வேட்டைக்காரன்.... அமெரிக்காவின் புதிய ஆளில்லா போர்க்கப்பலின் பெயர்!

By Saravana

முதல்முறையாக ஆளில்லா போர்க்கப்பலை தயாரித்துள்ளது அமெரிக்கா. ரிமோட் கன்ட்ரோல் மூலமாக இதனை இயக்கத் தேவையில்லை என்பதே இதன் சிறப்பான விஷயம்

இந்த புதிய போர்க்கப்பல் மூலமாக ரஷ்யா, சீனாவுக்கு புதிய போட்டியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்கா. இந்த கப்பல் குறித்த கூடுதல் தகவல்கள் இதோ உங்களுக்காக...

வேட்டைக்காரன்

வேட்டைக்காரன்

Sea Hunter என்று இந்த புதிய ஆளில்லா போர்க்கப்பலுக்கு பெயரிடப்பட்டு இருக்கிறது.

 வடிவம்

வடிவம்

132 அடி நீளம் கொண்டதாக இந்த போர்க்கப்பல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கப்பல் டீசல் எஞ்சின் மூலமாக இயக்கப்படுகிறது.

 வேட்டைக்காரன்

வேட்டைக்காரன்

நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிவதை நோக்கமாக கொண்டு இந்த ஆளில்லா போர்க்கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பல்வேறு வகை பயன்பாட்டுக்கும் ஏற்ற வகையில், இந்த போர்க்கப்பல் தயாரிக்கப்பட்ட பிளாட்ஃபார்மை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடை சுமக்கும் திறன்

எடை சுமக்கும் திறன்

மனித ஆற்றலில் இயங்கும் போர்க்கப்பல்களைவிட இந்த ஆளில்லா போர்க்கப்பலில் அதிக பாரத்தை ஏற்றுவதற்கான இடவசதியும், வடிவமைப்பும் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சிறப்பான இயக்கம்

சிறப்பான இயக்கம்

இந்த போர்க்கப்பலை சுற்றியிருக்கும் கேமரா, சென்சார்கள் மூலமாக அருகில் வரும் படகுகள், தடைகள், பொருட்களை எளிதாக கண்டறிவதுடன், மாற்றுப் பாதையில் உடனடியாக செல்லும் திறன் படைத்தது.

ரிமோட் கன்ட்ரோல்

ரிமோட் கன்ட்ரோல்

சில ஆளில்லா கப்பல்களை ரிமோட் கன்ட்ரோல் மூலமாக இயக்க பணியாளர் தேவைப்படுவர். ஆனா்ல, இதனை இயக்க ரிமோட் கன்ட்ரோல் அல்லது அதற்கு ஒரு ஆள் கூட தேவையில்லை என்று பெருமிதம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

டிரக் டிசைன்

டிரக் டிசைன்

இதனை டிஏஆர்பிஏ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த போர்க்கப்பல் அடிப்படையல் ஆளில்லாமல் இயங்கும் டிரக்காக வடிவமைக்கப்பட்டு, பின்னர் ஆளில்லா போர்க்கப்பலாக மாற்றப்பட்டதாக டிஏஆர்பிஏ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சோதனை ஓட்டம்

சோதனை ஓட்டம்

அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த ஆளில்லா போர்க்கப்பல் பாரசீக வளைகுடா மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடலில் வைத்து சோதனைகள் நடத்தப்பட உள்ளது. அதன்பின்னர், அமெரிக்க கடற்படையில் இந்த போர்க்கப்பல் வர இருக்கிறது.

 சீனாவுக்கு போட்டி

சீனாவுக்கு போட்டி

தென் சீன கடலில் சீனாவின் கடற்படையின் ஆதிக்கத்திற்கு போட்டியாக இந்த புதிய ஆளில்லா போர்க்கப்பலை அமெரிக்கா உருவாக்கியிருக்கிறது.

படைப்பிரிவு

படைப்பிரிவு

அமெரிக்காவின் 7வது கடற்படை பிரிவில் சேர்க்கப்பட இருக்கும் புதிய ஆளில்லா போர்க்கப்பல் ஜப்பான் அருகே வைத்து சோதனைகள் நடத்தப்பட உள்ளது.

புதிய புரட்சி

புதிய புரட்சி

ராணுவ பலத்தில் உலகிலேயே அமெரிக்கா நம்பர்-1 ஆக விளங்குகிறது. இந்த நிலையில், இந்த புதிய ஆளில்லா போர்க்கப்பல் நிச்சயம் அமெரிக்காவின் கடற்படை மற்றும் ராணுவ பலத்தை ஒருபடி மேலே உயர்த்தும் விதமாகவே இருக்கும்.

உலகின் டாப் 10 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள்!

உலகின் டாப் 10 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள்!

More from DriveSpark

Article Published On: Tuesday, April 12, 2016, 12:07 [IST]
English summary
US Navy’s new autonomous warship Details.
மேலும்... #ராணுவம் #military
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+