கைபேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுவோரில் ஆண்டிற்கு 2100 பேர் மரணம்: ஆய்வில் அதிர்ச்சி..!!

கைபேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுவோரில் ஆண்டிற்கு 2100 பேர் மரணம்: ஆய்வில் அதிர்ச்சி..!!

By Azhagar

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் வாகனம் ஓட்டும்போது கைப்பேசி பயன்படுத்துவோரில் ஆண்டுக்கு 2100 பேர் விபத்துகளில் சிக்கி உயிரழப்பதாக தெரியவந்துள்ளது.

கைப்பேசியால் அதிகரிக்கும் சாலை விபத்துகள் மற்றும் உயிர் பலி!

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற விபத்துகள் குறித்து மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் தேசியளவில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

கைப்பேசியால் அதிகரிக்கும் சாலை விபத்துகள் மற்றும் உயிர் பலி!

பல மாதங்களாக நடைபெற்ற இந்த ஆய்வில் சாலையில் நடைபெறும் விபத்துகள் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்த பின்னணியும் ஆராயப்பட்டது.

கைப்பேசியால் அதிகரிக்கும் சாலை விபத்துகள் மற்றும் உயிர் பலி!

இதில் வேகத்தடைகளில் அதிகமாக வாகனத்தை ஓட்டி செல்வது, சாலை பணிகள் நடைபெறுகிறது என்பதற்கான அறிவிப்பு பலைகள் இருந்தாலும்,

கைப்பேசியால் அதிகரிக்கும் சாலை விபத்துகள் மற்றும் உயிர் பலி!

அந்த பகுதிகளை அதிவேகத்தில் வாகனத்தை இயக்கி செல்வது மற்றும் சாலை பள்ளங்களில் சிக்குவது உள்ளிட்ட காரணங்களால் தினசரி 26 பேர் உயிரழக்கின்றனர்.

கைப்பேசியால் அதிகரிக்கும் சாலை விபத்துகள் மற்றும் உயிர் பலி!

ஆய்வின் முடிவில் இதையும் தாண்டிய பல்வேறு காரணங்களால் இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு 17 பேர் சராசரியாக சாலை பயணங்களின் போது பலியாவது தெரியவந்துள்ளது.

கைப்பேசியால் அதிகரிக்கும் சாலை விபத்துகள் மற்றும் உயிர் பலி!

இதில் அதி முக்கியமாக, சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையை கடக்க முயல்பவர்கள் கைப்பேசியில் பேசியபடி சென்றதே விபத்துகள் அதிகரிக்க காரணம் என தெரியவந்துள்ளது.

கைப்பேசியால் அதிகரிக்கும் சாலை விபத்துகள் மற்றும் உயிர் பலி!

2016-ன் சாலை விபத்துகள் குறித்து நடந்த ஆய்வின்படி சாலைகளில் கைப்பேசியில் பேசியபடி சென்றவர்கவர்களில் 2138 பேர் விபத்துகளில் சிக்கி உயிரழந்துள்ளனர்.

கைப்பேசியால் அதிகரிக்கும் சாலை விபத்துகள் மற்றும் உயிர் பலி!

இதுபோன்று கைப்பேசிகளால் ஏற்பட்ட விபத்துகளுக்கான பட்டியலில் உத்தர பிரதேசம் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. இதை தொடர்ந்து ஹரியானா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

கைப்பேசியால் அதிகரிக்கும் சாலை விபத்துகள் மற்றும் உயிர் பலி!

விபத்துகள் குறித்து வெளியிட்டப்பட்ட இந்த ஆய்வறிக்கை பற்றி பேசிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி,

கைப்பேசியால் அதிகரிக்கும் சாலை விபத்துகள் மற்றும் உயிர் பலி!

பொதுமக்கள் மத்தியில் கவனம் இல்லாமல் செயல்படும் சுபாவம் அதிகரித்து வருகிறது. வாகனங்களை ஓட்டிசெல்லும் போது கைப்பேசி பயன்படுத்துவது உயிரை பணையம் வைக்கும் செயல்.

கைப்பேசியால் அதிகரிக்கும் சாலை விபத்துகள் மற்றும் உயிர் பலி!

கூடுதலாக இந்த செயல்பாடுகளில் வாகனங்களை ஓட்டி செல்லும் போதே கைப்பேசியில் சுயமி (செல்ஃபி) எடுக்கும் மனோபாவமும் பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது.

கைப்பேசியால் அதிகரிக்கும் சாலை விபத்துகள் மற்றும் உயிர் பலி!

தொடர்ந்து அதிகரித்து வரும் இதுபோன்ற மோகத்தால் தான், சாலை விபத்துகளும் அதிகரித்து வருகிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

கைப்பேசியால் அதிகரிக்கும் சாலை விபத்துகள் மற்றும் உயிர் பலி!

சாலை விபத்துகள் பற்றி உலக சுகாதார அமைப்பு எடுத்த ஆய்வில் 4-ல் ஒரு பங்கு விபத்து கைப்பேசியில் பேசியபடி வாகனங்களை ஓட்டுவதால் தான் நடைபெறுகிறது என முன்பே கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, September 8, 2017, 11:02 [IST]
English summary
Read in Tamil: Use of Mobile Phones While Driving Claimed 2138 Lives. Click for Details...
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+