5,000 மைல்கள் சைக்கிள் ஓட்டி வரும் இளைஞர்... நிதியை அள்ளி கொடுக்கும் மக்கள்... எதற்காக தெரியுமா?

5,000 மைல்கள் சைக்கிள் ஓட்டி வரும் இளைஞருக்கு, மக்கள் நிதியை அள்ளி கொடுத்து வருகின்றனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

5,000 மைல்கள் சைக்கிள் ஓட்டி வரும் இளைஞர்... நிதியை அள்ளி கொடுக்கும் மக்கள்... எதற்காக தெரியுமா?

உள்நாட்டு போரால் மிக கடுமையான பாதிப்பை சந்தித்து கொண்டிருக்கும் ஒரு நாடு ஏமன். இது ஏற்கனவே வறுமையில் வாடி வரும் ஒரு ஏழ்மையான நாடு. உள்நாட்டு போரால் ஏமனில் வறுமை தலைவிரித்தாடி வந்த நிலையில், சமீபத்தில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) பிரச்னையும் விஸ்வரூபம் எடுக்க, ஏமன் நிலைகுலைந்து போனது.

5,000 மைல்கள் சைக்கிள் ஓட்டி வரும் இளைஞர்... நிதியை அள்ளி கொடுக்கும் மக்கள்... எதற்காக தெரியுமா?

அதனுடன் கன மழை வேறு கொட்டி தீர்க்க ஏமன் நாட்டு மக்களின் வாழ்வாதாரம் கடுமையான பாதிப்பை சந்தித்தது. இப்படி பல்வேறு காரணங்களால் சின்னாபின்னமாகியுள்ள ஏமன் மக்களுக்கு உதவுவதற்காக, அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் தற்போது நீண்ட நெடிய சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு பாராட்டுக்களுடன், நிதியும் குவிந்து வருகிறது.

5,000 மைல்கள் சைக்கிள் ஓட்டி வரும் இளைஞர்... நிதியை அள்ளி கொடுக்கும் மக்கள்... எதற்காக தெரியுமா?

ஏமனில் தற்போது நிலவி கொண்டுள்ள நெருக்கடி பிரச்னைகளை எதிர்கொள்ள நிதி திரட்டும் நோக்கத்துடன், அமெரிக்காவில் உள்ள பூ பூ பாயிண்ட்டில் இருந்து பீ பீ க்ரீக் வரை, அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது வரை மட்டும் அவர் 4 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக சைக்கிள் பயணம் செய்துள்ளார்.

5,000 மைல்கள் சைக்கிள் ஓட்டி வரும் இளைஞர்... நிதியை அள்ளி கொடுக்கும் மக்கள்... எதற்காக தெரியுமா?

நிதி திரட்டுவதுடன் மட்டுமல்லாது, ஏமன் பிரச்னைகள் பற்றிய விழிப்புணர்வையும் அனைவரது மத்தியிலும் ஏற்படுத்துவதற்கும் அவர் முயற்சி செய்து வருகிறார். டிவிட்டரில் @ரூபிடிரம்மர் என்ற பக்கத்தை, ரூபன் லோபஸ் என்பவர் நிர்வகித்து வருகிறார். அவர்தான் ஏமன் பிரச்னைக்கு நிதி திரட்டுவதற்காக தற்போது சைக்கிள் பயணம் செய்து கொண்டுள்ளார்.

5,000 மைல்கள் சைக்கிள் ஓட்டி வரும் இளைஞர்... நிதியை அள்ளி கொடுக்கும் மக்கள்... எதற்காக தெரியுமா?

இந்த 4,000 கிலோ மீட்டர்களை கடப்பதற்கு மட்டும் அவருக்கு சுமார் 36 நாட்கள் ஆகியுள்ளது. தனது சைக்கிள் பயணம் தொடர்பான பதிவுகளையும் அவர் டிவிட்டரில் வெளியிட்டு வருகிறார். அமெரிக்காவின் கிராம பகுதிகளின் நம்ப முடியாத சில நிலப்பரப்புகளின் புகைப்படங்களை பகிர்வதன் மூலமாக, அவர் தனது பயணத்தை டிவிட்டரில் ஆவணப்படுத்தி வருகிறார்.

5,000 மைல்கள் சைக்கிள் ஓட்டி வரும் இளைஞர்... நிதியை அள்ளி கொடுக்கும் மக்கள்... எதற்காக தெரியுமா?

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள பூ பூ பாயிண்ட்டில் அவரது பயணம் தொடங்கியது. இதன் பின் ஓகியோ மாகாணாத்தில் உள்ள பீ பீ கிரீக்கில் தற்போதைக்கு அவரது பயணம் நிறைவடைந்துள்ளது. 36 நாட்களில் 9 மாகாணங்களின் வழியாக அவர் பயணம் செய்துள்ளார். 5,000 அமெரிக்க டாலர்கள் நிதி திரட்ட வேண்டும் என ரூபன் லோபஸ் இலக்கு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

5,000 மைல்கள் சைக்கிள் ஓட்டி வரும் இளைஞர்... நிதியை அள்ளி கொடுக்கும் மக்கள்... எதற்காக தெரியுமா?

ஆனால் 4,000 கிலோ மீட்டர்களை நிறைவு செய்த நிலையிலேயே அவர் அந்த இலக்கை கடந்து விட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது தற்போது வரை 7,000 டாலர்களுக்கும் மேல் நிதி திரட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இது 60 நாட்களை உள்ளடக்கிய சுமார் 5,000 மைல்கள் பயணமாகும். எனவே அடுத்த 24 நாட்களில், தற்போது உள்ள பீ பீ கிரீக்கில் இருந்து பீ பீ தீவுக்கு ரூபன் லோபஸ் செல்ல வேண்டும்.

5,000 மைல்கள் சைக்கிள் ஓட்டி வரும் இளைஞர்... நிதியை அள்ளி கொடுக்கும் மக்கள்... எதற்காக தெரியுமா?

அங்குதான் அவரது பயணம் நிறைவுக்கு வருகிறது. இதுகுறித்து ரூபன் லோபஸின் கோஃபண்ட்மீ பக்கத்தில், ''ஏமன் நிவாரணம் மற்றும் புனரமைப்பு அறக்கட்டளைக்கு ( YRRF - Yemen Relief and Reconstruction Foundation), நிதி திரட்டுவதற்காக நான் 5,000 மைல்கள் சைக்கிள் ஓட்டி வருகிறேன். 100 சதவீத நிதி நேரடியாக ஒய்ஆர்ஆர்எஃப் அமைப்பிற்கு செல்லும்'' என கூறப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
US Youngster Cycled More Than 4,000 Km In 36 Days - Here Is Why. Read in Tamil
Story first published: Tuesday, September 29, 2020, 17:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X