடும்பம்!! கூகுள் மேப் மொத்தமா எல்லாத்தையும் மாத்திடுச்சு- மொத்த குடும்பமும் பெரும் துயரத்தில்

அமெரிக்காவில் கூகுள் வரைப்படத்தை பின்பற்றி உடைந்த பாலத்தின் மீது காரில் சென்றவர் உயிரிழந்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி உள்ளது. காரில் சென்ற அந்த நபர் கிட்டத்தட்ட சுமார் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்ததில், கார் குப்புற கவிழ்ந்து உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

இன்றைய உலகில் இணையம் நம் வாழ்வில் ஓர் அங்கமாக மாறிவிட்டது. எல்லாவற்றிற்கும் இணையத்தில் பதில் உள்ளதா என்றே நாம் தேடிக்கிறோம். குறிப்பாக, யூடியூப்பை பார்த்து தனக்கு தானே பிரசவம் செய்யும் அளவிற்கு நம்மை இணைய மோகம் ஆட் கொண்டுள்ளது. யூடியூப்பில் இருக்கும் வீடியோக்கள் நமக்கு ஓர் பரிந்துரையை மட்டுமே வழங்குமே அன்றி, அனுபவத்தை வழங்காது என்பதை மறந்துவிட வேண்டாம்.

man dies after following map

அதேபோல், இணையத்தில் நாம் அதிகளவில் பயன்படுத்துவது மேப் செயலியை ஆகும். முன்னர் காலத்தில் எல்லாம் புதியதாக ஓர் இடத்திற்கு செல்லும்போது, வழியில் நிறைய பேரிடம் செல்ல வேண்டிய வழியை கேட்டப்படி செல்வோம். ஆனால், இப்போது அவ்வாறு மற்றவர்களிடம் வழிக் கேட்டு செல்வது நம்மிடத்தில் வெகுவாக குறைந்துவிட்டது.

முடிந்தவரையில், கூகுள் மேப்பை பார்த்து செல்லவே நாம் முயற்சிக்கின்றோம். இதனால், ஆள் நடமாட்டமே இல்லாத இடத்திற்கு கூட செல்ல முடிகிறது என்றாலும், சில சமயங்களில் கூகுள் மேப் காலை வாரி விடவும் செய்துள்ளது. ஆனால், அமெரிக்காவில் ஒருவரது உயிரே கூகுள் மேப்பினால் பறிப்போய் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா...

man dies after following map

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தை சேர்ந்த பிலிப் பாக்ஸ்சன் என்பவர் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி தனது மகளின் 9வது பிறந்த நாளை கொண்டாடுவதற்கு ஆவலாக தனது வீட்டிற்கு காரில் சென்றுக் கொண்டிருந்துள்ளார். முன்னாள் அமெரிக்க இராணுவ வீரரான பிலிப் பாக்ஸ்சன் இராணுவத்தில் இருந்து விலகிய பின் மருத்துவ கருவிகளை விற்பனை செய்பவராக பணிப்புரிந்து வந்துள்ளார்.

சேல்ஸ்மேன் என்றாலே தினந்தோறும் வித்தியாச, வித்தியாசமான இடங்களுக்கு செல்வது வழக்கம் தானே. அவ்வாறு, மகளின் பிறந்த நாளன்று வேலை விஷயமாக ஓர் இடத்திற்கு காரில் சென்றிருந்த பிலிப் பாக்ஸ்சன் அதன்பின் தனது வீட்டிற்கு விரைவாக செல்ல கூகுள் மேப் செயலியை பயன்படுத்தி உள்ளார். கூகுள் மேப் பிலிப் பாக்ஸ்சனுக்கு தெரியாத ஓர் இடத்திற்கு அழைத்து சென்றுள்ளது.

அந்த சமயத்தில் ஓர் உடைத்த பாலம் வழியாக பிலிப் பாக்ஸ்சன் தனது காரில் சென்றுள்ளார். அந்த சமயத்தில் வானிலை மிக மோசமாக இருந்துள்ளது. அடைமழை வெளுத்து வாங்கிக் கொண்டு இருந்துள்ளது. அது மாலை நேரமாக இருப்பினும், கனமழையினால் விரைவாக அடர் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் தான் ஒரு பாலத்தின் மீது செல்கிறோம் என்பது கூட பிலிப் பாக்ஸ்சனுக்கு அந்த சமயத்தில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என போலீஸார் தங்களது விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

man dies after following map

மேலும், அந்த பாலத்தில் தடுப்பு கம்பிகள், எச்சரிக்கை குறியீடுகள் போன்ற வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் எந்தவொரு சிக்னலும் அங்கு இல்லை எனவும் நேரில் அந்த இடத்திற்கு சென்ற போலீஸார் தெரிவித்துள்ளனர். தடுப்பு சுவர் இல்லாததை விட பிலிப் பாக்ஸ்சனுக்கு பெரிய ஆபத்து அதன் பின்பே காத்திருந்துள்ளது. ஏனெனில், அது ஒரு உடைந்த பாலம் ஆகும்.

ஆனால், கூகுள் மேப்பில் அந்த வழியாக பாதை செல்வதாக காட்டியுள்ளது. அந்த தைரியத்தில், பாலம் உடைந்திருந்ததை கவனிக்காமல் சென்ற பிலிப் பாக்ஸ்சனின் கார் சுமார் 20 அடி பள்ளத்தில் தலைக்கீழாக கவிழ்ந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த பிலிப் பாக்ஸ்சன் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும், அவரது உயிர் பிரிந்துவிட்டது. இதனையடுத்து பிலிப் பாக்ஸ்சனின் குடும்பத்தார் கூகுள் நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கூகுள் மேப் நகரத்திற்குள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வழிக்காட்டி ஆகும். ஆனால், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு செல்லும்போது கூகுள் மேப்பை பயன்படுத்தினாலும், முடிந்த வரையில் அந்த பகுதிக்கு செல்வதற்கு முன்பாக யாரிடமாவது வழிக் கேட்டு செல்ல முயலுங்கள். ஏனெனில், கூகுள் மேப் ஓர் மென்பொருள் தொழிற்நுட்பம். அது மெதுவாகவே ஒவ்வொரு இடமாக அப்டேட் ஆகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 26, 2023, 11:34 [IST]
English summary
Us man dies after driving off broken bridge while following google map directions
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X