34 ஆண்டுகள் பின் வெளியாகும் டாப் கன் மேவரிக் 2.. டாம் க்ரூஸின் ஆசையை நிராகரித்த அமெரிக்க கடற்படை..

34 ஆண்டுகளுக்கு பின் எடுக்கப்பட்டிருக்கும் டாப் கன் மேவரிக் 2 திரைப்படத்தில் டாம் க்ரூஸ் செய்யவிருந்த சாகசங்கள் சிலவற்றிற்கு அமெரிக்க கடற்படை நிராகரித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலை இந்த பதிவில் காணலாம்.

34 ஆண்டுகள் பின் வெளியாகும் டாப் கன் மேவரிக் 2.. டாம் க்ரூஸின் ஆசையை நிராகரித்த அமெரிக்க கடற்படை... சிறப்பு தகவல்!

ஹாலிவுட் திரையுலகில் அதிகம் ஃபேமஸான நடிகர்களில் டாம் க்ரூஸ் ஒருவர். இவர் சாகச காட்சிகளுக்கு பெயர் போன நடிகர் ஆவார். பல திரைப்படங்களில் டூப் இல்லாமலேயே நடித்துள்ளார். குறிப்பாக, விமானத்தை இயக்குதல் மற்றும் மிக உயரமான கட்டிடங்களில் தொங்குவது போன்ற பல்வேறு காட்சிகளில் துணை நடிகர் இல்லாமலேயே அவர் நடித்திருக்கின்றார்.

34 ஆண்டுகள் பின் வெளியாகும் டாப் கன் மேவரிக் 2.. டாம் க்ரூஸின் ஆசையை நிராகரித்த அமெரிக்க கடற்படை... சிறப்பு தகவல்!

டாம் க்ரூஸ் ஓர் நன்கு பயிற்சி பெற்ற விமானி என்பதனாலயே பல திரைப்படங்களில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களை அவரே இயக்கியிருப்பார். இதுபோன்ற காட்சிகளில் அவர் அதிகம் நடிப்பதன் காரணத்தினாலயே உலகளவில் அவருக்கு ரசிகர்கள் இருக்கின்றனர்.

அந்தவகையில், டாம் க்ரூஸ்-க்கு ஹாலிவுட் மட்டுமின்றி உலகளவில் ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தியதில் டாப் கன் திரைப்படம் முக்கிய பங்கு வகிக்கின்றது. பல அதிரடி சாகச காட்சிகளுடன் கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகிய படம்தான் இந்த டாப் கன்.

34 ஆண்டுகள் பின் வெளியாகும் டாப் கன் மேவரிக் 2.. டாம் க்ரூஸின் ஆசையை நிராகரித்த அமெரிக்க கடற்படை... சிறப்பு தகவல்!

இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாவதற்கு தயார் நிலையில் உள்ளது. வருகின்ற ஜூன் மாதம் 26ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருந்தது. ஆனால், தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் உயிர் கொல்லி கொரோனா வைரஸ் இதற்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.

34 ஆண்டுகள் பின் வெளியாகும் டாப் கன் மேவரிக் 2.. டாம் க்ரூஸின் ஆசையை நிராகரித்த அமெரிக்க கடற்படை... சிறப்பு தகவல்!

இதே நிலையைதான் உலகின் அனைத்து திரையுலகும் தற்போது சந்தித்து வருகின்றன. எனவே, பல திரைப்படங்களின் வெளியீடு தேதி குறிப்பிடாமலே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரசிகர்களை பெருத்த ஆவலில் ஆழ்த்தியிருக்கும் 'டாப் கன் மேவரிக்' திரைப்படத்தின் பாகம் இரண்டைப் பற்றிய சில சுவாரஷ்ய தகவல் வெளியாகியுள்ளன.

34 ஆண்டுகள் பின் வெளியாகும் டாப் கன் மேவரிக் 2.. டாம் க்ரூஸின் ஆசையை நிராகரித்த அமெரிக்க கடற்படை... சிறப்பு தகவல்!

இப்படத்தின் முதல் பாகத்தில், பீட் மேவரிக் மிச்செல் என்ற கதாபாத்திரத்தில் டாம் க்ரூஸ் நடித்திருப்பார். அதில், அவருக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரம் இளம்வயது விமானியாகும். இதன் இரண்டாம் பாகத்தில் நண்பர் கூஸ் அவர்களின் மகன் ப்ராட்லிக்கு டாம் க்ரூஸ் இன்ஸ்ட்ரக்ட்ர்-ஆக செயல்படுவது போன்ற கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

34 ஆண்டுகள் பின் வெளியாகும் டாப் கன் மேவரிக் 2.. டாம் க்ரூஸின் ஆசையை நிராகரித்த அமெரிக்க கடற்படை... சிறப்பு தகவல்!

ஆகையால் இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் சண்டை மற்றும் விமான சேஸிங் காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் அமைந்திருந்தது.

டாப் கன் முதல் பாகத்தில் டாம் க்ரூஸ் லாக்ஹீட் மார்டின்ஸ் எஃப்-14 விமானத்தைப் பயன்படுத்தியிருப்பார். இதேபோன்று, இரண்டாம் பாகத்திற்காக அவர் போயிங் எஃப்/ஏ - 18 சூப்பர் ஹார்னட் விமானத்தைக் கோரியுள்ளார். ஆனால், அமெரிக்காவின் கடற்படை டாம் க்ரூஸின் இந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

34 ஆண்டுகள் பின் வெளியாகும் டாப் கன் மேவரிக் 2.. டாம் க்ரூஸின் ஆசையை நிராகரித்த அமெரிக்க கடற்படை... சிறப்பு தகவல்!

ஆகையால், இப்படத்தில் போயிங் எஃப்/ஏ - 18 சூப்பர் ஹார்னட் விமானத்திற்கு பதிலாக வேறொரு விமானம் பயன்படுத்தப்பட்டு அதை கணினி கிராஃபிக்ஸ்கள் மூலம் போயிங் எஃப்/ஏ - 18 சூப்பர் ஹார்னட் விமானத்திற்கு இணையாக படக்குழு மாற்றியுள்ளது. இதற்காக பி-51 விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஏராளமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

34 ஆண்டுகள் பின் வெளியாகும் டாப் கன் மேவரிக் 2.. டாம் க்ரூஸின் ஆசையை நிராகரித்த அமெரிக்க கடற்படை... சிறப்பு தகவல்!

அதேசமயம், திரைப்படம் அதிக த்ரில்லாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிகபட்ச திரைப்படக் காட்சிகள் பலவற்றை கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸை பயன்படுத்தாமல் உண்மை நிகழ்வாகவே படம்பிடிக்க படக்குழு அதிக உழைப்பைக் கொட்டியுள்ளது. இதற்காக பல ஸ்டண்டுகளை டாம் க்ரூஸ் மற்றும் சக நடிகர்கள் சிலர் ரியலாக செய்து அசத்தியுள்ளனர். ஆகையால் இப்படத்தின்மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் ஹை பீக்கில் உள்ளது.

34 ஆண்டுகள் பின் வெளியாகும் டாப் கன் மேவரிக் 2.. டாம் க்ரூஸின் ஆசையை நிராகரித்த அமெரிக்க கடற்படை... சிறப்பு தகவல்!

ஆனால், கொரோனோ வைரஸ் இதற்கு ஆப்பு வைத்துள்ளது. இந்த கொடிய வைரசால் உலகம் முழுக்க 12,01,473 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, உலகம் முழுக்க இதுவரை 64,691 பேர் வைரசால் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் இந்த வைரசின் தீவிரம் தற்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதுவரை இந்த வைரசால் இந்தியர்கள் 3,374 பாதிக்கப்பட்டுள்ளனர். 77 உயிரிழந்துள்ளனர். இவ்வாறு, கொரோனாவின் தீவிரம் நாளுக்கு விரிவடைந்துக் கொண்டே இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, April 5, 2020, 12:52 [IST]
English summary
US Navy Denied Tom Cruise Request. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+